Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அக்டோபர் வரை இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Saturn Nakshatra Transit On 06 April 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஆனால் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒருவரது கர்மத்திற்கான பலனை அளிக்கும் சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் 06 ஆம் தேதி, அதாவது இன்று நிகழ்ந்துள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார். இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 03 ஆம் தேதி வரை இருப்பார். பூரட்டாதி நட்சத்திரமானது குரு பகவானின் நட்சத்திரமாகும்.

சனியின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சென்றுள்ள சனி பகவானால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் அக்டோபர் வரை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை சரியாக அறிந்து கொண்டு, அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதன் விளைவாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இருப்பினும், காதல் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களில் ஏமாற்றங்களையும், விரக்தியையும் சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். மொத்ததில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் வேலை அல்லது தொழில் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். உறவுகல் மாற்றங்களைக் காணக்கூடும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இக்காலம் சாதகமாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் கவனமாக சிந்தித்து செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை சமநிலையை பராமரிக்க முடியாமல் சிரமப்படலாம். மொத்தத்தில் லாபம், இழப்பு என இரண்டையும் சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் விரைவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வீடு, நிலம் வாங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை வழங்கும். குறிப்பாக நீதிபதி, வழக்கறிஞர் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் வேலையில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழில் மற்றும் நிறுவனங்களில் முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் திருமணத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல்கள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுவதால் உங்கள் காதல் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி நட்சத்திர பெயர்ச்சியால் நிதி ரீதியாக சிறப்பான பலனைப் பெறுவார்கள். புதிய வீடு, கார் போன்றவற்றை வாங்க திட்டமிடலாம். ஆனால் உடல் சோர்வு மற்றும் மன வேதனையை அனுபவிக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனால் சனி பகவானால் உறவுகளில் மற்றும் சுற்றி இருப்பவர்களுடனான உறவு சீர்குலையும் வாய்ப்புள்ளது. வீட்டுச் சூழல் அமைதியிழந்து இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் வியாபாரத்தில் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். வணிக பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் புனித யாத்திரையை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியானது நிதி நிலை மற்றும் சேமிப்பில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையை சிறிது சீர்குலைக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியானது நிறைய செலவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இருப்பினும் சவால்களுக்கு மத்தியில் புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும் மற்றும் நல்ல வெகுமதி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியானது சற்று மோசமான பலன்களையே தரும். அதுவும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் எதிர்பார்த்த பலனைத் தராது. நிறைய செலவுகளை செய்ய நேரிடும். இருப்பினும் வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும், ஏனெனில் அவை நஷ்டத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications