Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
சனி சுக்கிர சேர்க்கையால் மார்ச் 07 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது...
Saturn-Venus Conjunction: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும். அவ்வாறு நிகழும் கிரக சேர்க்கைகளுள் சில பல ஆண்டுகளுக்கு பின் நிகழும்.
அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசிக்கு அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 07 ஆம் தேதி நுழையவுள்ளார். இதனால கும்ப ராசியில் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது.

இந்த சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் சனி மற்றும் சுக்கிரனின் ஆசியால் நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். அதோடு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைத்து, நிதி நிலை வலுவடையவுள்ளது. இப்போது சனி சுக்கிர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகிறது என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை தேடி வரும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். திருப்தியான வாழ்க்கையை வாழ்வீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலை இக்காலத்தில் கிடைக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதோடு, நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். குடும்பத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்பார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் வேகமாக முன்னேறுவார்கள். செல்வம் பெருகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் உள்ளன. நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையே உள்ள உறவும் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும். சிலர் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறலாம். இந்த புதிய வேலையால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். தொழில் ரீதியாக, பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் நல்ல சம்பளத்துடனான நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். இக்காலத்தில் வசதியும், ஆடம்பரமும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். மொத்தத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications