Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!
உலகின் சில நாடுகளில் இருக்கும் பாலியல் சட்டங்கள் கேட்கும்போதே நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறியதற்கு காரணம் நம்முடைய பலவீனமான சட்டங்களும், பாலியல் உறவு குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லாததே ஆகும். ஆனால் உலகின் சில நாடுகளில் இருப்பது போல வித்தியாசமான பாலியல் சட்டங்கள் நம் நாட்டில் இல்லை என்பது சற்றே ஆறுதலான ஒன்றாகும்.

உண்மைதான் உலகின் சில நாடுகளில் இருக்கும் பாலியல் சட்டங்கள் கேட்கும்போதே நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சில இடங்களில் இவை நகைச்சுவையானதாக தோன்றினாலும் பல இடங்களில் ஆபத்தானவையாகவே உள்ளது. எனவே இந்த இடங்களுக்கு நீங்கள் பயணிக்கிறீர்கள் என்றால் இவற்றை தெரிந்து வைத்துக்கொண்டு செல்வது நல்லது.

நிர்வாணமாக தூங்குவது சட்ட விரோதமானது
அமெரிக்காவின் மினசோட்டாவின் சில பகுதிகளில் நிர்வாணமாக தூங்குவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் நிர்வாணமாக தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தால் இந்த இடத்திற்கு செல்வதை தவிர்ப்பது உங்களுக்கு பாதுகாப்பானது.

பொதுஇடங்களில் விறைப்புத்தன்மை ஏற்படுவது சட்டவிரோதம்
பொது இடங்களில் இருக்கும்போது விறைப்புத்தன்மை ஏற்படுவதை யாருமே விரும்பமாட்டார்கள் இருப்பினும், சிலசமயங்களில் அவ்வாறு ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது, இது முற்றிலும் தற்செயலானது. அரிசோனா மற்றும் ஓஹியோவில், பொதுவெளியில் விறைப்புத்தன்மை ஏற்படுவது சட்டவிரோதமானது. இதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

துபாயில் பொதுவெளியில் முத்தமிடக்கூடாது
துபாயில் தம்பதிகள் பொதுவெளியில் கைகளைக் கோர்த்து நடக்கலாம், ஆனால் முத்தமிட்டால் அவர்கள் கைது செய்யப்படலாம். இது பொது ஒழுக்கத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது. துபாயில் முத்தமிடுதல், கட்டிப்பிடிப்பது, அரவணைப்பது சுற்றியுள்ளவர்களிடமிருந்து நிறைய விசித்திரமான பார்வைகளைக் கொண்டுவரும். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு பத்து நாட்கள் சிறைதண்டனை அளிக்கப்படும். ஒருவேளை நீங்கள் குடிபோதையில் முத்தமிட்டால், உங்கள் சிறைதண்டனை ஒரு வருடம் வரை போகலாம்.

ஆண் விலங்குடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது
விலங்குகளுடன் உடலுறவு வைத்துக்கொள்வதே அருவருப்பானது. ஆனால் இங்கு அதிலும் பாலின வேறுபாடு கடைபிடிக்கப்படுகிறது. லெபனானில் பெண் விலங்குடன் உடலுறவு கொள்வது ஏற்றுக்கொள்ளப்படுகிறது,
ஆனால் ஆண் விலங்குகளுடன் கூடாது. உலகின் மிகவும் வினோதமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே லெபனானில் விலங்குகளுடன் உடலுறவு கொள்வது பரவாயில்லை, ஒரே விதி விலங்குகள் பெண்களாக இருக்க வேண்டும்.

தாயின் கண் முன்னே மகளின் முதலிரவு
இதை கேட்கும்போதே நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் கொலம்பியாவில் இது மிகவும் சாதாரணமானது மற்றும் சட்டபூர்வமானது. மகள் திருமணம் செய்த இரவன்று தாய் அந்த அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். தாயின் கண் முன்னே எப்படி அவர்களால் உடலுறவு கொள்ள முடிகிறது என்று இதை படிக்கும் அனைவருக்குமே இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

துரோகம் செய்த மனைவியை கணவன் கொலை செய்யலாம்
கொலம்பியாவின் மற்றொரு பகுதியில், ஒரு ஆண் தனது மனைவி துரோகம் செய்ததைக் கண்டுபிடித்தால், அவரைக் கொலை செய்ய அனுமதிக்கப்படுவார், அது உணர்ச்சிவசப்பட்ட செயல் என்று அழைக்கப்படுகிறது.
வேறொருவருடன் பாலியல் செயலில் தனது மனைவியை தனிப்பட்ட முறையில் நேரடியாக பார்த்தால் மட்டுமே கணவர் கொல்ல முடியும். இந்த நாட்டில் துரோகம் பொறுத்துக்கொள்ளப்படாததால் இது குற்றமாக கருதப்படுவதில்லை.

சுயஇன்பம் செய்தால் 32 மாதங்கள் சிறை
இந்தோனேசியாவில், சுயஇன்பம் செய்யும்போது ஆண்கள் பிடிபட்ட பல வழக்குகள் உள்ளன, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுயஇன்பத்திற்கான தண்டனையாக மரண தண்டனை நிர்ணயிக்கலாம் என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன, இருப்பினும் தண்டனை 32 மாத சிறைத்தண்டனையாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு இந்த தண்டனை மிகவும் அதிகமானதுதான்.

மருத்துவர்கள் பெண்களின் பிறப்புறுப்பை பார்க்கக்கூடாது
மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் இந்த விசித்திரமான சட்டம் உள்ளது, இங்கு ஆண் மருத்துவர்கள் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பை நேரடியாகப் பார்க்கக்கூடாது. அவர்கள் கண்ணாடியையோ அல்லது பிறப்புறுப்பின் பிரதிபலிப்பையோதான் பார்க்க வேண்டும். அவர்கள் பெண் நோயாளிகளை சோதிக்கலாம், அவர்களுடன் உரையாடலாம் ஆனால் பெண்ணுருப்பைப் பார்க்கக்கூடாது.



Click it and Unblock the Notifications