For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...

பொலீரோ வாகனத்தை இராணுவத்தின் பெண் வீராங்கனைகள், ஆண்களின் உதவியின்றி தூக்கி நிறுத்தும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுபற்றி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

சமுதாயம் பெண்களை பலவீனமானவர்களாகவே பார்த்து வருகிறது. மருத்துவம், கலை, இலக்கியம், அறிவியல் இன்னும் என்னென்னவோ துறைககளில் சாதித்திருந்தும் உடல் பலத்தை பொறுத்து பலவீனமானவர்களாகவே பெண்கள் பார்க்கப்படுகின்றனர்.

Women Battalion From Nagaland Pushes Car Out Of A Ditch

இதுபோன்று யோசிப்பவர்களை, தங்கள் பார்வையை மாற்றிக்கொள்ள வைக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நாகலாந்து எம்எல்ஏ

நாகலாந்து சட்டப்பேரவை உறுப்பினரான மஹோன்லுமோ கிகோன், ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தண்ணீர் செல்லும் கால்வாய் ஒன்றினுள் சரிந்து கிடக்கும் பொலீரோ வாகனத்தை இராணுவத்தின் பெண் வீராங்கனைகள், ஆண்களின் உதவியின்றி தூக்கி நிறுத்தும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவுடன், "பக்கவாட்டு கால்வாயில் விழுந்த மஹிந்திரா பொலீரோவை தூக்கியெடுக்கும் நாகா பெண்கள் படை. அநேகர் பார்க்கவேண்டிய பழைய வீடியோ" என்று பதிவிட்டுள்ளார் மஹோன்லுமோ கிகோன்.

MOST READ: மேகன் மார்க்கலின் ஆர்கானிக் சால்வை தயாரிக்கும் கம்பெனியில் ஒருநாளைக்கு ரூ.33 தான் சம்பளமாம்...

பார்க்க... பார்க்க... பலபேர் பார்க்க...

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, கிரென் ரிஜ்ஜூ, அமித் ஷா மற்றும் மன்ஜோ நந்தி உள்ளிட்ட பலரை தமது ட்விட்டர் பதிவுடம் 'டேக்' செய்துள்ளார் கிகோன். இந்தப் பதிவு மூன்றாயிரத்துக்கும் அதிகமான முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: காலேஜ் பாத்ரூமில் சுயஇன்பம் கூடாது... பல்கலைக்கழகம் அதிரடி சுற்றறிக்கை....

பின்னூட்டம்

பல பதிவர்கள் இதற்கு பின்னூட்டமிட்டு வருகின்றனர். ஒரு பதிவர், "அவள் ஒரு பெண். அவளால் எதுவும் செய்ய இயலும்" என்றும் இன்னொருவர், "பெண்களுக்கு அதிக வலிமை" என்றும், "வாய் பிறந்து வணக்கம் (சல்யூட்) வைப்போம்" என்றும் பின்னூட்டமிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Battalion From Nagaland Pushes Car Out Of A Ditch

They say women are the weaker sex of the society, even after their big contributions in the field of medicine, art, literature, science, etc. Their physical strength is also often judged. But, this video of a women battalion in Nagaland will prove this theory wrong.
Desktop Bottom Promotion