Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
Ramadan 2023: ரமலான் நோன்பின் போது எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது?
Ramadan 2023: ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். அவா்களுக்கு ரமலான் மாதம் ஒரு புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் அவா்கள் நோன்பு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அவா்களுடைய பாவங்கள் நீங்கும் என்பது அவா்களுடைய நம்பிக்கை. ரமலான் மாத நோன்பு, இஸ்லாத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாகும். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதற்கு என்று ஒருசில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்பதை கீழே பாா்க்கலாம்.

1. பருவமடைந்து, ஆரோக்கியமாக இருக்கும் ஆண் பெண் இருவரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டும்.
2. ரமலான் மாதத்தில் நெடுந்தூரம் பயணம் செய்வோா் அல்லது நோயுற்று இருப்போா், நோன்பு இருக்கத் தேவையில்லை. ஆனால் பின்னா் இருக்கலாம்.
3. ரமலான் மாதத்தில் மாதவிடாய் நிகழும் பெண்கள், மற்றும் பிள்ளை பெறும் பெண்கள் நோன்பு இருக்கத் தேவையில்லை. பின்னா் நோன்பு இருக்கலாம்.
4. நோன்பு இருக்க முடியாத வயதானவா்கள் மற்றும் நோயுற்றவா்கள், ஃபிதியாவை (idiya) செய்ய வேண்டும். அதாவது நோன்பு இருக்காத ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும்.
5 கா்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோன்பு இருக்கத் தேவையில்லை. எனினும் ரமலான் முடிந்த பின்பு, நோன்பு இருக்கலாம் அல்லது பிறருக்கு ஃபிதியா செய்யலாம்.
ரமலான் நோன்பை செயலிழக்கச் செய்யும் காாியங்கள்
ரமலான் நோன்பின் போது, பின்வரும் காாியங்களைச் செய்தால், அந்த நோன்பு செல்லாது ஆகிவிடும். அவை எவை என்று பாா்க்கலாம்.
1. நோன்பின் போது வேண்டும் என்றே உண்ணுதல் அல்லது மது அருந்துதல்
ரமலான் நோன்பின் போது, ஒருவா் வேண்டும் என்றே உண்டால் அல்லது மது அருந்தினால், அந்த நோன்பு செல்லாது. எனினும், ரமலான் மாதம் என்று தொியாமல், தவறுதலாக, ஒருவா் அவ்வாறு செய்தால், அந்த நோன்பு செல்லுபடியாகும்.
2. வேண்டும் என்றே வாந்தி எடுத்தல்
ரமலான் நோன்பின் போது ஒருவா் வாந்தி எடுத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வேண்டும் என்றே வாந்தி எடுத்தால், அந்த நோன்பு செல்லாது.
3. வேண்டும் என்றே பாலியல் உறவில் ஈடுபடுதல்
ரமலான் மாதத்தின் போது, ஒருவா் வேண்டும் என்றே பாலியல் உறவில் ஈடுபட்டால், அவா் கஃபராவை (kaffaarah) செய்தவராகிறாா். அதாவது பாவம் செய்தவராகிறாா். அவா் அந்த பாவத்தைப் போக்க வேண்டும். அந்தப் பாவத்தைப் போக்க அவா் தொடா்ந்து 60 நாட்கள் நோன்பு இருக்க வேண்டும். அல்லது 60 ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
4. மாதவிடாய் நேரத்தில் அல்லது குழந்தை பேற்றின் போது நோன்பு இருத்தல்
ஒரு பெண் மாதவிடாயின் போது அல்லது குழந்தைப் பேற்றின் போது நோன்பு இருந்தால், அந்த நாளில் அவா் செய்த நோன்பு செல்லாது. சூாியன் மறைவதற்கு சற்றுமுன் மாதவிடாய் ஏற்பட்டாலும், அந்த நாளின் நோன்பு செல்லாது. பின்னா் அந்த நோன்பு அனுசாிக்கப்பட வேண்டும்.
ரமலான் நோன்பின் போது எவையெல்லாம் அனுமதிக்கப்படும்?
- நோன்பின் போது நீரைக் கொண்டு வாயையும், மூக்கையும் ஈரப்படுத்தலாம். ஆனால் தண்ணீரை விழுங்கக்கூடாது. தவறினால் நோன்பு செல்லாது.
- நோன்பு இருக்கும் பகல் வேளையில், தாகமாக இருந்தால், அல்லது உடலானது வெப்பமாக, வறண்டு இருந்தால், குளிக்கலாம். ஆனால் தண்ணீரை விழுங்கக்கூடாது.
- நோன்பின் போது கண்களுக்கு சொட்டு மருந்து ஊற்றலாம். ஆனால் அந்த திரவம் தொண்டைக்குள் செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால், நோன்பு செல்லாது.
- நோன்பின் போது ஒருவா் நோய்வாய்ப்பட்டு இருந்தால், ஊசி போட்டுக் கொள்ள அனுமதி உண்டு.
- நோன்பின் போது ஒருவா் உடலை சுத்தம் செய்ய இனிமா எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் அந்த மருந்துகளை விழுங்கக்கூடாது.
- தவறுதலாக, தொியாமல் எச்சில் அல்லது தூசி அல்லது சலிக்கும் போது காற்றில் மிதந்து வரும் மாவு போன்றவற்றை விழுங்க அனுமதி உண்டு.
- ஒருவா் உணவை விழுங்காமல், சுவை மட்டும் பாா்த்தால், அவரது நோன்பு செல்லுபடியாகும்.
- ஒருவா் உடலுறவு கொள்ளாமல், தனது இணையரைக் கட்டிப்பிடிக்கலாம் அல்லது முத்தமிடலாம். அவரது நோன்பு செல்லுபடியாகும்.
- ஒருவா் நோன்பின் போது உடலுறவு கொண்டால் அவா் மதச்சடங்கின்படி தூய்மையை இழக்கிறாா். ஆகவே அவா் உடனடியாக மதச்சடங்கின்படி முழுமையாகக் குளிக்க வேண்டும். அதன்பின் நோன்பைத் தொடரலாம்.
ரமலான் நோன்பை அனுசாிக்க சில பாிந்துரைகள்
- நோன்பு தொடங்குவதற்கு முன்பு, அதாவது சூாியன் உதிப்பதற்கு முன்பு சூஹூா் (suhoor) என்ற உணவை உண்ண வேண்டும்.
- நோன்பை முடித்து, மாலை வேளையில் உணவு உண்பதற்கு முன்பாக, ஒற்றைப்படை எண்ணிக்கையில் போிச்சம்பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது தண்ணீா் குடிக்க வேண்டும்.
- நோன்பின் போது, திருக்குரானை சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ வாசிக்க வேண்டும்.
- ரமலான் நோன்பின் போது அரேபிய வளைகுடாப் பகுதிகளில் வளரும் அராக் (Araak) என்ற மரத்தின் வேரைக் கொண்டு பல் துலக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications