Just In
- 25 min ago
இந்த 3 ஹார்மோன்கள்தான் பெண்களுக்கு பாலியல் ஆசை குறைய காரணமாம்... உடனே இத சரி பண்ணுங்க...!
- 1 hr ago
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- 2 hrs ago
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- 2 hrs ago
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
Don't Miss
- News
10 நாட்களுக்கு ரூ.54 லட்சம்.. சொகுசு கப்பல் இல்லீங்க.. மருத்துவமனை பில்தான் இது.. ஷாக்கான நோயாளி!
- Finance
வேண்டாம் என அனுப்பிய USA நிறுவனங்கள்.. அமெரிக்காவில் தான் இருப்போம்.. அடம்பிடிக்கும் ஊழியர்கள்!
- Automobiles
கார்களையே தூக்கி சாப்பிடும் வசதி! புதிய ஹோண்டா ஆக்டிவா விலை இவ்ளோதானா! இந்த மாதிரி ஒரு ஸ்கூட்டரை பாத்ததே இல்ல!
- Technology
OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!
- Movies
கல்யாணம் தான் ஆச்சு..வயசு இன்னும் ஆகல... ஓவர் கவர்ச்சி காட்டும் ஹன்சிகா மோத்வானி!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
திருமணம் கனவில் வருவது நல்லதா? திருமணம் குறித்த கனவுகளின் அர்த்தம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் உண்மையான காதலைச் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள் மற்றும் மிகவும் சிறிய அளவிலோ அல்லது பிரமாண்டமான திருமண விழாவில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
சில நேரங்களில் நாம் இந்த அதிர்ஷ்டமான நாளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம், அதைப் பற்றி கனவு காண்கிறோம். நாம் கனவு காணும் போது பலவிதமான காட்சிகள் நம் மனதில் தோன்றி, இந்த கனவு எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. திருமணங்கள் மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பல்வேறு வகையான கனவுகளின் அர்த்தம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கிளாக இருக்கும்போது திருமணம் பற்றி கனவு காண்பது
நீங்கள் சிங்கிளாக இருந்தால், திருமணத்தைப் பற்றிய கனவு உங்கள் மனதில் தோன்றினால், நீங்கள் ஒரு பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். அது உறவுகள், தொழில் அல்லது வேறு ஏதேனும் முக்கிய வாழ்க்கை முடிவாக இருக்கலாம்.

உங்கள் காதலன்/காதலியுடன் திருமணம் செய்துகொள்வது போல கனவு காண்பது
இது உங்கள் உறவு வலுவாக முன்னேறி வருகிறது என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் அளவிற்கு உறவில் ஈடுபட முடிவு செய்தால், உங்கள் துணையிடம் அதனை நீங்கள் தெரிவித்து விடுங்கள். உங்கள் துணையுடன் இதைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

திருமண ஏற்பாடுகள் பற்றிய கனவுகள்
இது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஏதோவொன்றைப் பற்றி நீங்கள் கடுமையாக மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். திருமணத்திற்குத் தயாராவது மிகவும் அழுத்தமான செயலாகும், இது உங்களை முழுவதுமாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்துடன் நேரடியாக தொடர்புடையது.

உங்கள் துணைக்கு பதிலாக வேறொருவரை திருமணம் செய்வது போல கனவு காண்பது
உங்கள் தற்போதைய துணையைத் தவிர வேறு ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வது போல நீங்கள் கனவு கண்டால், உங்கள் கனவில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நபரின் குணங்கள் மற்றும் பண்புகளைக் கொண்ட ஒருவருடன் நீங்கள் ஆழ் மனதில் இருக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உறவில் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

மற்றவர்களின் திருமணத்தை கனவில் காண்பது
இதற்கு நீங்கள் சில நடவடிக்கை அல்லது பொறுப்பை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது உங்கள் குடும்பத்தில் அல்லது நண்பர்களுடன் நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம், நீங்கள் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

திருமணத்தைப் பற்றி கனவு கண்டால் கவலைப்பட வேண்டாம்
உணர்ச்சிப்பூர்வ கடமைகளின் பயம் காரணமாக பலர் திருமணத்தைப் பற்றி கனவு காணும்போது குழப்பமும் மன அழுத்தமும் அடையலாம். இது உங்கள் வாழ்க்கையில் சில சூழ்நிலைகளுடன் தொடர்புடையது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை.