Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.!
7000 கோடியை வங்கியில் வைத்திருக்கும் இந்தியாவின் பணக்கார கிராமம்... எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
ஒரு நிமிடம் கண்ணை கிராமம் என்றால் உங்கள் நினைவிற்கு முதலில் வருவது என்னவென்று சிந்தித்து பாருங்கள். மண் வீடுகள், வயல் வெளிகள், ஆடு, மாடுகள், மாட்டு வண்டி, விவசாய நிலம் போன்றவைதான் நம் கண்களுக்கு வரும். நமது திரைப்படங்களில் கூட கிராமங்கள் என்றால் மண் சாலைகளும், மின்சாரம் இல்லாத வீடுகளையும்தான் கிராமங்களாக காட்டுகின்றன.
ஆனால் உண்மையில் கிராமங்கள் இப்போது அப்படி இருப்பதில்லை, சொல்லப்போனால் நகரங்களை விட கிராமங்கள் இப்போது வேகமாக முன்னேறி வருகின்றன. இந்த பதிவில் ஆசியாவின் பணக்கார கிராமத்தைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.

பணக்கார கிராமம்
பணக்கார கிராமம் என்றால் அது சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இருக்கும் என்று நாம் நினைப்போம், ஆனால் உங்கள் யூகம் தவறு, அது நம் இந்தியாவில்தான் உள்ளது. அதுவும் டெல்லி, கர்நாடகா அல்லது பஞ்சாப் போன்ற பணக்கார மாநிலங்களில் கூட இது இல்லை, அந்த கிராமம் குஜராத்தின் பூஜ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கிராமம் விளங்குகிறது. இந்த கிராமம் எப்படி ஆசியாவின் பணக்கார கிராமமே மாறியது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
7000 கோடி வங்கி வைப்புத்தொகை உள்ள கிராமம்
மதபார் என்று அழைக்கப்படும் இந்த கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 32,000 மக்கள் தொகை கொண்ட மாதபர், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மட்டுமல்ல, பணத்திலும் வளமாக உள்ளது. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்த கிராமத்தில் பல்வேறு வங்கிகளில் ரூ. 7,000 கோடி வைப்புத்தொகை உள்ளது.
மதபார் கிராமம் சுமார் 20,000 வீடுகளைக் கொண்டுள்ளது, மேலும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை மேலும் ஸ்பெஷலாக்குவது இங்குள்ள வங்கிகளின் எண்ணிக்கை. ஆம், SBI, ICICI, HDFC, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி, யூனியன் வங்கி போன்ற இந்தியாவின் அனைத்து முன்னணி வங்கியின் கிளைகளையும் இங்கு காணலாம். மொத்தத்தில், இந்த கிராமத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல அரசு மற்றும் தனியார் வங்கிகள், மதபாரில் கிளைகளைத் திறக்க ஆர்வமாக உள்ளன.
மதபார் ஆசியாவின் பணக்கார கிராமமாக எப்படி மாறியது?
மதபார் ஆசியாவின் பணக்கார கிராமமாக உள்ளது, இதற்கு ஒரு பெரிய காரணம் அதன் வெளிநாட்டில் வசிக்கும் மக்கள். கிராமத்தின் மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் NRI-களாக உள்ளார்கள். இந்த குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்புகின்றன. பெரும்பாலான பணம் மதபாரில் உள்ள உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு செல்கிறது.
கிராமத்தில் உள்ள 20,000 வீடுகளில், சுமார் 1,200 குடும்பங்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றன. அவர்களில் பலர் ஆப்பிரிக்க நாடுகளில் குடியேறியுள்ளனர், அங்கு அவர்களுக்கு வலுவான வணிகங்கள் உள்ளன, குறிப்பாக கட்டுமானத் துறையில். மேலும் சிலர் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வசிக்கின்றனர்.
அவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் தாய்நாட்டை மறக்கவில்லை. இப்போதும் அவர்கள் கிராமத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள், மேலும் தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் அதை மேம்படுத்த முயற்சிக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரான பருல்பென் காரா, இந்த NRI-க்கள் தங்கள் சேமிப்பை வெளிநாட்டு வங்கிகளுக்குப் பதிலாக மதபாரின் வங்கிகளில் வைக்க விரும்புகிறார்கள் என்று கூறினார். அவர்கள் தங்கள் கிராமத்தை அந்த அளவிற்கு நம்புகிறார்கள் மற்றும் மதிக்கிறார்கள்.
கிராமத்தில் உள்ள வசதிகள்
கிராமத்தில் உள்ள ஒரு தேசிய வங்கிக் கிளையின் மேலாளர், NRI-களின் இந்த செல்வம் அனைத்தும் மதபாரை பணக்கார கிராமமாக மாற்றியதாகக் கூறுகிறார். கிராமத்தில் சுத்தமான தண்ணீர், சரியான சாலைகள் மற்றும் சிறந்த சுகாதார வசதிகள் உள்ளன என்று அவர் பகிர்ந்து கொண்டார். மதபாரில் பல பங்களாக்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், கோவில்கள் மற்றும் ஏரிகள் கூட உள்ளன. இங்குள்ள வாழ்க்கை முறை மற்றும் வளர்ச்சி இந்தியாவின் பல சிறிய நகரங்களை விட சிறப்பாக உள்ளது.



Click it and Unblock the Notifications
