Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் சனியும், குருவும் வக்ரமாக இருப்பதால் அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்!
Saturn Jupiter Retrograde After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இயக்கத்தில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களுள் சில அவ்வப்போது வக்ர நிலையில் பயணிக்கும். கிரகங்கள் வக்ரமாகும் போது அது வலுவிழந்து இருக்கும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவானும், செழிப்பு மற்றும் அறிவின் காரணியான குரு பகவானும் 30 ஆண்டுகளுக்கு பின் வக்ர நிலையில் ஒன்றாக பயணிக்கின்றனர். ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்விரு கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் வக்ர நிலையால் தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குருவின் வக்ர நிலையானது அற்புதமான பலன்களை வழங்கும். ஏனெனில் சனி பகவான் முதல் வீட்டிலும், குரு பகவான் 4 ஆவது வீட்டிலும் வக்ர நிலையிலும் உள்ளனர். இதனால் இக்காலத்தில் கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பண வரவு வந்தவாறு இருக்கும்.
அதே சமயம் பணிபுரிவர்களின் செல்வாக்கு அலுவலகத்தில் அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காணக்கூடும்.
மிதுனம்
சனியும், குருவும் வக்ரமாக இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு அட்டகாசமான பலன்களை வழங்கும். அதுவும் மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனியும், 3 ஆவது வீட்டில் குருவும் வக்ர நிலையில் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை எடுத்து வெற்றி பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனியும், 7 ஆவது வீட்டில் குருவும் வக்ர நிலையில் உள்ளனர். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நோயில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வழக்கத்தை விட அதிக பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்க வாய்ப்புகள் அமையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications