Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த ராசிகாரங்களுக்கு பொய் சொல்லவே வராதாம்... யார் அந்த அரிச்சந்திர ராசிங்க தெரியுமா?
சிலருக்கு பொய் இயற்கையாகவே இயல்பாக வரும், அதேசமயம் சிலருக்கு எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் பொய் ஒழுங்காக கூறவராது. இப்படிப்பட்டவர்கள் பொய்க் கூறுவதை எளிதில் கண்டறிந்து விடலாம்.
மனிதனாக பிறந்த அனைவருமே பொய் கூறத்தான் செய்வார்கள். பொய் கூறாமல் வாழ்வது என்பது மிகவும் கடினமானதாகும். சிலசமயம் நம்முடைய சுயநலத்திற்காக இல்லை என்றாலும் பிறரின் நல்லதுக்காக பொய் சொல்லும் சூழலுக்கு நாம் தள்ளப்படுவோம். உண்மையில் பிறர் நம்பும்படி பொய் கூறுவது என்பது ஒரு தனித்திறமையாகும்.

சிலருக்கு பொய் இயற்கையாகவே இயல்பாக வரும், அதேசமயம் சிலருக்கு எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் பொய் ஒழுங்காக கூறவராது. இப்படிப்பட்டவர்கள் பொய்க் கூறுவதை எளிதில் கண்டறிந்து விடலாம். இவர்கள் இப்படி சொதப்புவதற்கு இவர்களின் ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொய் சொல்ல வராது என்று பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொய் சொல்வதை வெறுக்கிறார்கள், ஆனால் பொய் சொல்ல நிர்பந்திக்கப்படுகையில் அவர்கள் தவறான நேரத்தில் கூறுவதன் மூலம் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். இவர்கள் பொய் சொல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதுவே அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பும். முதலில் இவர்கள் பொய் சொல்ல முடிவெடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அதன்பின் அதன் பின்விளைவுகள் என்ன என்பது பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். அதன்பின் மற்றவர்கள் நம்பும்படியான பொய்யுடன் அவர்கள் வருவார்கள். ஆனால் இவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அனைவரும் நன்கு அறிவார்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்களுக்கு முற்றிலும் எதிர்மறையானவர்கள். இவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக வாயில் வருவதை கூறிவிடுவார்கள். இதனால் எதிரில் இருப்பவர்கள் குழம்பி விடுவார்கள். இவர்களுக்கு சுயகட்டுப்பாடு என்பது குறைவு, எனவே உண்மையைக் கூறுவதால் இவர்களுக்கு பிரச்சினை எழும் என்று அறிந்தாலும் இவர்களால் அதனை கூறாமல் இருக்க முடியாது. இவர்கள் எதைப்பற்றியும் சிந்திக்காமல் பொய் கூறிவிடுவார்கள், அதனால் இவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பொய் கூறும்போது அது அவர்கள் முகத்திலேயே பட்டவர்த்தனமாக தெரியும். இவர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள், இவர்கள் நேர்மையாக தொடர்பு கொள்ளும்போது இது அவர்களின் அற்புத குணமாக இருக்கும். அதேசமயம் இது அவர்கள் பொய் கூறும்போது அவர்களுக்கே எதிரான குணமாக மாறிவிடும். இவர்களின் உதடுகள் ஒரு கதையைக் கூறும் ஆனால் இவர்களின் முகம் வேறு கதையைக் கூறும். இதனாலேயே இவர்கள் உண்மையைக் கூறிவிடுவார்கள். இவர்களுக்கு போலியான முகம் என்று எதுவுமில்லை.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பொய் கூறுவதை கண்டறிவது சற்றுக் கடினமான ஒன்றுதான். ஏனெனில் அவர்கள் ஒரு பொய்யைக் கூறும் முன் அதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். இதனால் இவர்கள் கூறுவது பொய் என கண்டறிவது கடினம். ஆனால் இவர்கள் பொய் கூறும் தொனியில் சொதப்பி விடுவார்கள், ஏனெனில் இது இவர்கள் கூறுவது பொய் என காட்டிக்கொடுத்துவிடும். இவர்கள் பொய் கூறுவதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள், ஆனால் ஒன்று இவர்கள் அதிக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் அல்லது கட்டுப்பாடே இல்லாமல் இருப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையான ராசிக்காரர் ஆவார்கள். எனவே இவர்களுக்கு உண்மையைக் கூறுவதுதான் மிகவும் எளிமையானதாகும். எனவே இவர்கள் பொய் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்போது அது திணிக்கப்பட்டதென வெளிப்படையாகத் தெரியும். எனவே இவர்கள் பொய் கூறும்போது ஏதாவது குறுக்குக் கேள்விகள் கேட்டால் இவர்கள் எளிதில் மாட்டிக்கொள்வார்கள். பொய் கூறி மாட்டிக்கொள்வதற்கு பதில் உண்மையையே கூறிவிடலாம் என்று இவர்கள் நினைப்பார்கள்.



Click it and Unblock the Notifications
