சனி உருவாக்கிய கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகுது...

Saturn Made Kendra Trikona Rajyoga: சனி பகவான் என்றலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலனை தவறாமல் அளிப்பவர். இவரது கோபத்திற்கு ஆளானால் அரசனும் ஆண்டியாவான்.

அப்படிப்பட்ட சனி பகவான் நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவரது நிலை அல்லது இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Saturn Made Kendra Trikona Rajyoga: These Zodiac Signs Will Get More Benefits In Tamil

அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவானால் மிகவும் மங்களகரமான கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது ஒருவரது வாழ்க்கையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரக்கூடியது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

அதுவும் சனி பகவான் தற்போது வக்ர நிலையில் கும்ப ராசியில் வலுபெற்று பயணித்து வருகிறார். இதனால் சனியின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது அற்புதமான பலன்களை வாரி வழங்கும். ஏனெனில் இந்த யோகமானது இந்த ராசியின் 5 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவார்கள்.

புதிதாக ஏதாவது தொடங்க நினைத்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். எதிர்பாராத திடீர் பண வரவைப் பெறக்கூடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மற்றும் வருமானம் சிறப்பாக இருக்கும். சனி பகவான் 7 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதன் காரணமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது நற்பலனை வழங்கும். ஏனெனில் இந்த ராசியின் முதல் வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய ஆற்றல் நிறைந்து இருப்பார்கள். மிகவும் புத்தசாலித்தனமாக நடந்து பல வெற்றிகளைப் பெறுவார்கள்.

திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 5, 2023, 9:14 [IST]
Desktop Bottom Promotion