Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி வீட்டு திருமணத்தில் ஜாலியாக டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்..!(வீடியோ)
Anant Ambani-Radhika Merchant Wedding: மும்பையில் நேற்று (ஜூலை 12) நடைபெற்ற முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் மும்பையில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது..
இந்த திருமணத்தில் பங்கேற்க உலகில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் என இந்திய முழுவதும் உள்ள செலிபிரிட்டீஸ் குவிந்துள்ளனர்...

இந்நிலையில் திருமணக் கொண்டாட்டம் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்தே உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடைபெற்று வருகின்றது. மகாராஸ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறயுள்ளது. இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீத்தா அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த திருமண கொண்டாட்டத்தின் முக்கிய திருமண சடங்கான (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதியான இன்று சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதியான நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து இந்தி பாடல் ஒன்றுக்கு செம்மையா கலக்கலான டான்ஸ் ஆடினார். ரஜினிகாந்த்தை இந்த மாதிரியான தருணத்தில் யாரும் பார்த்தது கிடையாது என்பதால் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அவருடன் சேர்ந்து அனில் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரும் நடனமாடினர்.. அந்த வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
இந்த திருமணத்திற்கு ரஜினி தனது குடும்பத்தினருடன் சென்று மணமக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications

