Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வேலை தேடி ரொம்ப சலிச்சு போய்ட்டீங்களா? இந்த கடவுளை இப்படி கும்பிடுங்க... சீக்கிரம் வேலை கிடைக்கும்...!
இப்போதைய அவசரமான போட்டி நிறைந்த உலகில் வேலை என்பது அடிப்படை வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். வேலை இல்லாதவர்கள் இந்த சமூகத்தில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால்தான் பலரும் பிடித்த வேலையை விட கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்கிறார்கள்.
வேலை தேடுவது என்பது அதிக மனஅழுத்தம் நிறைந்த ஒரு நிலையாகும். வேலையைப் பெறுவது ஒரு சிக்கலான செயல், ஆனால் உங்கள் கனவு வேலையைப் பெறுவது இன்னும் சிக்கலானது. நமது திறமை மற்றும் முயற்சியுடன் கடவுளின் அருளும், அதிர்ஷ்டமும் இணையும் போது நினைத்த வேலையை அடைவது சுலபமாகிறது.

சீக்கிரம் வேலை கிடைப்பதற்கென சில வழிபாடுகளும், சடங்குகளும் நமது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் தங்களுக்கு விரைவில் வேலை கிடைக்க என்னென்ன செய்ய வேண்டுமென்று புராணங்கள் கூறுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்சுமி தேவியை வணங்க வேண்டும்
இந்து மத நம்பிக்கைகளின் படி, லட்சுமி தேவி செல்வத்தையும், செழிப்பையும் வழங்குபவராக இருக்கிறார். ஏனென்றால், அவர் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஆட்சி செய்கிறார். உடனடியாக வேலை கிடைப்பதற்கான சில தீர்வுகள்:
* நீங்கள் எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கைகளைப் பார்க்க வேண்டும். லக்ஷ்மி தேவி உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஆசீர்வதித்து, முழுவதும் உங்களை வழிநடத்துவார்.
* லட்சுமி தேவி ஒருபோதும் சுத்தமில்லாத வீட்டிற்குள் நுழைவதில்லை என்பதால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்.
வாஸ்து முக்கியம்
நீங்கள் விரும்பும் நல்ல வேலைகளைப் பெற உங்கள் வீட்டின் வாஸ்து சரியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். வடகிழக்கு மற்றும் வடக்கு திசை அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. எனவே நீங்கள் படிக்குமிடம் அல்லது படிக்கும் அறையை இந்த திசையில் வைப்பது நல்ல பலன்களைப் அளிக்கும் மேலும் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
சூரிய பகவானை வழிபட வேண்டும்
சூரிய பகவான் குழப்பங்களுக்கு மத்தியில் கூட வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவுகிறார். ஆனால் அவரை பிரியப்படுத்துவது மிகவும் கடினம், ஆனால் விரைவில் வேலை கிடைக்க வேண்டுமென்றால், சூரிய பகவானை வழிபட வேண்டியது அவசியமாகும். தினமும் காலையில் சூரிய பகவானை தண்ணீர் வைத்து வழிபட்டு அவரின் ஆசீர்வாதம் பெறுங்கள். கடைசியாக, "ஓம் ஹ்ரீம் சூர்யாயே நமஹ" என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.
சனிபகவானை வழிபட வேண்டும்
சனிபகவான் பொதுவாக கோபம் மற்றும் ரௌத்திரத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உங்கள் முயற்சிகளில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருந்தால், அவர் உங்களுக்கு இரக்கமுள்ளவராகவும் அதிர்ஷ்டமாகன கடவுளாகவும் மாற முடியும். எனவே நீங்கள் உடனடியாக வேலை கிடைக்க பரிகாரம் தேடுகிறீர்களானால், சனிக்கிழமை சில செயல்களைச் செய்யுங்கள். சனிபகவானின் திருவுருவச் சிலைக்கு எண்ணெய் சமர்பித்து வழிபடுவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். மேலும் காகங்களுக்கு உணவு வையுங்கள். இது சனி பகவானை திருப்திப்படுத்தி, அவர் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குவார்.
மந்திரங்கள்
மந்திரங்களை உச்சரிப்பது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. ஆனால் சரஸ்வதி தேவியின் மந்திரங்களை உச்சரிப்பது அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற உதவும். அவர் பேச்சு, அறிவு, கற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வம். எனவே நல்ல வேலையைப் பெறுவதற்கான சிறந்த ஜோதிடக் குறிப்புகளில் ஒன்று, கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரிப்பதாகும்.
"கரகே வஸதே லக்ஷ்மி கர மத்யே சரஸ்வதி
கரமூலேது கோவிந்த ப்ரபதே கரே தர்ஷ்ணம்"



Click it and Unblock the Notifications
