Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
2023-ல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல வேலையும், சம்பளமும் கிடைக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
2023 ஆம் ஆண்டில் பல ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் வேலையில் மாற்றம், புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல நல்ல செய்திகளைப் பெறவுள்ளார்கள்.
2023 ஆம் ஆண்டில் நுழைய சில நாட்களே உள்ளன. இந்த புத்தாண்டை ஒரு புதிய இலக்குகளுடன் தொடங்குவதற்கு பலரும் தயாராகிக் கொண்டிருப்போம். ஜோதிடத்தில் 2023 ஆம் ஆண்டானது 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என ஏற்கனவே கணித்து கூறப்பட்டுள்ளது. பலரும் தங்கள் ராசிக்குரிய பலன்களை தெரிந்து கொள்வதற்கு ஆவலாக இருப்போம். குறிப்பாக வேலை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் 2023 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் பல ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும் வேலையில் மாற்றம், புதிய வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல நல்ல செய்திகளைப் பெறவுள்ளார்கள். இப்போது 2023 ஆம் ஆண்டில் நல்ல வேலை மற்றும் சம்பளத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
2023 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக பல நற்பலன்களைப் பெறப் போகிறார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சூரியன், புதன், குரு ஆகியோரின் ஆசியால் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பலர் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். இது தவிர தொழில் காரணமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மொத்தத்தில், தொழில் ரீதியாக 2023 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும்

சிம்மம்
2023 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் பல அற்புதங்கள் நடக்கப் போகிறது. அதுவும் இந்த ஆண்டில் பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, பல நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்களையும் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளும் தங்களின் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பதால், இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்றாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக பல அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, விரும்பிய கம்பெனியில் வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் ஆண்டாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு தொழில் ரீதியாக சூப்பராக இருக்கும். பணியிடம் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலர் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. இன்னும் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் இந்த ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு தொழிலில் நல்ல வருமானத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் இதுவரை செய்த கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
