Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி சிக்கல் தீர்க்கப்படும்...
- 11 hrs ago
ஒயிட் சாஸ் பாஸ்தா
- 11 hrs ago
உங்க ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் மாத்திரைகள 60% தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்!
- 12 hrs ago
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போடுவது எப்படி?
Don't Miss
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Movies
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
இந்த 5 ராசிக்காரர்கள் அந்த விஷயத்தில் மிக தீவிரமா இருப்பங்களாம்...யாருக்காகவும் அத விட மாட்டாங்களாம்!
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு ஆசை, விருப்பங்கள் மற்றும் தேவைகள் இருக்கும். இது ஒவ்வொரு நபர்களுக்கும் வேறுபாடும். இங்கு எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. நாம் அனைவரும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளன. ஆனால், நம் தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட முறையில் தனியுரிமையாக வாழ முடியுமா என்றால் எல்லாராலும் அது முடியாது. நாம் அனைவரும் நம்முடைய தனியுரிமையை சில அல்லது வேறு வழியில் விரும்புகிறோம். ஆனால் சில தனிநபர்கள் மிகவும் தனிப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை விட தங்கள் இடத்தை அதிகமாக நேசிக்கிறார்கள்.
அப்படி உள்ளவர்களை ஜோதிடம் மூலம் அடையாளம் காணலாம். சக்கரத்தில் உள்ள அந்த ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும்போது மட்டுமே வெளியே வர விரும்புகின்றன. நீங்கள் அல்லது உங்கள் துணை அவர்களில் ஒருவரா என்பதை அறிந்துகொள்ள? இப்போது கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்கள் ரகசிய ஏஜெண்டுகளைப் போல தங்கள் தனியுரிமையை காத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மர்மமானவர்கள், இரகசியமானவர்கள் மற்றும் அவர்கள் விரும்புவதை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் மிகவும் அமைதியான மற்றும் தனிப்பட்ட ஆத்மாக்கள். அவர்களைச் சுற்றி அவர்கள் வரைந்த எல்லையை நீங்கள் கடக்க முடியாது. குறிப்பாக உணர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். யாரேனும் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பது அல்லது அதிக கேள்விகள் கேட்பது அவர்களுக்குப் பிடிக்காது.

ரிஷபம்
ரிஷப ராசி அடையாளம் மிகவும் தனிப்பட்டது மற்றும் இந்த மக்கள் தங்கள் பிரச்சினைகளை தாங்களாகவே கையாள விரும்புகிறார்கள். மக்களை நம்புவதில் அவர்களுக்கு சிரமம் உள்ளது. எனவே அவர்கள் சில நுணுக்கங்களை மறைக்கிறார்கள். அவர்களின் தனியுரிமையை மதிக்க முடியாதவர்களை அவர்களால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

கன்னி
கன்னி ராசி நேயர்கள் தங்கள் தனியுரிமையைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்கள். மேலும் அவர்கள் தனித்தன்மையாக இருக்கும்போதுதான் அவர்களின் உண்மையான சுயரூபம் வெளிவரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் சொந்த காரியத்தைச் செய்யும்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் சில பணிகளைச் செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.

மீனம்
மீன ராசி தங்கள் சொந்த இடத்தையும் தனியுரிமையையும் விரும்புகின்றன. ஏனெனில் அது அவர்களை அவர்களாக செயல்பட வைக்க உதவுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு இது சிறந்த வேலையைச் செய்கிறது மற்றும் அவர்கள் அமைதியையும் பெறுகிறார்கள். அவர்கள் உறவுக்கு பயந்து வெகு சிலரை வாழ்க்கையில் உள்ளே அனுமதிப்பார்கள். மேலும், அவர்கள் பெரும்பாலும் மக்களிடமிருந்து விலகிச் செல்லவே விரும்புகிறார்கள்.

கடகம்
கடக ராசி அடையாளம் தங்களைக் கவனித்துக் கொள்வதில் சரியாக இருப்பார்கள். வெளி உலகத்தை எதிர்கொள்ளும் வகையில் தங்களை வலுப்படுத்தவும் தனியாக நேரத்தை விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அவர்களின் விருப்பத்தை சரியாக வரையறுக்கிறார்கள். இதனால் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

இறுதிகுறிப்பு
மேஷம், மிதுனம், சிம்மம், கடகம், தனுசு, மகரம் மற்றும் கும்பம் தங்கள் தனியுரிமையை மதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலே உள்ள 5 ராசிக்காரர்களைப் போல் அல்லாமல் மற்றவர்களிடம் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது சரியாக இருக்கும்.