Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பெண்களின் ராசிப்படி அவர்களுக்குள் இருக்கும் உண்மையான குணம் என்ன தெரியுமா? எந்த ராசி பெண்கள் பெஸ்ட்?
அனைவரின் வாழ்க்கையிலும் பெண்களின் பங்கு என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் துணை எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை சொர்க்கமா அல்லது நரகமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
அனைவரின் வாழ்க்கையிலும் பெண்களின் பங்கு என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் துணை எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை சொர்க்கமா அல்லது நரகமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். சிலர் அமைதியானவர்களாக இருப்பார்கள், சிலர் சாகசத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள் சிலரோ தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள். பெண்களின் இந்த அடிப்படை குணத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் ராசி மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் ராசியின் அடிப்படையில் ஒரு பெண் எப்படிப்பட்டவர்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் ஆதிக்கம் மற்றும் வலிமையைக் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் சார்ந்த கூட்டத்தில் எப்போதும் விதிகளை உருவாக்குவார்கள். மேஷ ராசி பெண்கள் தங்களிடம் உள்ள சக்தியை முழுமையாக அறிந்தவர்கள், அதை மிகுந்த விவேகத்துடனும் அக்கறையுடனும் பயன்படுத்துகிறார்கள். பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் அவர்கள் எதையும் செய்யம் மாட்டார்கள். அவர்கள் ராணி போன்ற கட்டுப்படுத்தும் ஆற்றலை அனைவரும் பிரமிப்புடன் பார்ப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் தன்னம்பிக்கையும், மனஉறுதியும் கொண்டவர்கள். தனக்காகவும், தான் நேசிப்பவர்களுக்காகவும் நிற்கும் துணிவும் தைரியமும் கொண்டவர்கள். இருப்பினும், அவர்களின் கடுமையான வெளித்தோற்றத்திற்கு பின்னால் மென்மையான இதயம் என்று இருக்கிறது. அவர்கள் அக்கறையுடனும் அன்புடனும் இருப்பார்கள், தேவைப்படுபவர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

மிதுனம்
மிதுன ராசி பெண்கள் படைப்பாளிகள் மற்றும் சிந்தனையாளர்கள். அவர்களுடைய கற்பனை ஆற்றல் அவர்களை பல உயரத்திற்கு அழைத்து செல்லும். தங்களின் கற்பனைகளை நிஜமாக மாற்றும் ஆற்றல் அவர்களுக்கு உள்ளது. அவர்கள் ஆதிக்கம் செலுத்த விரும்புவதில்லை, அதற்காக அவர்கள் பலவீனமானவர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் தங்கள் பலத்தை கவனமாக பயன்படுத்தக் கூடியவர்கள்.

கடகம்
கடக ராசி பெண்கள் ஒரு நடமாடும் புதிர் போன்றவர்கள். அவர்கள் ஒருபுறம் கடுமையானவர்களாக உணர்ச்சிவசப்படுகிறார்கள், மறுபுறம் தாராளமாகவும் அக்கறையுடனும் இருக்கிறார்கள்ள். அவர்கள் மனதில் எப்போதும் மாயக்குழப்பம் எப்போதும் இருக்கும். ஒரு தோழியாகவும் காதலியாகவும், அவர்கள் எப்போதும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள் துரோகத்தை எதிர்கொள்ளும் போது மட்டுமே அவர்கள் தங்கள் கோபத்தை காட்டுகிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் உலகின் தலைசிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் மற்றும் தலைவர்கள். அவர்களின் இலக்குகளை அடையும் பயணத்தில் அவர்கள் எதையும் நிறுத்த மாட்டார்கள். அவர்களின் இயக்கம் எப்போதும் வேகமாக இருக்கும், மேலும் அது அவர்களின் சிறந்த செயல்திறனுடன் பொருந்துகிறது. இந்த பெண்கள் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி, மற்றவர்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் தோல்வியுற்றால், அவர்கள் கருணை மற்றும் கண்ணியத்துடன் தோல்வியடைகிறார்கள். சிம்ம ராசி பெண்கள் அடக்கம் மற்றும் நல்லொழுக்கத்தின் சரியான கலவையாக இருப்பார்கள், இது பலரிடம் இல்லாத குணமாகும்.

கன்னி
கன்னிப் பெண்கள் நற்குணங்கள் நிறைந்தவர்கள். எளிதான விஷயமா அல்லது சரியான விஷயமா என்றால் அவர்கள் சரியான விஷ்யத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்த பெண்கள் தேவதை ஆன்மாக்களைக் கொண்டவர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையில் ஒரு கன்னி ராசி பெண் இருப்பது உண்மையில் ஆசீர்வாதம். அவர்கள் இயல்பிலேயே அன்பானவர்கள், கனிவானவர்கள், உதவி செய்பவர்கள். அவர்கள் காயப்பட்டாலும் கூட, அவர்கள் எப்போதும் தங்களுக்காக போராடுகிறார்கள்.

துலாம்
துலாம் ராசி பெண்கள் புத்திசாலித்தனமான மற்றும் நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்கள். அவர்களின் உயர் மட்ட புரிதல் மற்றும் புத்திசாலித்தனம் அவர்களின் நகைச்சுவை உணர்வுடன் கைகோர்க்கிறது. துலாம் ராசி பெண்கள் வாழ்க்கையை கண்ணியத்துடனும் சமநிலையுடனும் அணுகுகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவதுமிகவும் அரிது. அவர்கள் நம்பிக்கையுடன் பிரகாசிக்கிறார்கள், அதுதான் அவர்களை சாதாரண பெண்களிடமிருந்து பிரிக்கிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் விழிப்புடன், கூர்மையாக இருக்கிறார்கள், அவர் யார், அவர் என்ன விரும்புகிறார் என்பது அவர்களுக்கு எப்போதும் தெரியும். அவர்கள் எல்லோரிடமும் நேர்மையானவராக இருக்கிறார்கள், அதனால் மற்றவர்கள் காயப்பட்டாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. நேர்மையான பேச்சாளர்கள் மற்றும் உணர்ச்சிமிக்க காதலர்கள், இவர்கள் ஒருபோதும் பொய்களில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.

தனுசு
தனுசு ராசி பெண்கள் நம்பமுடியாத அளவிற்கு உணர்திறன் உடையவர்கள், மேலும் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நன்கு புரிந்துகொள்கிறார்கள். இந்த பெண்கள் இரக்கமுள்ளவர்களாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனென்றால், மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக, அவர்கள் தங்களை மற்றவர்களின் இடத்தில் பொருத்தி பார்ப்பார்கள். ஆனால், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவர்கள் கஞ்சத்தனமாகவும், பாதுகாப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சிலரை மட்டுமே அவர்களின் உண்மையான இயல்பை பார்க்க அனுமதிக்கிறார்கள்.

மகரம்
மகர ராசிப் பெண்கள் இயல்பிலேயே சுதந்திரமானவர்கள் மற்றும் சுய விழிப்புணர்வு உடையவர்கள். அவர்கள் தங்கள் சுய உணர்வை முழுமைப்படுத்தியிருக்கிறார்கள், எனவே அவர்கள் யார் என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள், இதனால் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

கும்பம்
கும்ப ராசி பெண்கள் கனவு காண்பவர்கள் மற்றும் போராளிகள். கும்ப ராசிப் பெண்கள் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்களாகவும், தங்கள் லட்சியங்களை அடைவதில் அமைதியற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் கம்பீரம் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும். அதிக லட்சியம் மற்றும் வேகமாக செயல்படும் அவர்கள் விரும்பினால் உலகை நகர்த்தவும் வடிவமைக்கவும் கூடியவர்கள்.

மீனம்
இந்த பெண்கள் நேர்மை மற்றும் பெருந்தன்மை நிறைந்தவர்கள். அவர்களின் உண்மையான இயல்பு அன்பில் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிக உணர்ச்சி மற்றும் உணர்திறன் உடையவர்கள், ஆனால் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அமைதியாக தங்கள் போர்களில் பங்கேற்பார்கள், மேலும் அவர்கள் காயப்பட்டதை மற்றவர்களிடம் காட்டுவதை விட சாவதையே விரும்புவார்கள். மீன ராசி பெண்கள் இந்த உலகிற்கு அதிகம் தேவைப்படும் குணங்களைக் கொண்டவர்கள்.



Click it and Unblock the Notifications











