Latest Updates
-
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மரணத்திற்கு பின் நீங்க எந்த உலகத்துக்கு போவீங்க-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...
ஒருவரின் ஜன்ம ஜாதகத்தைக் கொண்டு, எந்தெந்த ஜாதகருக்கு நரகம் செல்ல வாய்ப்பு உள்ளது, யாரெல்லாம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதை அறியலாம்.
ஸ்ரீகிருஷ்ண பகவான் பகவத் கீதையில் ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை என்று கூறினார். ஆன்மா வாழ்க்கைக்கும், மரணத்திற்கும் இடையே முடிவின்றி தொடந்து பயணிக்கிறது. ஒருவர் இறந்த பிறகு ஆன்மா உடலை மட்டும் தான் மாற்றுகிறது. ஆன்மாவின் குறிக்கோள் முழு முக்தியைப் பெறுவதாகும். ஆனால் இந்து மதத்தின் படி, ஆன்மா தனது செயல்களால் 84 வடிவங்களில் அலைகிறது. வழக்கமாக, நம் அனைவரது மனதிலும் ஒரு கேள்வி இருக்கும். அது மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது தான்.

ஏனெனில் சனாதன தர்மத்தின் படி, மரணம் புதிய வாழ்வின் தொடக்கமாக கருதப்படுகிறது. ஆகவே தான் நமக்கு மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் எழுகிறது. ஜோதிடத்தின் உதவியுடன், மனிதர்களின் பிற்கால வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். அதுவும் ஒருவரின் ஜன்ம ஜாதகத்தைக் கொண்டு, எந்தெந்த ஜாதகருக்கு நரகம் செல்ல வாய்ப்பு உள்ளது, யாரெல்லாம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதை அறியலாம். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

சொர்க்கம் செல்லும் யோகம்
* ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவருடைய ஜாதகத்தில் 12 ஆவது வீட்டில் சுப கிரகம் இருந்தாலோ அல்லது சுப கிரகம் 12 ஆவது வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ, அந்நபர் மரணத்திற்கு பின் சொர்க்கம் செல்வார்.
* இது தவிர, குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன் 8 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபர் சொர்க்கத்தை அடைவாராம்.
* ஜாதகத்தில் 1 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனில் குரு பார்வை பெற்றவர்கள், ஆன்மீகவாதிகளாக இருப்பர். இத்தகையவர்கள் மரணத்திற்கு பின் சொர்க்கம் செல்வார்கள்.

தொடர்ச்சி..
* ஒருவருடைய ஜாதகத்தின் 8 ஆவது வீட்டில் எந்த கிரகமும் இல்லை என்றால், அவரது செயல்களின் படி, சொர்க்கம் செல்வது மட்டுமின்றி, சொர்க்கத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் இடத்தைப் பெறுவாராம்.
* ஜோதிர சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தின் 10 ஆவது வீட்டில் குரு இருந்தால் மற்றும் 12 ஆவது வீட்டில் இருக்கும் சுப கிரகங்களின் மீது குருவின் பார்வை விழுந்தால், அந்நபர் மரணத்திற்கு பின் சொர்க்கத்திற்கு செல்வதோடு, அங்கு மிக உயர்ந்த இடமும் கிடைக்குமாம்.

முக்தி பெறும் யோகம்
* ஒருவரது ஜாதகத்தின் 12 ஆவது வீட்டில் சுப கிரகம் இருந்தால் மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதி சொந்த ராசியில் அல்லது பொருந்தக்கூடிய ராசியில் இருந்தால் மற்றும் சுப கிரகங்களின் பார்வை அங்கு விழுந்தால், அவர்களின் செயல்களால் பூரண முக்தியைப் பெறுவார்களாம்.
* வராஹ்மிஹிரரும் தனது "விருஷ ஜாதகம்" என்ற நூலில் இதுக்குறித்து விளக்கியுள்ளார். அதில் ஜாதகத்தின் அனைத்து கிரகங்களும் பலவீனமாக இருந்து, குரு மட்டும் கடக ராசியில் 1, 4, 6, 7, 8, 10 ஆகிய இடங்களில் இருந்தால் அத்தகையவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
* ஒருவரது பிறந்த ஜாதகத்தில், குரு லக்னம் அல்லது மீனத்தின் 10 ஆவது வீட்டில் இருந்து, எந்த ஒரு அசுப கிரகங்களின் பார்வையும் விழாமல் இருந்தால், அத்தகையவர்ள் முக்தி அடைய வாய்ப்புள்ளது.

நரகம் செல்லும் யோகம்
* யாருடைய ஜாதகத்தில் 8 ஆவது வீட்டில் ராகு இருந்து, அதுவும் பலவீனமான நிலையில் 6 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதிகள் ராகுவின் பார்வையைப் பெற்றால், அந்நபர் நரகம் செல்லும் வாய்ப்புக்கள் உள்ளன.
* ஒருவரது ஜாதகத்தில் 12 ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய், சனி மற்றும் ராகு இருந்தால் அல்லது 12 ஆவது வீட்டின் அதிபதி சூரியனுடன் இணைந்திருந்தால், அந்நபர் மரணத்திற்கு பின் நரகம் செல்வாராம்.
* ஒருவருடைய ஜாதகத்தில் 8 ஆவது வீட்டின் அதிபதியுடன் ராகு அல்லது சனி 12 ஆவது வீட்டில் இருந்தால், அந்நபர் நகரம் செல்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications
