Just In
- 3 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 3 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 4 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 4 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Finance
870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!
- News
"முடியாது".. கண்டிப்பாக சொன்னா அமித் ஷா? கொங்கில் என்ன நடக்கும்? எடப்பாடிக்கு எல்லா பக்கமும் இடி!
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Movies
மச்சான்ஸ்க்கு குட் நியூஸ்..இரட்டை குழந்தைகளுடன் கோவிலில் வலம் வந்த நமீதா!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த விரல் நீளமாக இருக்கும் ஆண்கள் பெண்களை மோசமாக நடத்துவார்களாம்...!
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி நமது உடலின் ஒவ்வொரு பாகங்களும் நம்மை பற்றிய பல ரகசியங்களை சுமந்து கொண்டுள்ளது. அதனை சரியாக புரிந்து கொள்வது நமது கைகளில்தான் உள்ளது. நம்மை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ள ஜாதகம்தான் பார்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆண்களின் கைகள் அவர்களைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களை கூறும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆண்களின் விரல்களே கட்டிக்கொடுத்துவிடும்.
பண்டைய காலங்களில் இருந்தே பல்வேறு சாஸ்திரங்கள், நாடி ஜோதிடம், முக வாசிப்பு உள்ளிட்ட உடல் பகுப்பாய்வை விரிவாக விளக்கியுள்ளன.உடல் அம்சங்களைப் பற்றிய அறிவை பரவலாக உள்ளடக்கிய நூல் என்றால் அது சாமுத்ரிகா சாஸ்திரமாகும். இந்த பதிவில் பெண்களுக்கு எதிரான ஆண்களின் குணம் எப்படியிருக்கும் என்பதை அவர்களின் விரல்களை வைத்து எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஆள்காட்டி விரல்
ஒரு ஆணின் ஆள்காட்டி விரல் மற்ற விரல்களை விட நீளமானது, வினோதமான தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இவர்கள் பெண்களிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும், வன்முறையாகவும் நடந்து கொள்வார்கள். அவரது மனைவி உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பல துன்பங்களுக்கு ஆளாவார்கள்.

வீங்கிய விரல்கள்
விரல்களின் நுனிப்பகுதிகள் வீங்கியிருந்தால், அந்த நபர் ஒரு திருடனின் பண்புகளை வைத்திருப்பார் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களிடம் இருந்தும் அனைத்து ரகசியங்களையும் மறைப்பார்கள்.

சமநீளமுள்ள விரல்
சம நீளமுள்ள மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களைக் கொண்ட ஆண்கள், ஒரு கவர்ச்சியின் ஆளுமை கொண்டவர்கள், இது குறிப்பாக மற்றும் வேண்டுமென்றே பெண்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் கவனத்துடன், கண்ணியமாக இருப்பார்கள், இது அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கும்.
MOST READ: நீங்க சாதாரணமா நினைக்கிற இந்த பிரச்சினைகள் இந்த ஆபத்தான புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாம்...!

நீளமான மோதிர விரல்
நீளமான மோதிர விரல் கொண்ட ஆண்கள் மிகவும் ஆக்ரோஷமான தன்மையைக் கொண்டிருப்பார்கள் மற்றும் குழப்பமான ஆளுமையை வளர்த்துக் கொள்வார்கள், இது அவர்களின் துணை மற்றும் திருமண வாழ்க்கைக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். மோதிர விரல் டெஸ்டோஸ்டிரோனுடன் இணைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இவர்கள் அதிக ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள்.

கையின் பின்புறம்
உள்ளங்கைகளின் பின்புறம் அல்லது கைமுட்டிக்கு அருகில் அடர்த்தியான கருப்பு முடிகள் கொண்ட ஆண்கள், மற்ற ஆண்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் செய்யும் எந்தவொரு முயற்சியிலும் மிகவும் துரதிர்ஷ்டம் நிறைந்தவராக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட விரல்
விரல்கள் முட்டிவரை தடிமனாக இருக்கும் ஆண்கள் இராஜவாழ்க்கை வாழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது எப்போதும் இவர்கள் அருகில் இருக்கும். வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சியையும், ஆடம்பரத்தையும் அனுபவிப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் மனைவியை ராணி போல பார்த்துக் கொள்வார்கள்.

நெருக்கமான விரல்
ஆணின் கைரேகை மணிக்கட்டில் தொடங்கி ஆள்காட்டி விரல் வரை மேலே சென்றால் அவர்கள் மிகப்பெரிய நில உரிமையாளராக இருப்பார். மேலும் விரல்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்தால் அவர்கள் நிலங்கள், வீடுகள் முதல் கார்கள் வரை, பல்வேறு வங்கிக் கணக்குகள் போன்ற பல விஷயங்களை அவர்கள் வைத்திருப்பார்கள்.
MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஆபத்தானவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்... உஷாரா இருங்க...!

கூரான விரல்
ஒரு ஆணின் விரல் ஏற்ற இரக்கங்கள் இல்லாமல் கூராக இருந்தால் அவர்கள் அதீத புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் புத்திக்கூர்மை மூலம் தங்களுக்கு தேவையானவற்றை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் நேர்மை இவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துத்தரும்.