Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க
இந்த 5 ராசிக்காரங்க கோபத்தால் அவங்க காதலையே அழிக்கும் முட்டாளாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?
உணர்ச்சிகளை திறம்பட கட்டுப்படுத்துபவர்களே வாழ்க்கையில் வெற்றியையும்,மகிழ்ச்சியையும் நோக்கி வேகமாக செல்கிறார்கள்.
உணர்ச்சிகளை திறம்பட கட்டுப்படுத்துபவர்களே வாழ்க்கையில் வெற்றியையும்,மகிழ்ச்சியையும் நோக்கி வேகமாக செல்கிறார்கள். ஆனால் சிலர் தங்கள் உணர்ச்சிகளைக் கையாள்வதில் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொள்கின்றனர், குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

விரக்தியும் கோபமும் ஒருவரை அறிவுக்குருடராக்குவதுடன் அது அவர்களின் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் பேரழிவு தரும் முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். கோபம் உறவுகளையும் திருமணங்களையும் அதிகம் பாதிக்கிறது, ஏனெனில் ஒருவர் தனது கோபத்தை அடக்க முடியாத போது மிகவும் புண்படுத்தும் விஷயங்களைச் சொல்கிறார்கள் மற்றும் செய்கிறார்கள். கோபப் பிரச்சினைகளால் உறவுகளை அழித்துக் கொள்ளும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
அவர்கள் மிகவும் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும் மற்றும் பொறுப்பற்றவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் மிக விரைவாக கோபமடைகிறார்கள், இது அவர்களின் உறவுகளை பெரிய அளவில் பாதிக்கிறது. அவர்கள் கோபப்படும்போது, அவர்கள் எந்த காரணத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கோபத்தால் விரைவில் குருடர்களாகிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள் மற்றும் எளிதில் வெடித்துச் சிதறக்கூடியவர்கள். அவர்கள் எளிதில் எரிச்சலடைகிறார்கள், மேலும் தங்கள் கோபத்தை அவர்கள் நெருங்கிய நபர்களிடம்
மூர்க்கத்தனமாக வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் துணை தங்களைப் புரிந்துகொள்வார்கள் என்றும், இறுதியில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதற்காக அவர்களை மன்னிப்பார்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான நேரங்களில் அப்படி இருக்காது என்பதே உண்மை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு இரக்கமுள்ளவர்களாகவும், மென்மையான இதயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கோபப்படும் அவர்களால் அமைதியாக இருக்க முடியாது மற்றும் அவர்கள் எந்த நியாயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வாக்குவாதத்தில் எப்போதும் தங்கள் கை ஓங்கும் வரை பின்வாங்க மாட்டார்கள், எந்த வாக்குவாதத்தையும் தங்கள் கூச்சலால் வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்கள் இவர்கள்.

கன்னி
அவர்கள் எந்தவொரு வேலையையும் மிகவும் பர்பெக்ட்டாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். மக்கள் அதை எவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறார்கள் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை, ஆனால் அவர்கள் அதைச் செய்ய வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது அடிக்கடி மிகவும் கோபப்படுவார்கள். அவர்கள் தங்கள் கோபத்தை இழந்து, உண்மையில் துன்புறுத்தும் விஷயங்களைச் சொல்லி தங்கள் துணையை காயப்படுத்துகிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் விரும்பியது கிடைக்காத போது விரக்திக்கும், கோபத்திற்கும் ஆளாகிறார்கள். விரக்தியால் ஏற்படும் கோபம் எப்போதும் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். அவர்களின் கோபம் அவர்களின் அறிவை மழுங்கடிக்கிறது மற்றும் அவர்கள் தங்கள் துணையிடம் புண்படுத்தும் விஷயங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தங்கள் உறவை அழிக்கவும் துணிகிறார்கள்.



Click it and Unblock the Notifications
