Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இந்த வகை உதடுகள் இருப்பவர்கள் சிறந்த பெற்றோர்களாக இருப்பார்களாம் தெரியுமா?
நமது உடலில் இருக்கும் பாகங்கள் நமது ஆளுமையின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்புள்ளது. உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ஒருவரின் உண்மையான குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இந்த உலகத்தில் மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் தோற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நமது தோற்றம் என்பது புற அழகு மட்டுமின்றி அக அழகின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. நமது உடலில் இருக்கும் பாகங்கள் நமது ஆளுமையின் வெளிப்பாடாக இருக்க வாய்ப்புள்ளது. உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ஒருவரின் உண்மையான குணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

பண்டைய கால முறைகளான சீனாவின் முகவாசிப்பு மற்றும் கைரேகை போன்றவை ஒருவரின் ஆளுமையை அறிந்து கொள்ள உதவுபவதாக இருக்கிறது. அதேசமயம் விஞ்ஞானத்தின் படியும் விரல் நீளத்தை டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் கருவுறுதல் விகிதங்களுடன் இணைத்துள்ளது. உங்கள் தலை முதல் கால் வரை இருக்கும் பாகங்கள் உங்களைப் பற்றி சொல்லும் ரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நெற்றி
பரந்து விரிந்த நெற்றி உங்களுக்கு இருந்தால் நீங்கள் புத்திசாலி மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் விரைவானவர் என்று பொருள். நீங்கள் ஒரு குறுகிய நெற்றியைப் பெற்றிருந்தால், நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆழமான சிந்தனையாளராக இருப்பீர்கள். வளைந்த நெற்றிகள் மகிழ்ச்சியான, கற்பனைசக்தி அதிகமிருக்கும் வகைகளைச் சேர்ந்தவை. மேடுகள் இருக்கும் நெற்றி இருந்தால் அவர்கள் அடுத்தவர்கள் மீது அக்கறை அதிகமுள்ள ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

கண்கள்
நீல நிறக்கண்கள் இளமை, அப்பாவித்தனம் மற்றும் அமைதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ப்ரவுன் நிற கண்கள் கொண்டவர்கள் மனமுதிர்ச்சியும், நம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பச்சை நிற கண்கள் கொண்டவர்கள் படைப்பாற்றலும், மர்மங்களும், பொறாமை குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சாம்பல் நிற கண்கள் கொண்டவர்கள் அறிவும், ஞானமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

காது
டைமண்ட் வடிவ காதுகள் உள்ளவர்கள் மர்மமானவர்கள் மற்றும் அடிக்கடி மாறும் மனநிலையுள்ளவர்கள். செவ்வக காதுகள் உள்ளவர்கள் நம்பகமானவர்கள் மற்றும் நிலையானவர்கள், அதே சமயம் சுற்று காதுகள் நன்றாக பழகும் மற்றும் நேசமான வகைகளைச் சேர்ந்தவை. உங்கள் காது குழலுடன் இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு திடமான மற்றும் நம்பகமான ஆளுமை கொண்டவர், அது பிரிக்கப்பட்டால் நீங்கள் சுதந்திரமான உற்சாகமானவர் மற்றும் கணிக்க முடியாதவர்.

மூக்கு
ஆச்சரியப்படுவதற்கில்லை, பெரிய மூக்கு ஒரு பெரிய மற்றும் லட்சிய ஆளுமையை குறிக்கிறது, அதே நேரத்தில் சிறிய மூக்கு கொண்ட மக்கள் இனிமையானவராகவும், தாராள குணம் கொண்டவராகவும் இருப்பார்கள். அறியப்படுகிறார்கள். நீளமான மூக்கு இருந்தால், நீங்கள் சுறுசுறுப்பானவராக இருப்பீர்கள். அதேசமயம் உள்நோக்கிய மூக்கு அமைதியான நடைமுறையை குறிக்கிறது.

உதடுகள்
மேலும், கீழும் ஒரே வடிவில் இயற்கையான குமிழுடன் முழு உதடுகளைக் கொண்டவர்கள் பச்சாதாபம், அக்கறை மற்றும் சிறந்த பெற்றோர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. மெல்லிய உதடு கொண்டவர்கள் அதிக சுதந்திரமானவர்களாகவும், ஆழமான சிந்தனையாளர்களாகவும் உள்ளனர். உங்களிடம் கூர்மையான மன்மதனின் வில் இருந்தால் (மேல் உதட்டில் இரண்டு கோண சிகரங்கள்), நீங்கள் ஒரு அற்புதமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களிடம் வட்டமான மன்மத வில் (மேல் உதட்டில் இரண்டு மென்மையான வளைவுகள்) இருந்தால் நீங்கள் மென்மையான, காதல் ஆளுமை பெற்றிருக்கிறீர்கள்.

விரல்கள்
உங்கள் மோதிர விரல் உங்கள் ஆள்காட்டி விரலை விட நீளமாக இருந்தால், இதன் பொருள் நீங்கள் அழகானவர், கவர்ந்திழுக்கும் மற்றும் உறவுகளை வழிநடத்துவதில் சிறந்தவர். உங்கள் ஆள்காட்டி விரல் உங்கள் மோதிர விரலை விட நீளமாக இருந்தால் நீங்கள் ஒரு எதார்த்தமானமற்றும் நல்ல தலைவராக இருப்பீர்கள். உங்கள் ஆள்காட்டி மற்றும் மோதிர விரல்கள் ஒரே நீளமாக இருந்தால், நீங்கள் இரக்கத்தையும் அரவணைப்பையும் வெளிப்படுத்துகிறீர்கள், மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறீர்கள்.

பாதம்
உங்கள் கால்விரல்கள் பெரியதாக இருந்து சிறியதாக சாய்ந்திருந்தால், உங்களுக்கு ஒரு பொதுவான கால் கிடைத்துள்ளது, அதாவது நீங்கள் நன்கு சீரான மற்றும் திறந்த மனதுடையவர். உங்கள் இரண்டாவது விரல் மற்றவற்றை விட நீளமாக இருந்தால், நீங்கள் ஒரு நெருப்பு கால் வைத்திருக்கிறீர்கள், அதாவது நீங்கள் சுறுசுறுப்பானவர். உங்கள் பாதம் அனைத்து பக்கத்தில் இருந்தும் ஒரே மாதிரி சதுரமாக இருந்தால் இது எதார்த்தம் மற்றும் புத்திக்கூர்மையின் அடையாளாகும்.

மச்சம்
உங்கள் நெற்றியின் மேல் இருக்கும் ஒரு மச்சம் செல்வம் மற்றும் ஞானத்தின் அடையாளமாகும். தாடையில் மச்சம் இருப்பவர்கள் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் மென்மையான, நேர்மையான மற்றும் பிறரின் மீது அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். மூக்கின் மேல் மச்சம் உள்ளவர்கள் தைறியமானவர்களாக இருப்பார்கள், இது அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்கும். கைகளில் மச்சம் உள்ளவர்கள் சிறந்த உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்று அர்த்தம். காலில் மச்சம் உள்ளவர்கள் அதிக பயணம் செய்பவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications