Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Saturn Venus Conjunction in Aquarius After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழும். அதில் சில கிரகங்களின் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழக்கூடும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் சுமார் 30 ஆண்டுகள் கழித்து பயணித்து வருகிறார். இந்நிலையில் அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மார்ச் 07 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்கிறார். இதனால் கும்ப ராசியில் சனி சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் நிகழவிருக்கிறது.

ஜோதிடத்தின் படி, சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்களாகும். எனவே இந்த சேர்க்கையானது சற்று சிறப்பாக இருக்கும். இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலகட்டத்தில் அதிகம் கஷ்டப்படாமல் தங்கள் தொழிலில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதிலிருந்து நல்ல பணத்தை இக்காலத்தில் பெறக்கூடும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. அதிர்ஷ்ட வீட்டில் இந்த சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இக்காலத்தில் பிரகாசிக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். அதுவும் கலை, இசை, ஊடகம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் இந்த சேர்க்கை காலத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். சனியும் சுக்கிரனும் இணைவதால் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications