Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
30 ஆண்டுகளுக்கு பின் சனி உருவாக்கிய சச ராஜயோகம்: 2025 வரை இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Saturn Made Shash Rajyog: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவற்றில் சனி மற்றும் குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இவ்விரு கிரகங்களுமே ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கின்றன.
அதில் குரு 1 ஆண்டு காலமும், சனி 2 1/2 ஆண்டுகளும் பயணிக்கின்றன. இவற்றில் தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை சனி பயணிக்கவுள்ளார். கும்ப ராசியில் சனி பயணிப்பதால், சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றாகும்.

இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் ஒருவர் சமூகத்தில் நல்ல மரியாதையையும், செல்வத்தையும் பெறுவார்கள். சொல்லப்போனால் பணக்காரராகும் வாய்ப்புள்ளது. இப்போது சனி உருவாக்கிய சச ராஜயோகத்தால் 2025 ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக அற்புதமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். உறவுகள் இனிமையாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி முயற்சித்து வருபவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லராபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். என்ன தான் ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்தாலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை மிகவும் அற்புதமாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயரவு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications