For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்தர் துறவறம் சென்ற பிறகு அவரது மனைவிக்கு நேர்ந்த துயரங்கள் என்னென்ன தெரியுமா?

சித்தார்த்தர் புத்தராக மாறிய கதைதான் நமக்குத் தெரியும், ஆனால் அவர் துறவறம் சென்ற பிறகு அவரின் மனைவியும், குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்றாகும்.

|

இன்று உலகில் பல கோடி மக்கள் பின்பற்றும் மதமாக புத்த மதம் இருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் புத்தரையும், அவரின் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அரச குடும்பத்தில் பிறந்த சித்தார்த்தர் போதி மரத்திற்கு அடியில் ஞானம் பெற்ற பிறகு கௌதம புத்தராக மாறி துறவறம் பூண்டார்.

what happened to yasodhara after Buddha abandoned her

சித்தார்த்தர் புத்தராக மாறிய கதைதான் நமக்குத் தெரியும், ஆனால் அவர் துறவறம் சென்ற பிறகு அவரின் மனைவியும், குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்றாகும். புத்தர் துறவியாக மாறிய பின் அவரின் குடும்பத்திற்கு என்ன ஆனது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளவரசி யசோதாரா

இளவரசி யசோதாரா

இக்ஷ்வாகு வம்சத்தின் சந்ததியினரான கோலியா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் சுபாபுதா மற்றும் ராணி பமிதா அவர்களின் மகள்தான் யசோதாரா ஆவார். யசோதாரா என்பதன் பொருள் அன்பு மற்றும் அழகாகும், பெயருக்கேற்றார் போல அனைத்து நல்ல குணங்களும் கொண்டவராக இளவரசி யசோதாரா இருந்தார்.

புத்தரின் பிறப்பு

புத்தரின் பிறப்பு

லும்பினியின் தோட்டத்தில், சால் மரத்தின் கீழ், இளவரசர் சித்தார்த்தர், மாயாதேவி மகாராணி மற்றும் இக்ஷ்வாகு வம்சத்தின் மற்றொரு வம்சாவளியான ஷாக்யா குலத்தின் மன்னர் உத்தோதனா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

மாயாதேவியின் கனவு

மாயாதேவியின் கனவு

மாயாதேவி கருவுற்று இருந்த போது ஆறு தந்தங்களுடன் உடைய ஒரு வெள்ளை யானையை கனவில் கண்டதாகவும் அது அவரின் வயிற்றில் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.

MOST READ: இந்த ராசிக்காரங்க அவ்வளவு சீக்கிரம் காதலில் விழுந்தர மாட்டங்களாம்... யார் அந்த ஸ்ட்ராங் ராசிக்காரங்க

சித்தார்த்தர் மற்றும் யசோதாராவின் திருமணம்

சித்தார்த்தர் மற்றும் யசோதாராவின் திருமணம்

கோலியா மற்றும் ஷாக்யா வம்சங்களுடன் பொருந்தக்கூடிய அரச குடும்பங்கள் இல்லாததால், அவர்கள் தங்களுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். மேலும், அந்த புரிதலுடன், யசோதரா தனது உறவினர் இளவரசர் சித்தார்த்தாவை 16 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

இராஜ்ஜிய பரிபாலனம்

இராஜ்ஜிய பரிபாலனம்

யசோதரா தனது கணவரின் இராஜ்ஜிய பணிகளையும், செயல்பாடுகளையும், மனநிலையையும் தொடர்ந்து கவனித்து வந்தார். தனது கணவர் சாதாரண மனிதர்களின் துன்பங்களை தெரிந்து கொள்ள வெளியில் சென்ற போதெல்லாம் இவரும் அவருடன் வெளியில் சென்றார். மனிதர்களின் துன்பங்களை பற்றி இவர்கள் இருவரும் நிறைய விவாதிப்பார்கள்.

யசோதராவின் போராட்ட தொடக்கம்

யசோதராவின் போராட்ட தொடக்கம்

அரச வாழ்க்கை மற்றும் உலக இன்பங்களை விட்டுக்கொடுக்க தயாரான சித்தார்த்தரின் நடவடிக்கையின் விளைவுகளை யசோதராவின் தந்தை அறிந்தார், அதனால் அவர் தனது மகளை எச்சரித்தார். யசோதராவும் தான் கணவருக்கு சாதாரண மனிதர்களின் வாழ்வு மீதிருந்த நாட்டம், வயதாவது, நோய் போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இருந்த ஆர்வம் போன்றவற்றை நன்கு அறிவார்.

ராகுலாவின் பிரபு

ராகுலாவின் பிரபு

திருமணமாகி கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு, யசோதரா அவர்களின் ஒரே மகனைப் பெற்றெடுத்தபோது, சித்தார்த்தர் தனது அரச வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார். அவர் தனது மகனுக்கு ராகுலா என்று பெயரிட்டார், இதன் பொருள் ‘தடை" என்பதாகும். ஏனெனில் மகன் தன்னை மனைவியுடன் பிணைத்து, அறிவொளியைத் தேடுவதைத் தடுக்கும் தடையாக இருப்பான் என்று அவர் உணர்ந்தார்.

MOST READ: கைய எவ்வளவு நேரம் கழுவனும் தெரியுமா? இவ்வளவு நேரத்துக்கு கம்மியா கழுவுனா ஆபத்துதான்...!

சித்தார்த்தரின் துறவறம்

சித்தார்த்தரின் துறவறம்

சித்தார்த்தா தன்னையும் தனது மகனையும், அரச வாழ்க்கையையும், தனது வாழ்க்கையை விட்டு வெளியேறுவார் என்று யசோதராவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் அதிர்ச்சியடையவில்லை. இந்த நிகழ்வுக்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டார், தனது கணவரின் முடிவை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலான பெண்ணாக அவர் இருந்தார்.

யசோதராவின் போராட்டம்

யசோதராவின் போராட்டம்

பரிதாபத்துடன் தன்னிடம் வந்த அனைவருக்கும், "வாழ்க்கையில் பெரிய விஷயங்களைப் பெறுவதற்கு நாம் சிறிய விஷயங்களை இழக்க வேண்டும்" என்ற ஒரே ஒரு பதில் மட்டுமே இருந்தது. சித்தார்த்தா தன்னுடன் இல்லாத ஆறு ஆண்டுகளும் யசோதரா அரச வாழ்வை தவிர்த்து வாழ்ந்தார். அரச உடையை தவிர்த்து, தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வாழ்ந்து வந்தார். இராஜ்ஜிய அறையை தவிர்த்து தரையில் படுத்து உறங்கினார், சித்தார்தரின் குணங்களை தனது மகனுக்கு போதித்தார்.

மன்னர் உத்தோதனா

மன்னர் உத்தோதனா

கணவர் ஞானத்தை அறிவொளியைத் தேடிக்கொண்டிருந்தபோது, யசோதரா தனது சொந்த அறிவை அரண்மனைச் சுவர்களுக்குள் புகுத்திக் கொண்டிருந்தார். மக்களின் துயரங்களை போக்குவதற்கு தனது மாமனாருக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

புத்தரின் வருகை

புத்தரின் வருகை

புத்தராக மாறிய சித்தார்த்தர் ஒருபோதும் தன்னிடமும் தனது குழந்தையிடமும், ஒரு கணவராகவோ, தந்தையாகவோ அல்லது இராஜ்ஜியத்திற்கு வலிமைமிக்க ராஜாவாகவோ அவர் திரும்ப மாட்டார் என்ற உண்மையை அவர் அறிந்திருந்தார். ஆனால் ஒருநாள் அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று அவர் நினைத்தார்.

MOST READ: கன்னத்தில் குழி விழுந்தா மட்டுமில்ல குழி இருக்கிற பொண்ண கல்யாணம் பண்றதும் அதிஷ்டமாம் ஏன் தெரியுமா?

யசோதராவும் ராகுலும் புத்தரை பார்த்தார்கள்

யசோதராவும் ராகுலும் புத்தரை பார்த்தார்கள்

யசோதரா எதிர்பார்த்த அந்த நாள் விரைவில் வந்தது, மன்னர் உத்தோதனரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் தனது நூற்றுக்கணக்கான சிஷ்யர்களுடன் அரண்மனைக்கு வந்தார். பிச்சை எடுக்கும் கிண்ணத்துடன் துறவியாக உடையணிந்த தங்கள் இளம் இளவரசனைக் கண்டு சித்தார்த்தாவின் பெற்றோர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

யசோதரா இறுதியாக புத்தரை சந்தித்தார்

யசோதரா இறுதியாக புத்தரை சந்தித்தார்

எல்லோருடைய எதிர்பார்ப்பையும் போலல்லாமல், யசோதரா தனது கணவரை வாழ்த்த அரண்மனை வாசலில் தோன்றவில்லை. தன்னுடைய தியாகங்களை பற்றி அவர் அறிந்திருப்பார் என்றார் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே அவருக்காக குடிசையில் அவர் காத்திருந்தார். புத்தர் அவரை பார்க்க வந்த போது தன்னையும் அவருடனேயே அழைத்துச் செல்லும்படி அவர் கூறினார்.

புத்தர் மனைவியையும், மகனையும் அழைத்து சென்றார்

புத்தர் மனைவியையும், மகனையும் அழைத்து சென்றார்

புத்தர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தன் மகன் ராகுலாவை அவரிடம் அழைத்துச் சென்றார். அவரின் குணங்களை மகனுக்கும் கற்றுத்தரும்படி கூறினார். அவர் தன் மனைவியையும், மகனையும் சுயத்தை உணரும் பாதையில் அழைத்துச் சென்றார். அவரது தந்தையும் தாயும் தங்கியிருந்து அவர் காட்டிய பாதையில் செல்ல முடிவு செய்தனர்.

யசோதரா பிக்குனியாக மாறினார்

யசோதரா பிக்குனியாக மாறினார்

யசோதரா, விரைவில் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் வரிசையில் சேர்ந்து தன்னை அரஹந்த்ஷிப்பைப் பெற்றார், அவளும் ஒரு பிக்குனியாக மாறினார்.

MOST READ: மனைவிய சந்தோஷமா வைச்சுக்கறது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே...!

இளவரசி யசோதராவின் வீரம்

இளவரசி யசோதராவின் வீரம்

யசோதராவின் ஞானம் அரஹந்தின் கணக்குகள் யசோதராவின் கடைசி சுயசரிதை யசோதரபதானாயா என்ற தலைப்பில் காணப்படுகின்றன. அவரும் ஒரே நாளில் பிறந்த புத்தரும் ஒரே நாளில் இறந்துவிடுவார்கள் என்பதை யசோதரா உணர்ந்தபோது, அது அனைவருக்கும் தாங்க முடியாத மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்று அவர் உணர்ந்தார்.

யசோதராவின் மரணம்

யசோதராவின் மரணம்

எனவே அவர் குறிப்பிட்ட நாளில் இறப்பதற்கு முடிவெடுத்துவிட்டு புத்தரிடம் " இதுதான் நான் உங்களை பார்க்கும் கடைசி முறை என்றும், நான் வாழ்வின் மறுபக்கத்தை பார்த்துவிட்டேன் " என்றும் கூறினார். அதன்பின் கூட்டத்தை நோக்கி தான் எவ்வளவு வலிமை வாய்ந்த பெண்ணாக இருந்தேன் என்றும் புத்தருக்கு தான் எப்படி உறுதுணையாக இருந்தேன் என்பது பற்றியும் கூறினார்.

MOST READ: அசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க? அப்ப உங்க கிட்னிய பத்திரமா பாத்துக்கோங்க...!

யசோதராவின் பெருமைகள்

யசோதராவின் பெருமைகள்

யசோதராவின் மனதிடம் மிகவும் உறுதியானது ஆகும். புத்தர் அவரை விட்டு பிரிந்த பிறகு பல இளவரசர்கள் யசோதராவை மணந்து கொள்ள தயாராய் இருந்தனர். ஏனெனில் யசோதரா அழகில் அவ்வளவு சிறந்தவராக விளங்கினார். ஆனால் யசோதரா அவர்கள் யாரையும் திரும்பி பார்க்கவில்லை. புத்தரின் தந்தை தனது மகன் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க அடிக்கடி இடைவெளியில் தூதர்களை அனுப்புவார் என்று கதை செல்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happened To Yasodhara After Buddha Abandoned Her?

Read to know what happened to yasodhara after Buddha abandoned her.
Desktop Bottom Promotion