Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 4 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க வாழ்க்கை முழுக்க ரொம்ப கஷ்டப்படணுமாம்... உங்க காதலர் ராசி என்ன?
ஒரு வலுவான உறவு எப்போதும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்பப்படும். நம்பிக்கை இல்லாத எந்த உறவும் பந்தமும் மிகக் குறுகிய காலத்தில் சிதைந்துவிடும்.
ஒரு வலுவான உறவு எப்போதும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்பப்படும். நம்பிக்கை இல்லாத எந்த உறவும் பந்தமும் மிகக் குறுகிய காலத்தில் சிதைந்துவிடும். நம்பிக்கை சிக்கல்கள், பொஸசிவ் குணம், நிச்சயமற்ற தன்மை மற்றும் துரோகம் போன்ற உணர்வுகளை அதிகரித்து, உறவில் உள்ள இருவரையும் முகமூடி அணிய வைக்கும் மற்றும் உறவை அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

முடிவில்லா சண்டைகள் முதல் எல்லையற்ற விரக்தி வரை, ஒரு காதல் விவகாரத்தில் உள்ள பாதுகாப்பின்மை பல்வேறு அர்ப்பணிப்பு சிக்கல்களின் உச்சநிலையை மேம்படுத்தும் அதே வேளையில் உறவில் உள்ள ஒருவரை உளவு பார்க்கத் தூண்டும். உறவுகளில் பாதுகாப்பின்மை கொண்டவர்கள் எப்போதும் மோசமானவர்களாக இருப்பதில்லை ஆனால் அவர்கள் நிச்சயம் உறவில் அழிவை ஏற்படுத்துவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் காதலில் பாதுகாப்பின்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கடகம்
மற்ற அனைத்து ராசிகளையும் விட கடக ராசிக்காரர்கள் காதலில் பலவீனமானவர்களாக இருப்பார்கள். இந்த ராசி அடையாளம் கொண்டவர்கள் தங்கள் மூளைக்குள் பல விபரீதமான காட்சிகளை உருவாக்குகிறார்கள் மற்றும் தங்கள் துணையிடமிருந்து எப்போதும் உச்சபட்ச அன்பு மற்றும் கவனத்தை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் தீவிரமான மற்றும் உணர்ச்சிபூர்வமான இயல்பானது அவர்களை எப்போதும் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற பீதியில் வைத்திருக்கிறது, எனவே அவர்கள் தொடர்ந்து பெரிய உணர்ச்சி பாதுகாப்பின்மைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காதலில் விழுந்தவுடன், அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் துணையைச் சுற்றியே சுழற்றுகிறார்கள். அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு அடியையும் கூர்ந்து கவனித்து உளவு பார்க்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தங்கள் தொழில் சார்ந்த மற்றும் வலுவான ஆளுமைக்கு பெயர் பெற்றிருந்தாலும், அவர்கள் ஒரு உறவில் நுழைந்தவுடன் அவர்கள் மிகவும் பலவீனமாகிவிடுவார்கள். அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு அடியையும் தங்கள் இதயத்தில் இருந்து பார்க்கத் தொடங்குகிறார்கள் மற்றும் லாஜிக்காக சிந்திப்பதை மறக்கிறார்கள். அதிகப்படியான அன்பு அவர்களை பாதுகாப்பின்மை, கோபம் மற்றும் வேதனையின் பாதையில் இழுத்துச் செல்கிறது. அவர்கள் தங்கள் உறவில் மோசமான அறிகுறிகளை உருவாக்குகிறார்கள்.

மேஷம்
மனக்கிளர்ச்சி, தன்னிச்சையான மற்றும் உணர்ச்சிமிக்கவர்கள் போன்ற சொற்கள் மேஷ ராசிக்காரர்களைப் பற்றி விவரிக்கிறது. அவர்கள் தங்கள் துணையை பாலோ செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள் மற்றும் அதிக யோசிக்காமல் சீரற்ற முறையில் முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் நீண்டகால உறவில் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள், ஏனெனில் அவர்கள் எப்போதும் நம்பிக்கையில் குறைவாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு வார்த்தைக் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். தங்கள் துணையின் செயல்பாடுகளில் ஏதேனும் சந்தேகத்திற்கு உரியதாக கண்டறிந்தால் அதனைப் பற்றி துருவி துருவி கேட்டு அவர்களை ஒருவழி செய்து விடுவார்கள்.

விருச்சிகம்
அவர்களின் மர்மமான மற்றும் வெறித்தனமான செயல்பாட்டுக்கு பெயர் பெற்ற விருச்சிக ராசிக்காரர்கள் முழு மனதுடன் நேசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் துணையின் புதிரான செயல்பாடுகளை கண்டறிந்தவுடன், அவர்களின் பாதுகாப்பின்மை வெளிப்படுகிறது மற்றும் உண்மையை வெளிக்கொணர அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களின் மிகவும் இரகசியமான ஆளுமை ஒவ்வொரு ரகசியத்தையும் அவர்களின் இதயத்தில் மறைத்து வைத்திருக்கிறது, மேலும் அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தால் பழிவாங்கும் மனநிலைக்கு செல்வார்கள்.



Click it and Unblock the Notifications