Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்!
சனி பகவானின் அருளால் இனிமேல் இந்த 4 ராசிக்காரர்களின் புதைந்திருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Saturn Transit 2023: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது ஏற்படும். சில சமயங்களில் கிரகங்கள் விழிப்பு நிலைக்கு வருவதுண்டு. அப்படி கிரகங்கள் விழிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கும்ப ராசியில் பயணித்து வரும் நீதிமான் சனிபகவான் வக்ர நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வந்துள்ளார். வக்ரமாக இருந்த சனி பகவான் விழித்து யோக நிலைக்கு வந்திருப்பது, பல ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

பொதுவாக விழிப்பு நிலை என்பது ஒரு கிரகம் 1 முதல் 10 டிகிரியில் ஒற்றைப்படை ராசியில் இருந்தால், அது விழிப்பு நிலை என்று அழைக்கப்படுகிறது. தற்போது சனி பகவான் விழிப்பு நிலையில் வந்திருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இருப்பினும், 4 ராசிக்காரர்கள் சனியின் இந்த நிலையால் அபரிமிதமான பண பலன்களையும், பல வெற்றிகளையும், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனி பகவான் விழிப்பு நிலையில் வந்திருப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு இனிமேல் நல்ல அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது. கர்ம ஸ்தானத்தின் அதிபதி, லாப ஸ்தானத்தில் விழிப்பு நிலையில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேறப் போகிறது.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் விரும்பிய இடமாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மிதுனம்
சனி பகவான் விழிப்பு நிலையில் இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் சனி பகவான் சக்தி வாய்ந்த மற்றும் நற்பலனை வழங்கும் வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பல விருப்பங்கள் நிறைவேறும். நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்புள்ளது. இந்த பயணம் நல்ல ஆதாயத்தைத் தரக்கூடியதாக இருக்கும். முக்கியமாக வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் விழிப்பு நிலையானது பல அற்பதமான பலன்களை வழங்கவுள்ளது. சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்களுக்கு இனிமேல் வாழ்க்கையானது மகிழ்ச்சியாகவும், செழிப்புடனும் இருக்கும்.
சொத்து மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். திடீர் பண வரவு கிடைக்கும். ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.
ரிஷபம்
சனி பகவானின் விழிப்பு நிலை ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கவுள்ளது. ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனும், சனி பகவானும் நண்பர்கள். எனவே இக்காலத்தில் சனி பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளில் வெற்றி காண்பார்கள்.
மேலும் சனி பகவான் திடீர் பண ஆதாயத்தைப் பெற வைப்பார். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் இனிமேல் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அதைப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications