For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மற்றவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் நம் மீது படாமல் இருக்க என்ன செய்யணும்?

|

மற்றவர்களின் வயிற்றெரிச்சலும் கண் திருஷ்டியும் நம் மீது விழாமல் இருக்க, ஒரு வெள்ளைத் துணியில், காய்ந்த மிளகாய், பச்சை கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, கொஞ்சம் வெண்கடுகு, கூடவே முச்சந்தியில் இருக்கும் மண் என இவை அனைத்தும் எடுத்து வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். கட்டிய மூட்டையை, யாருக்கு திருஷ்டி பரிகாரம் செய்யவேண்டுமோ அவர்களின் தலையை இடவலமாக மூன்று முறையும் வலம் இடமாக மூன்று முறையும் சுற்றி, கை கால் என உடல் பாகங்களையும் வெள்ளை மூட்டையால் தடவி, பின்னர் மூன்று முறை தூ..தூ...தூ என துப்பிவிட்டு, உடனடியாக முச்சந்திக்கு வந்து அந்த மூட்டையை நல்லெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடவேண்டும்.

What Can We Do To Prevent The Kan Thirusti

கல்லடி பட்டாலும் படலாம், ஆனால் கண்ணடி படவே கூடாது என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். சில நபர்கள் பார்க்கும் பார்வையினாலேயே அவருக்கு எதிரில் நிற்பவருக்கு உடனடியாக வயிற்று வலி, தலைவலி, உடல் சோர்வு என உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டுவிடும். அது தான் அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலின் சக்தி.

அதிலும், நமக்கு வேண்டாத சில பேர் நம்மை பார்த்து ஹூம்... என்று ஒரு பெருமூச்சு விட்டு தலையை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு திரும்பி சென்றால், அந்த நிமிடமே நம்முடைய வயிற்றில் புளியைக் கரைத்து பேதியாவது போல் இருக்கும். அது தான் வயிற்றெரிச்சல், கண் திருஷ்டியின் அபார சக்தியாகும். இந்த விஷயம் நாத்திகவாதிகளுக்கு வேண்டுமானால் அது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் ஆத்திகவாதிகளைப் பொருத்தவரையில் அது நூற்றுக்கு நூறு உண்மை என்று தான் சொல்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றெரிச்சலின் பாதிப்பு

வயிற்றெரிச்சலின் பாதிப்பு

ஒருவர் குடும்பம், குழந்தை குட்டிகள், வேலை வாய்ப்பு, தொழிலில் நல்ல லாபம், அந்தஸ்து என சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருப்பார். திடீரென ஒரு நாள், பார்க்கும் வேலையை இழந்து, அல்லது தான் செய்து வரும் தொழில் நலிவுற்று, ஆளும் பார்ப்பதற்கு மெலிந்து போய் முகத்தில் தாடியுடன் காணப்படுவார். அதைப்பார்த்து அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் சொல்லும் முதல் வார்த்தை என்ன தெரியுமா?, பாவம் மனுஷன், அவர் வாழ்க்கையில் குழந்தை, குட்டிகள் என எல்லாமே நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இப்போது எல்லாத்தையும் இழந்து தனிமரமா நிக்குறாரு என்று அங்கலாய்ப்பார்கள்.

திருஷ்டி கழித்தல்

திருஷ்டி கழித்தல்

அந்த அளவுக்கு கண் திருஷ்டியும், அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலும் ஒருவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் சக்தி கொண்டது. இன்றைக்கும் கிராமங்களில் ஒரு பழக்கம் உண்டு. ஒருவருடைய குழந்தையை, வேண்டாதவர்கள் யாராவது பார்த்தாலோ அல்லது தொட்டு தூக்கினாலோ, அவர்கள் போனவுடனே, அந்த குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். அல்லது குழந்தையை தூக்கியவர்களின் காலடி மண்ணை எடுத்துவந்து அந்த குழந்தைக்கு திருஷ்டி சுற்றி, அருகில் உள்ள முச்சந்தியில் போய் திருஷ்டி கழிப்பார்கள்.

அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல்

அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல்

அதேபோல், வெளியூர்களில் வேலை, தொழில் என்று நல்ல நிலையில் இருப்பவர்கள் ஊருக்கு சென்றால், அன்றைக்கு இரவு, அவர்களின் வீடுகளில் திருஷ்டி சுற்றிப்போடுவார்கள். காரணம், அவர்கள் ஊருக்குள் நுழையும் போது, வேண்டாதவர்கள் யாராவது பார்த்து வயிற்றெரிச்சல் பட்டு, அதன்மூலம் திருஷ்டி ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காகவே அப்படி செய்வதுண்டு. அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலுக்கு அந்த அளவு பவர்ஃபுல் சக்தி உண்டு. அது நம்முடைய உடலை சுட்டெறிக்கும் அமிலத்தை விட கொடுமையான சக்தி கொண்டது.

வயிற்றெரிச்சலாக மாறும் பொறாமை

வயிற்றெரிச்சலாக மாறும் பொறாமை

இன்றைக்கும் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், அடுத்தவர்களின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படுவதுண்டு. அந்த பொறாமையே நாளடைவில் அதிகரித்து வயிற்றெரிச்சல், கண்திருஷ்டி என்று மாறிவிடுவதுண்டு. அப்படி மாறும் போது, அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் ஏவல், பில்லி, சூனியம் போன்ற மாந்திரீக செயல்களை செய்து, மற்றவர்களின் முன்னேற்றத்தை தடுத்து கட்டுப்படுத்தி அவர்களை அழிப்பது தான். அதற்காக அவர்கள் எந்த எல்லை வரைக்கு செல்வதற்கும் பணத்தை செலவழிப்பதற்கும் தயாராக இருப்பார்கள்.

திருஷ்டி பரிகாரம் என்ன?

திருஷ்டி பரிகாரம் என்ன?

தான் எந்தவிதமான உடல் உழைப்பையும் செய்யாமல், அடுத்தவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படும் சிலர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள். அவர்களின் கொடூர கண்திருஷ்டியில் இருந்தும், வயிற்றெரிச்சலில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்வதற்கு ஒரு எளிய பரிகாரம் உண்டு. அதை நாம் சரியாக செய்து முடித்தால் எந்த வயிற்றெரிச்சலும் கண் திருஷ்டியும் நம்மை அணுகாது.

மற்றவர்களின் வயிற்றெரிச்சலும் கண் திருஷ்டியும் நம் மீது விழாமல் இருக்க, ஒரு வெள்ளைத் துணியில், காய்ந்த மிளகாய், பச்சை கற்பூரம், ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, கொஞ்சம் வெண்கடுகு, கூடவே முச்சந்தியில் இருக்கும் மண் என இவை அனைத்தும் எடுத்து வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். கட்டிய மூட்டையை, யாருக்கு திருஷ்டி பரிகாரம் செய்யவேண்டுமோ அவர்களின் தலையை இடவலமாக மூன்று முறையும் வலம் இடமாக மூன்று முறையும் சுற்றி, கை கால் என உடல் பாகங்களையும் வெள்ளை மூட்டையால் தடவி, பின்னர் மூன்று முறை தூ..தூ...தூ என துப்பிவிட்டு, உடனடியாக முச்சந்திக்கு வந்து அந்த மூட்டையை நல்லெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடவேண்டும்.

இரவில் செய்யும் பரிகாரம்

இரவில் செய்யும் பரிகாரம்

இந்த திருஷ்டிப் பரிகாரத்தை பகல் பொழுதில் செய்யக்கூடாது. இரவு வேளையில் அனைவரும் தூங்கிய பின்பு, அதுவும் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இப்படி எரிப்பதால் யாருக்கும் எந்தவிதமான கெடு பலன்களும் ஏற்படாது என்பதோடு நம்மீதும் எந்தவிதமான கண்திருஷ்டியோ மற்றவர்களின் வயிற்றெரிச்சலோ இருந்தாலும் நிச்சயம் அது பறந்தோடிவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Can We Do To Prevent The Kan Thirusti

In order to prevent the aging and eye pain of others, we must take a white cloth, dried chili, green camphor, stone salt, white mustard, and even a mound of a bundle and tie it in a white cloth. The bundle of those who have to make amends with their head should be placed three times around the head, three times to the right, and the other to rub the body parts of the hand and foot with the white bundle, and then spit it out three times immediately.
Story first published: Thursday, February 20, 2020, 15:29 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more