Latest Updates
-
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
கடக ராசிக்காரங்ககிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா?
வாழ்க்கையில் அனைத்தையும் நமது தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, மற்றவர்களின் தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது, ஆனால் அந்த தவறிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கையில் அனைத்தையும் நமது தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, மற்றவர்களின் தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நாமாக அனுபவித்துக் கற்றுக்கொள்ளும் பாடம் போல சிறந்தது ஒன்றுமில்லை.

நாம் வளரும்போது, இந்த வழியில்தான் பாடங்களை கற்றுக்கொள்கிறோம். நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் அனைத்து பாடங்களும் நாம் செய்த ஏதாவது ஒரு தவறில் இருந்துதான் கற்றுக்கொள்கிறோம். இவ்வாறு கடினமான முறையில் கற்றுக்கொள்பவர்கள் வாழ்க்கையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த குணம் அவர்கள் பிறந்த ராசியின் மூலம் கூட வரலாம். எந்தெந்த ராசிக்காரர்கள் கஷ்டத்திற்கு பிறகு பாடம் கற்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எதையாவது நம்பினால், அவர்களின் எண்ணத்தை மாற்றுவது மிகவும் கடினம், பேசுவது மூலம் அவர்களின் எண்ணத்தை மாற்றுவது என்பது முடியாத காரியமாகும். ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் தாங்கள் சரியானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இவர்களை விட மற்றவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதை இவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மீண்டும் மீண்டும் ஒரு வேலையை செய்து அதில் இருந்து கிடைக்கும் அனுபவத்தில் இருந்துதான் கற்றுக்கொள்வார்கள். அது செயலாக இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி மீண்டும் மீண்டும் செய்வார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு ஒருபோதும் வர இயலாது. ஒரு நிமிஷம் இவர்கள் ஒரு விஷயத்தை விரும்புவார்கள், அடுத்த நிமிடமே தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் தங்களுக்கு சரியான விஷயம் என்னவென்று கண்டுபிடிக்கும் முன் பல தவறுகளையும், சோதனைகளையும் செய்வார்கள். அதிர்ஷ்டவசமாக இவர்கள் மிகவும் நெகிழ்வானவர்கள் அதேசமயம் தங்கள் தவறை சரிசெய்யக்கூடியவர்கள், எனவே தொடர்ந்து கற்றுக்கொள்வதில் இருந்து இவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். ஒரு முயற்சி தோற்றால் அடுத்த முயற்சியை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

மீனம்
இதயம் மற்றும் உறவுகள் என்று வரும்போது மீன ராசிக்காரர்கள் கண்டிப்பாக அனைத்து விஷயங்களையும் கடினமான முறையிலேயே கற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் எளிதில் நம்பிவிடுவார்கள், அனைவருக்கும் இரண்டாவது வாய்ப்பை தர ஒருபோதும் தயங்கமாட்டார்கள். அதனால் இவர்கள் அடிக்கடி காயப்பட்ட நேரிடும். இவர்கள் எப்பொழுதும் ஒருவரின் குணத்தைப் பற்றி மிகவும் உயர்வாக நினைப்பார்கள் இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளாத போது இவர்களின் மனம் மிகவும் காயப்படும்.

கடகம்
இவர்கள் அனைத்தும் தங்களுக்கு வித்தியாசமாக நடப்பதாக உணர்வார்கள். இவ்வாறு இருப்பது மற்றவர்கள் அனுபவிக்கும் வலியையும், துன்பத்தையும் நாம் அனுபவிக்காமல் இருக்க உதவும் என்று நினைப்பார்கள். இந்த தவறான பாதுகாப்பு உணர்வின் காரணமாகவே அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவரை காயப்படுத்தி விட்டு " சாரி " என்ற ஒரு வார்த்தைக் கூறுவது அவர்களின் காயத்தை சரிபண்ணாது என்று இவர்கள் உணர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். உறவுகளின் முக்கியத்துவத்தை சிலரை இறந்த பிறகுதான் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அதிக மனக்கிளர்ச்சி வாய்ந்தவர்கள் அதனால் எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன் இவர்கள் யோசிக்க மாட்டார்கள். இதில் தவறுகளும் அடங்கும். மேஷ ராசிக்காரர்கள் சிலசமயம் கற்றுக் கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளும்போது அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இவர்கள் போர்குணம் வாய்ந்தவர்கள், அதனால் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்ட பின்னர் அதனை தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு உள்ளார்ந்த ஒரு ஆணவம் இருக்கும். எனவே அவர்கள் ஒருபோதும் மற்றவர்களின் அறிவுரையை கேட்கமாட்டார்கள். அவர்களாகவே தங்களுக்கான பாடத்தை கற்றுக்கொள்வார்கள், சிலசமயம் இவர்கள் உடனடியாக பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள், ஆனால் சிலசமயம் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துதான் பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் கடினமான முயற்சிக்கு பிறகு எதையாவது கற்றுக்கொள்ளும் போது அதனை தங்கள் இலக்குகளை நோக்கி எவ்வாறு நகர்த்த வேண்டும் என்று இவர்கள் அறிவார்கள்.



Click it and Unblock the Notifications