Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குடியரசு தினத்துக்கு என்ன கோலம் போடுறதுன்னு யோசிக்குறீங்களா? இந்த டிசைன்களை பாருங்க...
Republic Day 2024 Rangoli Designs: நம் இந்தியாவில் பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, குடியரசு தினம், சுதந்திர தினம் போன்றவைகளும் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. எதுவாயினும், அதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொருவரும் முதலில் செய்யும் ஒரு விஷயம் என்றால், அது வீட்டின் வாசலில் ஒரு அழகான கோலத்தை போடுவதாகவே இருக்கும்.
அந்த வகையில் இந்திய குடியரசு தினமானது ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நாள் நாடு முழுவதும் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு பலரும் தங்களின் வீட்டு வாசலில் பல அழகான மற்றும் கண்ணைக் கவரும் வண்ணமயமான ரங்கோலி கோலங்களைப் போட்டு, தங்களின் வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு தெரிவிப்பார்கள். இந்த ஆண்டு குடியரசு தினத்திற்கு உங்கள் வீட்டு வாசலில் அழகான மூவர்ண ரங்கோலி கோலம் போட நினைத்தால், ஒருசில குடியரசு தின சிறப்பு டிசைன்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்ததை உங்கள் வீட்டு வாசலில் போடுங்கள்.
சிம்பிளான ரங்கோலி
குடியரசு தினத்தன்று உங்கள் வீட்டு வாசலில் ஒரு சிம்பிளான, அதே சமயம் ஒரு க்யூட்டான ரங்கோலியை போட நினைத்தால், இந்த அழகான ரங்கோலியை முயற்சிக்கலாம். இந்த ரங்கோலியில் மூவர்ண கொடியை ஒரு பூ வடிவில் போடுவதால், சற்று வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.
மூவர்ண ரங்கோலி
குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் வீட்டின் வாசலை அழகாக வெளிக்காட்ட நினைத்தால், இந்த மூவர்ண ரங்கோலியைப் போடலாம். அதுவும் இதில் கொடியை வரைந்து, அதன் பக்கங்களில் பூக்களை அழகாக வரைந்துவிடுங்கள்.
குடியரசு தின ரங்கோலி
குடியரசு தினத்தன்று உங்கள் வீட்டிற்கு வருவோருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் ரங்கோலி போட நினைத்தால், இந்த டிசைன் ரங்கோலியை வீட்டு வாசலில் போடலாம். இந்த ரங்கோலியில் காவி, வெள்ளை, பச்சை மற்றும நீலம் ஆகிய நிறங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரங்கோலி பார்க்க கஷ்டமாக இருக்கலாம். உண்மையில் இது மிகவும் ஈஸி. ட்ரை செய்து பாருங்கள்.
கிரியேட்டிவ் ரங்கோலி
நீங்கள் சற்று கிரியேட்டிவ்வாக ஒரு குடியரசு தின சிறப்பு ரங்கோலியை போட விரும்பினால், இந்த டிசைன் ரங்கோலியை உங்கள் வீட்டு வாசலில் போடலாம். இது நிச்சயம் உங்கள் வீட்டு வாசவின் அழகை மேம்படுத்தும்.
வட்ட வடிவ ரங்கோலி
உங்கள் வீட்டின் வாசல் மிகப்பெரியது என்றால், இந்த வட்ட வடிவ ரங்கோலியை போடலாம். இந்த டிசைனில் மூவர்ண கொடியின் மேல், அனைத்து மதங்களின் சின்னங்களை உருவாக்கி ஒரு நல்லெண்ண செய்தியை வெளிப்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications




