For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா?

உலக புகைப்பட தினத்தில் மக்கள் எப்படி புகைப்படங்களின் மூலம் சமூகத்துடனான உறவையும் விழிப்புணர்வையும் பெறுகிறார்கள் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

By Mahibala
|

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புகைப்படங்களின் வாயிலாக மக்கள் எவ்வாறு சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள், முக்கியத்துவம் என்ன, ஏன் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் ஆகியவற்றை உணர்த்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

World Photography Day 2019: History, Theme and Significancehotography

சமீப காலங்களில் இந்த தினத்தன்று சமூக வலைத்தளங்களில் தாங்கள் எடுத்த வித்தியாசமாக புகைப்படங்களை பலரும் பதிவிட்டு இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக புகைப்பட தினம்

உலக புகைப்பட தினம்

பக்கம் பக்கமாக வசனம் பேசிச் சொல்ல வேண்டிய விஷயத்தைக் கூட ஒரு சிறிய புகைப்படத்தால் எளிதாகச் சொல்லிவிட முடியும். புகைப்படங்களின் மீது நமக்கு இருக்கும் ஈர்ப்பு என்பது இன்றைய காலத்து இளைஞர்களுக்குச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு புகைபபடங்களை ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். அதனாலேயே புகைப்பட தினத்தை சர்வதேச அளவில் கொண்டாடுகிறார்கள்.

MOST READ: உயிருக்குப் போராடிய பறவையின் உயிரைக் காப்பாற்றிய நாய் - வைரலான வீடியோ

முதல் புகைப்படம்

முதல் புகைப்படம்

13 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் கேமரா அப்ஸ்குரா என்னும் கருவி மூலம் தான் முதன்முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டது. தூக்க முடியாத அளவுக்கு வெயிட்டான கருவி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களோ தற்போதைய அசாத்திய வளர்ச்சியின் காரணமாக, டிஜிட்டல் கேமரா, பிக்எல்ஆர் என்பதையும் தாண்டி, நம்முடைய ஸ்மார்ட்போன்களில் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில் இருந்தே நமக்குத் தெரிந்திருக்கும் இதன் முக்கியத்துவம்.

எப்படி பெயர் வந்தது?

எப்படி பெயர் வந்தது?

1839 ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்துக் கொடுத்தார். அதாவது, கண்ணாடியை வைத்து புகைப்படத்தை பிரதியெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இந்த முறைக்கு பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதலும் அளித்தது. இவர் தான் இந்த கலைக்கு போட்டோகிராபி என்று பெயரும் வைத்தார்.

முதல் புகைப்படங்கள்

முதல் புகைப்படங்கள்

1826 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் தான் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்து சாதனை படைத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்த போனது. அதற்குப் பின்பு தான் 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலுக்கு அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இதுதான்.

புகைப்பட விருதுகள்

புகைப்பட விருதுகள்

சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பத்திரிகை துறையில் இதுபோன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. வேர்ல்டு பிரஸ் போட்டோ, டைம் இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் ஆகியவை நடத்தப்பட்டிருக்கின்றன.

MOST READ: கூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்

கேமரா எப்போது வந்தது?

கேமரா எப்போது வந்தது?

1900 ஆம் ஆண்டு பாக்ஸ் பிரவுனி என்னும் ஒருவகை கேமராவை கோடாக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 35 மில்லி மீட்டர் அளவுள்ள ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் என்பவர் வடிவமைத்தார். இந்த கேமரா புகைப்படத்துறையையே பெரிய அளவில் புரட்டிப் போட்டது. அதன்பின் டிஜிட்டல் கேமராக்கள், பிக்எலார் என கேமரா வகைகளில் பெரிய புரட்சியே வந்துவிட்டது எனலாம்.

உலகை மாற்றிய படங்கள்

உலகை மாற்றிய படங்கள்

20 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றிலேயே நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்று கூறலாம். உதாரணமாக,

சீன வீரர்களின் ராணுவ பீரங்கி வண்டியை எதிர்த்து நின்ற டேங்க் மேன் புகைப்படம்

வியட்நாம் போரை நிறுத்தக் காரணமான சிறுமியின் புகைப்படம்

1994 ஆம் ஆண்டில் சூடானின் உணவுப்பஞ்சத்தை சுட்டிக்காட்டிய குழந்தையின் புகைப்படம்

ஆகியவை உலக அளவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியவை.

MOST READ: லீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா? கண்ட்ரோல் பண்ண முடியலயா? இத செய்ங்க போதும்...

அதிர வைத்த ஐலான் புகைப்படம்

அதிர வைத்த ஐலான் புகைப்படம்

லட்சம் வார்த்தைகள் சொல்லாததை ஐலான் சிறுவனின் புகைப்படம் இந்த உலகத்திற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. உலக அளவில் இந்த படத்தைப் பார்த்து கண்ணீர் விடாத நபர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Photography Day 2019: History, Theme and Significance

On 19th August photography lovers across the globe will be celebrating World Photo Day. The main aim of World Photo Day is to inspire positive change across the world. Connecting people and raising awareness through the use of photography.
Desktop Bottom Promotion