Just In
- 9 hrs ago
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 9 hrs ago
உங்க கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபியை குறைக்க இந்த 3 பொருட்கள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
- 10 hrs ago
இந்த பொருட்களை எவ்வளவு வருஷம் வேணாலும் வைத்து சாப்பிடலாமாம் கெட்டேப்போகாதாம் தெரியுமா?
- 11 hrs ago
Karandi omelette : கரண்டி ஆம்லெட்
Don't Miss
- News
வெளியே போயிடுங்க.! இல்லைனா சாக ரெடியா இருங்க..! காஷ்மீர் பண்டிட்களுக்கு லஷ்கர் இ இஸ்லாம் மிரட்டல்..!
- Finance
இளம் வயதில் வீடு வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு.. ஏன் தெரியுமா?
- Movies
அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !
- Sports
ரன் ஓடும் போது நிகழ்ந்த காமெடி.. ஒரே இடத்தில் 2 பேட்ஸ்மேன்.. டெல்லி வைத்த டிவிஸ்ட்.. ரசிகர்கள் கலகல
- Technology
சரியான வாய்ப்பு., ரூ.2000 தள்ளுபடி- ரூ.4,499-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்: இதோ வழிமுறைகள்!
- Automobiles
இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண்களின் ராசிப்படி அவர்களின் அடிப்படை குணம் என்ன தெரியுமா? பார்த்து பழகுங்க இல்லனா பிரச்சினைதான்...!
ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர்கள். ஏனெனில் பெண்கள் எப்பொழுதும் விடைதெரியாத ஒரு மர்ம நாவலாகவே இருக்கிறார்கள். இறுதிவரை பெண்களை புரிந்து கொள்வது என்பது முடியாத காரியமாகவே மாறிவிடுகிறது.
தங்களின் காதலி அல்லது மனைவி பற்றி முழுமையாக புரிந்து கொண்டு விட்டதாக ஆண்கள் நினைக்கும் போது அவர்கள் வேறுவழிகளில் ஆண்களை ஆச்சரியப்படுத்தலாம். அவர்களின் திடீர் வித்தியாசமான நடத்தை ஆண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி பெண்களைப் பற்றிய சில அடிப்படை உண்மைகளை அவர்களின் ரசிகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை குணம் என்னவாக இருக்குமென்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிப் பெண்ணுடன் பழகும்போது, அவர்களைச் சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைகளையும், மக்களையும் கையாளும் திறன் அவர்களுக்கு உள்ளது என்ற உண்மையை மனதில் கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அனைத்து விஷயங்களையும் கொண்டுவரக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

ரிஷபம்
ரிஷபம் ராசி பெண்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். அவர்கள் மக்களை மிகவும் இராஜதந்திர முறையில் கையாள விரும்புகிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசி பெண்கள் பொறாமை கொண்டவர்கள். அவர்கள் உதவி கேட்பதற்கு ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்கள், ஆனால் மற்றவர்களுக்கு உதவும்போது, அவர்கள் எப்போதும் பின்வாங்குவார்கள். இவர்கள் எப்போதும் சுயநலத்தை பிரதானமாகக் கொண்டவர்கள்.

கடகம்
இவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மிகவும் கணக்கட்டு செயல்படக்கூடியவர்கள் மற்றும் பெரும்பாலும் மக்களை தூரத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் எப்போதாவது உதவியாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கும் நபரை நோக்கி அவர்கள் முன்முயற்சி எடுக்கிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இந்த பண்பின் காரணமாக, அவர்கள் சில சமயங்களில் பிணைக்கப்பட்டதாகவோ அல்லது உணர்ச்சிவசப்படுவதையோ உணர்கிறார்கள். அவர்கள் அடிக்கடி பதற்றமடைகிறார்கள் அல்லது எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

கன்னி
கன்னி ராசிப் பெண்கள் நல்ல எதிர்கால லாபத்திற்காக தங்கள் பணத்தை முதலீடு செய்வதில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். அவர்கள் பண ஆசை மிகுந்தவர்கள். ஆனால் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் அல்ல.

துலாம்
துலாம் ராசி பெண்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே நல்ல சமநிலையை பராமரிக்கும் போக்கைக் கொண்டுள்ளனர். அவர்கள் இரண்டிலும் சமமாக சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மற்றவர்கள் சொல்வதால் எளிதில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக பண விஷயங்களில் அவர்கள் எளிதில் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். அதேசமயம் பழிவாங்கும் எண்ணம் இவர்களிடம் நிறைந்திருக்கும்.

தனுசு
தனுசு ராசி பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை நடத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். கடந்த காலச் சிக்கல்கள் அனைத்தையும் எப்படி முடிவுக்குக் கொண்டு வந்து புதிதாகத் தொடங்குவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் பயணத்தில் இருக்க விரும்புகிறார்கள்.

மகரம்
மகர ராசிப் பெண்கள் தங்கள் பலம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி காரியங்களைச் சாதிக்க முயல்வார்கள். அவர்கள் இரண்டு எதிரெதிர்களை ஒன்றாக இணைக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்வதை உறுதிப்படுத்த எந்த சக்தியையும் பயன்படுத்துவார்கள்.

கும்பம்
கும்ப ராசி பெண்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும். இரண்டிற்கும் இடையே சமநிலையைப் பேணுவதன் மூலம் அவர்களால் இதைச் செய்ய முடிகிறது.

மீனம்
மீன ராசிப் பெண்கள் பொதுவாக தங்களைச் சுற்றியுள்ளவர்களால் வருத்தப்படுவார்கள். ஒரு மீளமுடியாத சூழ்நிலையில் அவர்கள் இருந்தால், அவர்கள் பெரும்பாலும் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட தயாராக இருக்கிறார்கள்.