உங்க வீட்ல யாருக்காவது திருமணம் ஆகலையா? இந்த கோவிலுக்கு கூட்டிட்டு போங்க... டக்குனு கல்யாணம் முடிஞ்சிரும்...!

திருமணஞ்சேரி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். இது காவிரி ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் சிவபெருமானிடமிருந்து வந்தது. திருமணம்+சேரி என்பதை சேர்த்து திருமணஞ்சேரி என அழைக்கப்படுகிறது. சேரி என்பது கிராமம் அல்லது குக்கிராமத்தைக் குறிக்கும். இந்த இடத்தில் எம்பெருமான் சிவன் பார்வதி தேவியை மணந்ததால் இந்த கிராமம் திருமணஞ்சேரி என பெயர் பெற்றது.

rumanancheri Temple History Significance and Rituals

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் சுவாமி கோயில்

கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் மிகவும் பிரபலமான சிவாலயங்களில் ஒன்று. திருமணஞ்சேரி கிராமம் நாகைப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவில் குத்தாலம் எனும் ஊரின் அருகில் அமைந்திருக்கிறது. இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு இடையில் அமைந்திருக்கிறது. இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையம் குத்தாலம். அருகிலுள்ள ரயில் சந்திப்பு மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம்.

புராண கதைகளின் படி, இந்த புகழ்பெற்ற கோயில் திருமணத் தடைகளை முறியடித்து விரைவில் திருமணம் நடைபெற உதவுகிறது. பலர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பயனடைந்திருக்கிறார்கள். இந்த கோயிலில், வாழ்க்கை துணையை தேடுபவர்களுக்கு என ஒரு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினராக மீண்டும் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

தல வரலாறு

பூமியில் இருக்கும் மத சடங்குகளுடன் கூடிய திருமணத்தில் சிவனை மணக்க விரும்பினார் பார்வதி தேவி. ஒரு முறை சிவனும் விஷ்ணுவும் சொக்கத்தானை எனப்படும் தாயம் போன்ற விளையாட்டை விளையாடினார்கள். அதில் ​​விஷ்ணு பகவான் வெற்றி பெற்றதால், அவரின் சகோதரியான பார்வதி சத்தமாக சிரித்துவிட்டார். அதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவையை பார்த்து "அட பசுவே!" என்றார். இதனால் பார்வதி தேவி பூமியில் ஒரு பசுவாகப் பிறந்தார்.

இதனால் பசுவாகி இருந்த பார்வதி தேவிக்கு மேய்ப்பனாக தேரழுந்தூரில் அவதரித்தார். அந்த சமயத்தில் பரதமுனிக்கு குழந்தைகள் இல்லை என அவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய, பார்வதி தேவிக்கு சாபத்தை நீக்க அவருக்கு அனுமதி கிடைத்தது. எனவே திருவாவடுதுறையில் அவர் பார்வதி தேவிக்கு சாப விமோட்சனம் கொடுத்து பசுவின் வடிவத்தில் இருந்து பெண் உருவமாக மாற்றினார்.

பின் பார்வதி தேவி குத்தாலம் அல்லது திருத்துருத்தியில் பரதமுனியின் வீட்டில் வளர்ந்தாள். சிவபெருமான் முன்பு வாக்குறுதியளித்தபடி பார்வதி தேவியை மணக்க வந்தார். பரதமுனி அவரை எதிர்கோள்படியில் வரவேற்றார். திருமணத்திற்கு முன் வேள்விக்குடியில் சிவன் அனைத்து திருமண சடங்கு மற்றும் வேள்வியை செய்தார். அப்போது விஷ்ணு பார்வதியை சிவனுக்கு நீர்வார்த்து கன்யாதானம் செய்து வைத்தார். புரோகிதர் ஸ்தானத்தில் இருந்து சிவ பார்வதி திருமண வைபவத்தை பிரம்மா நடத்தி வைத்தார். பின்னர் அவர் திருமணஞ்சேரியில் பார்வதியை மணந்தார். இதனால் சிவ பெருமான் 'பசுபதி' என்ற பெயரை பெற்றார்.

திருமணஞ்சேரி கோயில் பிரார்த்தனை

திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை மட்டும் பூஜைக்காக இருக்கும் அடைப்புக்குள் அமர சொல்வார்கள். அவர்கள் உடன் வருபவர்களை அந்த அடைப்பை சுற்றி அமர சொல்வார்கள். திருமணத்திற்கு பின் மீண்டும் சடங்குகளை முடிக்க வரும் தம்பதிகள் அடைப்புக்குள் அமரலாம். அதே போல் நேரடியாக வர முடியாத ஆண்/பெண்களின் பெற்றோரும் அடைப்புக்குள் அமரலாம். ஆனால் நீங்கள் பெற்றோராக இருந்தால், அடைப்புக்குள் நுழைந்ததும் பூசாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

பூசாரிகள் முதலில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அடைப்புக்குள் இருப்பவர்களுக்கு விளக்குவார். பின் அனைவரின் மாலை, பூஜை பொருட்கள் மற்றும் அர்ச்சனை டிக்கெட்டுகளையும் முதலில் வாங்கி கொள்வார்கள். அதை எல்லாம் அவர்கள் அனைத்து மாலைகளையும் கடவுளின் காலடியில் வைத்து, அணிய ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மாலையைத் திருப்பித் தருவார்கள்.

அதை பூஜையில் இருக்கும் ஆண் அல்லது பெண் அணிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இதை செய்யும் போது மாலையை கைகளில் வைத்து கொள்ள வேண்டும். சங்கல்பம் செய்யப்பட்டு, தட்டு எடுத்துச் செல்லப்படும் போது அவரவர் அல்லது பெற்றோர்கள் பையன்/பெண்ணின் கோத்திரம்/பெயர்/நட்சத்திரத்தைச் சொல்ல வேண்டும். அர்ச்சனைக்கு பின் தேங்காய்கள் உடைக்கப்பட்டு, வழக்கம் போல் ஆரத்திக்கு பின் திருப்பி கொடுக்கப்படுகின்றன. கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதியில் இந்த சடங்குகளுக்குப் பிறகு, மீண்டும் சென்று சிவனை வணங்குங்கள். பொதுவாக இங்கு தனி அர்ச்சனை செய்யப்படுவதில்லை.


செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

- பிரார்த்தனைக்குப் பிறகு கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் (பெண்களுக்கு மஞ்சள்) ஆகியவற்றை ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள் அல்லது அவை தீரும் வரை) பூஜை செய்த ஆண்/பெண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

- எலுமிச்சையை உப்பு அல்லது சர்க்கரை சேர்க்காமல், பூஜை செய்த ஆண்/பெண் மட்டுமே பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
- மறுநாள் காலையில் குளித்த பிறகு, ஆண்/பெண் இந்த மாலையை அணிந்து பிரார்த்தனை செய்து, பின்னர் எலுமிச்சை சாற்றை சிறிது தண்ணீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

- பின் மாலையை ஒரு துணிப் பையில் (மஞ்சள் பை) வைத்து விட வேண்டும். இதை தூக்கி எறிந்து விடக் கூடாது.

- திருமணம் முடிந்து மீண்டும் துணையுடன் வரும் போது பையில் வைத்த மாலையை இங்குள்ள கோயில் தொட்டியில் வைக்க வேண்டும்.

- தேங்காய்களை மட்டும் முழு குடும்பத்தினரும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

Desktop Bottom Promotion