For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் வரும் இவர்களின் வாழக்கை உணர்த்தும் விலை மதிப்பில்லாத பாடங்கள் என்னென்ன தெரியுமா?

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் காலமுள்ளவரை இப்பூமியில் நிலைத்திருக்கும். மகாபாரதம் பெரும்பாலும் போரை மையமாக கொண்டிருந்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்களும், தத்துவங்களும் ஏராளம் உள்ளது.

நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மகாபாரதத்தின் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை பிரதிபலிப்பவராக இருப்பார்கள். சிலர் கிருஷ்ணராக, சிலர் சகுனியாகி, சிலர் கர்ணனாக என நம்மை சுற்றி இருக்கும் அனைவருமே ஏதாவது ஒரு மகாபாரத கதாபாத்திரத்தை நினைவுகூறுவார்கள். அந்த அளவிற்கு மகாபாரதம் நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த பதிவில் மகாபாரதத்தில் அழுத்தமான வாழ்க்கை தத்துவங்களை சொன்ன கதாபாத்திரங்கள் யார் யாரென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ணர்

கிருஷ்ணர்

போரின் தொடக்கத்திற்கு முன்னர் தன் சகோதரர்களை எதிர்த்து போரிட தயங்கிய அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கூறிய அறிவுரைகள்தான் இன்றுவரை பகவத் கீதையாக உலக மக்களால் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் கூறுவது என்னவெனில் சிலசமயம் தர்மத்தை காப்பாற்ற தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும். எந்த போருக்கும் முதலில் திட்டம் வேண்டும், திட்டமில்லாமல் போரில் இறங்குவது தோல்வியைத்தான் ஏற்படுத்தும்.

காந்தாரி

காந்தாரி

தனது கண் தெரியாத கணவர் த்ரிதராஷ்டிரருக்காக வாழ்நாள் முழுவதும் கண்ணை கட்டிக்கொண்டு இருட்டில் வாழ்ந்தார் காந்தாரி. காதலுக்காக எடுக்கும் எந்த நடவடிக்கையும் சரியானது என்று நமக்குக் காந்தாரியின் வாழ்க்கை கற்பிக்கிறது.

 சகாதேவன்

சகாதேவன்

சகாதேவன் ஒரு ஈடுஇணையற்ற ஜோதிட வல்லுனர் ஆவார். போரின் முடிவு என்னவாக இருக்கும் என்று அவர் நன்கு அறிவார். இருப்பினும் அவர் மௌனம் காத்தார். நாம் ஒரு சபதம் ஏற்றிருந்தால் எந்த சூழ்நிலையிலும் இறுதி வரை அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற வலிமையான பாடத்தை சகாதேவனின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

MOST READ: எச்சரிக்கை! இந்த நோய்கள் தாக்கினால் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுக்கு மரணம் ஏற்படுவது உறுதி...!

 உத்தரை

உத்தரை

உத்தராவின் அபிமன்யுவின் மனைவி, அபிமன்யு போரிலிருந்து மீண்டும் உயிருடன் திரும்பி வர வாய்ப்பில்லை என்று பயம் இருந்தாலும் அவரை போருக்கு செல்ல அனுமதித்தார். ஒருவரை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கிறது என்பது முக்கியமில்லை அவர்களின் கடமை அவர்களை அழைத்தால் அவர்களை அதனை செய்ய அனுப்ப வேண்டும் உத்தரையின் வாழ்க்கை நாக்குக்கு உணர்த்துகிறது.

கர்ணன்

கர்ணன்

கர்ணன், வீரத்தில் குறைவில்லாத ஆனால் தவறாக புரிந்து கொள்ளபட்ட மாவீரன் ஆவார். இவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது முயற்சியை மட்டும் ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது. உங்களின் ஆரம்பகாலம் கீழ்நிலையில் இருந்தாலும் விடாமுயற்சி உங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.

சகுனி

சகுனி

சகுனியின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில் புத்திசாலித்தனமும், நயவஞ்சகமும் நமக்கு ஆரம்பத்தில் வெற்றியை வழங்கலாம். ஆனால் தர்மத்தை கடைபிடிக்கவில்லை எனில் இறுதியில் தோல்வியையைத்தான் தழுவுவோம்.

MOST READ:சாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அபிமன்யு

அபிமன்யு

தைரியம் என்றால் என்னவென்பதை அபிமன்யுவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. தவறுக்கு எதிராக நிற்கவும், தனது குடும்பத்தை பாதுகாக்கவும் யாரையும் எதிர்காலம் என்பதை அபிமன்யுவின் வாழ்க்கை கூறுகிறது. சக்ர வியூகத்தில் இருந்து வெளியே வர முடியாது என்று தெரிந்த போதும் தன் குடும்பத்தை பாதுகாக்க தைரியமாக சக்ர வியூகத்திற்குள் நுழைந்த அபிமன்யுவின் வீரம் அனைத்தையும் விட உயர்ந்தது.

திரௌபதி

திரௌபதி

ஒரு பெண்ணின் கண்ணியத்திற்க்கு கேடு விளைவித்தால் உங்களுக்கு அழிவு நிச்சயம் என்னும் முக்கியமான வாழ்க்கை பாடத்தை திரௌபதியின் வாழ்க்கை உணர்த்துகிறது. பெண்ணை குறைகூறும் எவருக்கும் கௌரவர்கள் போல தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை திரௌபதி வாழ்க்கை உணர்த்துகிறது.

 பீஷ்மர்

பீஷ்மர்

பீஷ்மர் அஸ்தினாபுர அரண்மனையையும், கௌரவர்களையும் பாதுகாப்பேன் என சபதம் எடுத்திருந்தார். ஆனால் அவரின் இதயத்தில் பாண்டவர் மீது அன்பு நிறைந்திருந்தது. அவரின் வாழ்க்கை உணர்த்துவது என்னவெனில் சபதம் எடுத்துவிட்டால் தனக்கு பிரியமானவர்களாக இருந்தாலும் அவர்கள் எதிர்த்தே ஆக வேண்டும்.

MOST READ: இந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...!

சஞ்சயன்

சஞ்சயன்

உண்மை கசப்பாக இருந்தாலும், அதை உங்கள் அன்புக்குரியவர்களுக்குஅவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அதை கூற வேண்டும் என்று சஞ்சயன் நமக்கு கூறுகிறார். கௌரவர்கள் போரில் தோற்றபோதும், அவர்கள் மடிந்த போதும் கூட சஞ்சயன் எதையும் மறைக்காமல் அதை திருதராஷ்டிரனிடம் கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Which Mahabharata Characters Gave Us Valuable Lessons For Life

These Mahabharata characters gave us valuable lessons for life.
Story first published: Thursday, August 1, 2019, 16:23 [IST]