Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
புத்தாண்டு இரவில் Zomato டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ரூ.97 லட்சம் டிப்ஸாக கொடுத்த இந்தியர்கள்..!
புத்தாண்டு தினத்தன்று சோமேட்டா டெலிவரி பாய்ஸ்களுக்கு இந்தியர்கள் மொத்தம் ரூ.97 லட்சத்தை டிப்ஸாக வழங்கியதாக கோயல் சமீபத்திய ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இன்றைய பிஸியான கால அட்டவணையில் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, நகர்புறங்களில் வசிப்பவர்கள் வீட்டில் சமைப்பது மிகக்குறைவு. இதனால், அங்கு ஏராளமான ஹோட்டல்கள் திறக்கப்படுகின்றன. ஆன்லைனில் உணவு ஆடர் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

உணவகங்களுக்கு சென்று உணவு உண்ண அல்லது வாங்க நேரமில்லாமல் பெரும்பலான நபர்கள் இருக்கிறார்கள். மக்களின் வேலையை எளிமைப்படுத்தும் விதமாக ஸ்விக்கி(Swiggy), சுமோட்டோ(Zometo) போன்ற நிறுவனங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உணவை கொண்டு வந்து கொடுக்கும் சேவையை தொடங்கி நடத்தி வருகிறது.
சென்ற ஆண்டு மும்பையை சேர்ந்த நபர் 42.3 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆடர் செய்தது முதல் ஹைதராபாத்தில் 1,633 பிரியாணிகளை ஆடர் செய்தது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை ஸ்விக்கி நிறுவனம் பகிர்ந்திருந்தது. அதுபோல, இந்த ஆண்டும் ஸ்விக்கி, சுமோட்டோ போன்ற உணவு தளங்களில் மக்கள் உணவுகளை வாங்கும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு முடிந்து, 2024 புத்தாண்டில் நாம் அனைவரும் அடியெடுத்து வைக்கிறோம். பிரபல உணவு விநியோக தளமான Zomato இன் நிறுவனர் தீபிந்தர் கோயல், நேற்று (டிசம்பர் 31) இரவு, 2024 புத்தாண்டு தினத்தன்று டெலிவரி பார்ட்னர்களுக்கு மொத்தம் ரூ. 97 லட்சத்தை டிப்ஸாக வழங்கியதாக ட்வீட்டரில் தெரிவித்திருந்தார்.
கோயல் ட்வீட்டரில் "உன்னை நேசிக்கிறேன், இந்தியா! இன்றிரவு உங்களுக்கு சேவை செய்யும் டெலிவரி பார்ட்னர்களுக்கு இதுவரை ₹97 லட்சத்துக்கு மேல் டிப்ஸ் செய்துள்ளீர்கள்." என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புத்தாண்டு Zomato-வில் டெலிவரி பாயாக வேலை செய்யும் நபர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியான ஆண்டாக தொடங்கியிருக்கிறது.



Click it and Unblock the Notifications