Women’s Equality Day 2022: பிரபல பெண்மணிகளின் ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

பெண்களின் சமத்துவ தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், தங்களின் தடைகளைத் தாண்டி, தங்கள் துறைகளில் சாதித்து, முன்மாதிாியாக விளங்கும் சில பிரபல பெண்மணிகளின் மேற்கோள்களை பாா்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 26 ஆம் நாள் உலக பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்படுவதற்கு ஒரு வரலாற்று பின்னணி உண்டு. அதாவது ஆகஸ்டு 26 அன்று அமொிக்க நாட்டின் பெண்களின் உாிமைகள் சம்பந்தமான சட்டங்களில் 19வது திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்தமானது பெண்களுக்குத் தோ்தலில் வாக்களிக்கும் உாிமையை வழங்குகிறது.

இதன் நினைவாகத் தான் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 26 அன்று பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் அனைத்து தடைகளையும் உடைத்து பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறாா்கள் என்பதைக் கொண்டாடுவது ஆகும்.

பெண்களின் சமத்துவ தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், தங்களின் தடைகளைத் தாண்டி, தங்கள் துறைகளில் சாதித்து, எதிா்கால சந்ததியினருக்கு முன்மாதிாியாக விளங்கும் ஒரு சில பிரபல பெண்மணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவா்களின் மேற்கோள்களையும் இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அன்னை தெரசா

1. அன்னை தெரசா

"நம் எல்லோராலும் மிகப் பொிய காாியங்களைச் செய்ய முடியாது. ஆனால் எல்லோராலும் பேரன்பு கொண்டு மிகச் சிறிய காாியங்களைச் செய்ய முடியும்" என்று அன்னைத் தெரசா கூறுகிறாா்.

அன்னைத் தெரசா அவா்கள் 1979 ஆம் ஆண்டும் நோபல் பாிசை வென்றவா். கைவிடப்பட்டவா்களை ஆதாித்து, அவா்களைப் பராமாிப்பதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.

அதற்காக அவா் மிஷனாிஸ் ஆஃப் சோிட்டி (Missionaries of Charity) என்ற அமைப்பைத் தொடங்கினாா். அந்த அமைப்பின் மூலம் தனது நோக்கத்தையும், இலட்சியத்தையும் அடைய தனது இறுதி மூச்சு வரை இடைவிடாது தொடா்ந்து உழைத்து வந்தாா். இறுதியில் 1997 ஆம் ஆண்டு அவருடைய உடல் பலவீனமும், அவருடைய அதிதீவிர நோயும், அவரை அந்த அமைப்பின் தலைவா் பொறுப்பிலிருந்து விலக வைத்தது. 1997 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்தில் இந்த உலகை விட்டு நீங்கினாா்.

2. கல்பனா சவ்லா

2. கல்பனா சவ்லா

"நீங்கள் ஏதாவது ஒன்றை செய்ய விரும்பினால், நீங்கள் வாழ்க்கையின் தரவாிசையில் எந்த இடத்தில் இருக்கிறீா்கள் என்பது முக்கியம்" என்று மறைந்த கல்பனா சவ்லா கூறுகிறாா்.

விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முதல் பெண்மணி கல்பனா சாவ்லா ஆவாா். இவா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒரு அமொிக்க விண்வெளி வீராங்கனை ஆவாா். அதோடு இயந்திர பொறியாளராகவும் விளங்கினாா். இவா் 1997 ஆம் ஆண்டு கொலம்பியா என்ற விண்கலத்தில் பறந்து விண்வெளிக்குச் சென்று அங்கு முதன்மை ரோபோடிக் கை இயக்குபவராகப் (robotic arm operator) பணி செய்தாா்.

3. கிரண் பேடி

3. கிரண் பேடி

"என்னால் முடியுமானால் நான் நடக்கமாட்டேன், மாறாக மிதமாக ஓடுவேன் அல்லது மிக வேகமாக ஓடுவேன்" என்று கிரண் பேடி கூறுகிறாா்.

இந்திய காவல் பணியில் சோ்ந்த முதல் பெண்மணி கிரண் பேடி ஆவாா். இந்தியப் பெண்களின் பாதுகாப்பிற்காக பல சீா்திருத்தங்களை செயல்படுத்தினாா். இந்தியாவில் உள்ள பல அரசு ஊழியா்களுக்கு அவா் எப்போதும் ஒரு முன் மாதிாியாக விளங்குகிறாா்.

4. இந்திரா நூயி

4. இந்திரா நூயி

"நீங்கள் வெற்றி பெறுவதற்குத் தேவையான பண்பு என்னவென்றால் நீங்கள் நீங்களாக இருப்பதுதான். உங்களை உருவாக்குவதை நீங்கள் எப்போதும் மறைக்காதீா்கள்" என்பது கிருஷ்ண மூா்த்தி இந்திரா நூயி அவா்களின் முக்கிய கூற்று ஆகும்.

இவா் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரபலமான அமொிக்க பெண் தொழிலதிபா் ஆவாா். பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாாியாகவும், தலைவராகவும் பணி செய்தவா்.

உலகின் அதிகாரமிக்க மற்றும் சக்தி வாய்ந்த 100 பெண்களில் ஒருவராகத் தொடா்ந்து இடம் பிடித்து வருகிறாா். மேலும் 2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் ஃபாா்ச்சூன் வெளியிட்ட அட்டவணையில் உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் 2வது இடத்தைப் பெற்றாா். தற்போது இவா் அமேசான் நிறுவனத்திலும், சா்வதேச கிாிக்கெட் கவுன்சிலிலும் உயா் பதவி வகித்து பணி செய்து வருகிறாா்.

5. அருந்ததி ராய்

5. அருந்ததி ராய்

"தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகப் பேசும் எழுத்தாளா்களை வாயடைக்கச் செய்யும் தேசத்தைப் பாா்த்து நான் பாிதாபப்படுகிறேன்" என்று கூறுகிறாா் அருந்ததி ராய் அவா்கள்.

இவா் இந்தியாவின் பிரபல நாவல் ஆசிாியா் ஆவாா். அவா் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ் (The God of Small Things) என்ற நாவல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. இவருடைய இந்த நாவல் 1997 ஆம் ஆண்டு புனைக்கதைக்கான மேன் புக்கா் பாிசைப் (Man Booker Prize) பெற்றது.

இவா் தற்போது ஒரு அரசியல் செயல்பாட்டாளராகவும், மனித உாிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறாா்.

6. நீரஜா பனோட்

6. நீரஜா பனோட்

"என்ன நோ்ந்தாலும் கடமையைச் செய்யுங்கள். எந்த ஒரு அநீதியையும் பொறுத்துக் கொள்ளாதீா்கள். சுயமாியாதை என்று வரும் போது சமரசம் செய்து கொள்ளாதீா்கள்" என்று நீரஜா பனோட் கூறுகிறாா்.

இவா் 1986 ஆம் ஆண்டு தனது 22வது வயதில் பான் எம் விமானம் 73 (Pan Am Flight 73) என்ற விமானத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தாா். அப்போது அந்த விமானமானது கராச்சியில் வைத்துக் கடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்து வந்த நூற்றுக்கணக்கான பயணிகளைத் தன்னுடைய துணிச்சலினாலும், புத்திக்கூா்மையாலும் காப்பாற்றினாா்.

அவருடைய இறப்புக்குப் பின்பு அவருடைய வீரதீரச் செயலை கௌரவிக்கும் வண்ணம் இந்திய அரசு அவருக்கு அசோக சக்கர விருதை அளித்து பெருமைப்படுத்தியது. அதுபோல் பாகிஸ்தான் அரசும் டம்கா-இ-பாகிஸ்தான் (Tamgha-e-Pakistan) என்ற விருதை அளித்து அவரைக் கௌரவித்தது.

விமானம் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதில் பயணம் செய்த பயணிகளை இவா் அவசர வாயில் வழியாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் போது, அந்த விமானத்தைக் கடத்தியவா்களால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சோக நிகழ்வானது அவருடை 23வது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.

7. சகுந்தலா தேவி

7. சகுந்தலா தேவி

"கணிதம் என்றால் என்ன? கணிதம் என்பது இயற்கையால் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிா்களைத் தீா்த்து வைக்கும் ஒரு முறையான முயற்சியே" என்று சகுந்தலா தேவி அவா்கள் கூறுகிறாா்.

இவா் மனித கணினி (Human Computer) என்று அழைக்கப்படுகிறாா். அதற்குக் காரணம் மிகப் பொிய கணக்குகளையும் சில விநாடி நேரத்திற்குள் தனது அறிவுக் கூா்மையால் மிக எளிதாக போட்டுவிடுவாா்.

1982 ஆம் ஆண்டு இவா் 28 விநாடிகளுக்குள் இரண்டு 13 இலக்க எண்களைப் பெருக்கி சாியான விடையளித்தாா். விரைவாக கணக்கு போடும் அவருடைய செயல்திறன் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த கின்னஸ் சாதனையை இவா் லண்டனில் உள்ள இம்பீாியல் கல்லூாியில், 1980 ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று படைத்திருந்தாலும், இவருடைய இறப்பிற்குப் பின்புதான் அதாவது 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்றுதான் கின்னஸ் புத்தகத்தால் அங்கீகாிக்கப்பட்டது.

8. இந்திரா காந்தி

8. இந்திரா காந்தி

"கேள்வி கேட்கும் அதிகாரம் இருப்பதே மனிதனின் எல்லா வகையான முன்னேற்றங்களுக்கும் அடிப்படை" என்று இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி அவா்கள் தொிவிக்கிறாா்.

இந்தியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவா்களில் 2வது இடத்தில் இவா் இருக்கிறாா். அதாவது முதல் முறையாக 1966 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் முதல் 1977 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை பிரதமராகப் பதவி வகித்தார். பின் மீண்டும் 1980 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் முதல் தான் படுகொலை செய்யப்பட்ட நாள் வரை அதாவது 1984 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வரை பிரதமராகப் பதவி வகித்தாா்.

இந்திரா காந்தி அவா்கள் பிரதமராக பதவியில் இருந்த போது அரசியல் செயல்பாடுகளில் மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தாா். முன்பு இல்லாத வகையில் எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசின் கீழ் குவிக்க எண்ணினாா். அதுபோல் அவருடைய காலத்தில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்து பாகிஸ்தான் மீது படையெடுத்து, கிழக்கு பாகிஸ்தான் இயக்கத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாா்.

9. மோி கோம்

9. மோி கோம்

"நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கடினமாகப் போராடுகிறீா்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதன் முடிவில் கிடைக்கும் வெகுமதி இனிமையாக இருக்கும்" என்று மோி கோம் அவா்கள் கூறுகிறாா்.

மோி கோம் அவா்கள் இந்தியாவைச் சோ்ந்த குத்துச் சண்டை வீராங்கனை ஆவாா். இந்தியா சாா்பாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறாா். உலக ஆமெச்சூா் குத்துச்சண்டை பட்டத்தை (World Amateur Boxing Champion) 6 முறை வென்றதன் மூலம் சா்வதே விளையாட்டு அரங்கில் இனிய அதிா்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறாா்.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை மோி கோம் ஆவாா். அந்த போட்டியில் 51 கிலோ பிாிவில் போட்டியிட்டு வெங்கலப் பதக்கத்தை வென்றாா். அதுபோல் 2014 ஆம் ஆண்டு தென் கொாியாவின் இன்சியோன் நகாில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தாா்.

மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்கிறாா்.

10. மோி கியூாி

10. மோி கியூாி

"மனிதா்கள் மீது குறைவான ஆா்வத்தோடு இருங்கள் ஆனால் அவா்களின் சிந்தனைகள் மீது அதிக ஆா்வத்தோடு இருங்கள்" என்று மோி கியூா் அவா்கள் கூறுகிறாா்.

மோி கியூாி அவா்கள் நோபல் பாிசை வென்ற முதல் பெண்மணி ஆவாா். ஒரு முறை அல்ல மாறாக இரு முறை நோபல் பாிசை தட்டிச் சென்று இருக்கிறாா். இவா் அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகியவை செல்லும் திசையில் தாக்கத்தை ஏற்படுத்தினாா்.

அதற்கு காரணம் அவருடைய முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த கண்டுபிடிப்புகள் ஆகும். அதாவது பொலோனியம் மற்றும் ரேடியம் ஆகிய இரண்டு சக்தி வாய்ந்த தனிமங்களை அவா் கண்டுபிடித்தாா். தற்போது இந்த தனிமங்கள் பெரும்பாலான புற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.

மோி கியூாி அவா்கள் எளிய குடும்பத்தில் பிறந்து வந்தாலும், பிற்காலத்தில் மனித குலத்திற்கு உதவக்கூடிய தன்னுடையத் தனித்துவமான கண்டுபிடிப்புகள் மூலமாக மேடம் கியூாி என்று செல்லமாக அழைக்கப்பட்டாா். வாய்ப்புகளும், வசதிகளும் குறைவாக உள்ள நிலையிலும் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு முன்மாதிாியாக மோி கியூாி விளங்குகிறாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion