ராகு கேது பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..

Rahu Ketu Transit 2023: வேத ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களின் ராசி மாற்றங்களும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுமே நிழல் கிரகங்களாகும்.

இவ்விரு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும். நிழல் கிரகங்கள் என்பதால் இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த ராசி எதுவம் இல்லை. மேலும் இந்த இரண்டு கிரகங்களும் எந்த வீட்டில் உள்ளதோ, அதைப் பொறுத்து ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Rahu Ketu Transit 2023: Effects On 12 Zodiac Signs In Tamil

இதுவரை ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் பயணித்து வந்தனர். இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி, அதாவது இன்று ராகு குரு பகவானின் மீன ராசிக்கும், கேது புதனின் கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை காணக்கூடும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டவசமாகவும் இருக்கலாம். இப்போது 2023 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செல்லும் ராகுவால், இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். இருப்பினும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை காண்பீர்கள்.

அதே சமயம் கேது 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறையும். திருமண வாழ்க்கையில் இருந்த அழுத்தம் குறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் வந்தாலும், உடனே சரியாகிவிடும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். எதிரிகளை திறம்பட எதிர்த்து வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் உங்களின் நிலை நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளை எழுதுபவர்கள் வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்களின் இலக்குகளை நிறைவேற்ற இக்காலத்தில் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

அதே சமயம் கேது 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதலில் பிரச்சனைகளை சந்திப்பதோடு, மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். உறவுகளில் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். சில சமயங்களில் உறவுகளில் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் இடமாற்றத்தால் நல்ல பலன்களைப் பெறுகூர்கள். குழந்தை தொடர்பான கவலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சில மாற்றங்களை சந்திக்கலாம். அலுவலகத்தில் விடாமுயற்சியால் வலுவான நிலையை உருவாக்கி, பாராட்டுக்களையும் பெறுவீர்கள். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். தொழிலில் அதிக கவனம் செலுத்துவதால், திருமண வாழ்க்கையில் சில சிரமங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

அதே சமயம் கேது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் குடும்ப வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தாயின் ஆரோக்கியம் மோசமடையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அல்லது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தை விட்டு விலகி வேறு எங்காவது சென்று சிறிது காலம் வாழ வாய்ப்பு உள்ளது.

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏற்கனவே வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டு வந்தால், அதில் வெற்றி கிடைக்கும். தந்தையுடனான உங்கள் உறவு பாதிக்கப்படலாம் மற்றும் அவரது உடல்நிலை மோசமடையக்கூடும்.

அதே சமயம் 3 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு செழிப்பாக இருக்கும். மன வலிமையம், தைரியமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் எடுக்கும் ரிஸ்க்குகள் நல்ல பலனைத் தரும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் தோல்விகளை சந்திப்பார்கள். உங்களின் நிதி நிலை வலுவடையும். விளையாட்டு வீரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் நன்மை பெறலாம்.

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியம் மற்றும் வேலைகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம். கடன் வாங்கவோ, வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ வேண்டாம். முக்கியமாக வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதால் இருந்தால், ஒரு முறைக்கு 100 முறை யோசித்து பின் முதலீடு செய்யுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால், அப்பணம் திரும்ப கிடைக்காது.

அதே சமயம் கேது 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்கள் பேச்சில் மாற்றங்கள் நிகழும். பேச்சில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது சொல்வதற்கு முன் இருமுறை யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே பேசுவீர்கள். நீங்கள் சொல்வதை யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.

உணவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். நிதி நிலைமை சாதகமாக இருக்காது. பணத்தை சேமிப்பதில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் நிதி நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். உடன்பிறந்தவர்களின் வழக்கமான ஒத்துழைப்புடன் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மத நம்பிக்கைகளை கடைபிடிப்பதை விட, உங்கள் சிந்தனையை வேறுபடுத்திக் கொள்ளத் தொடங்குவீர்கள்.

அதே சமயம் முதல் வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று மேம்படும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்வார்கள். இந்நிலையில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதல் நன்றாக இருக்கும். உங்களின் எந்த ஒரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

அதே சமயம் 12 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத விதமாக ஏற்படும் செலவுகள் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நிதி நிலைமையில் சிறிது சிரமத்தை சந்திக்க நேரிடும். உடல்நலம் தொடர்பான நோய்கள் வராமல் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், நல்ல வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறன் கூர்மையாக இருக்கும். கெட்ட சகவாசத்தால் தகாத முறையில் செயல்படலாம். காதல் உறவுகள் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு வாழ்க்கையில் சில சிரமங்கள் மற்றும் பிரச்சனைகள் இருந்தாலும், அவர்கள் நன்கு படிப்பார்கள்.

அதே சமயம் 11 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். நிதி நிலை வலுபெறும். நிதி ஆதாயங்களுக்கான செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்த நேரம் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுவரும். முக்கியமாக கேதுவின் நிலையால் பணப் பற்றாக்குறை எதுவும் இருக்காது.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் சந்திக்கலாம். இருப்பினும் பிற மகிழ்ச்சிகளையும் வாழ்க்கையில் அனுபவிப்பீர்கள்.

அதே சமயம் கேது 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். வேலையில் உங்கள் கவனம் குறையும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காது. வேலையில் ஆர்வத்தை இழக்கத் தொடங்குவீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது.

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். உங்களின் திறமை வளரும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வேலையில் உங்களின் நிலை மேம்படும்.

அதே சமயம் கேது 9 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் முக்கியமானதாக இருக்கும். தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்கள் வாழ்க்கையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். தந்தையுடனான உறவு பாதிக்கப்படலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள், உங்கள் தைரியமும் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் உங்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும். நிதி ரீதியாக எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் மற்றும் மோதல்களை சந்திக்கக்கூடும். ஆனால் பொறுமையாக இருந்தால், அனைத்தையும் வெல்லலாம்.

அதே சமயம் கேது 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. வாழ்க்கைத் துணையிடம் பிரிவை சந்திக்க நேரிடும். பிரச்சனைகளை சந்தித்தால், அதை தீர்க்க தாமதிக்காமல், உடனே முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாமியார்களுடனான உங்கள் உறவு பாதிக்கப்படலாம். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொந்தமாக எந்த முடிவுகளையும் எடுக்க தொடங்குவீர்கள். அந்த முடிவுகள் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். ராகுவின் அருளால் அனைத்து விதமான நன்மைகளையும் பெறுவீர்கள்.

அதே சமயம் கேது 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களின் பிரச்சனைகள் குறையும். வாழ்க்கைத் துணையின் நடத்தை வித்தியாசமாக இருக்கும். உங்கள் தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். வியாபாரத்தில் உயர்வைக் காண்பீர்கள். ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, October 30, 2023, 11:28 [IST]
Desktop Bottom Promotion