For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா?

வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்டி இருக்கும் என்று உங்களுக்கு வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். இந்த வாரம் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில மாற்றங்கள்

|

வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்டி இருக்கும் என்று உங்களுக்கு வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். இந்த வாரம் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ரொம்ப டிஸ்டர்ப் ஆக உணர்வீர்கள் கரணம் உங்க உடம்பில் நோய் தாக்குதல்தான். உடம்பை மருத்துவரிடம் காட்டுங்க. வேலை செய்யும் இடத்தில கவனமா இருங்க இல்லாட்டி பிரச்சினையை ஏற்படுத்தி விடும். விட்டுக்கொடுத்து போங்க புத்திசாலித்தனமாக எதையும் எதிர்கொண்டால் வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை ஏற்படாமல் தப்பிக்கலாம். பிசினஸ் செய்பவர்களுக்கு இது சாதாரணமான வாரம். சூழ்நிலை புரிந்து செயல்படுங்க. வார மத்தியில சில மைனர் பிரச்சினைகள் வந்து போகும் அதை சால்வ் பண்ணுங்க. குடும்பத்தில் வாழ்க்கை துணையோடும் குழந்தைகளுடனும் உற்சாகமாக பொழுது போக்குங்கள். உங்க குடும்பத்தோடு பயணம் செய்ய இது ரொம்ப நல்ல நேரம். இந்த வாரம் உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும் கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு நல்லதும் கெட்டதும் சேர்ந்ததாக இருக்கும். வாரத்தின் முதல் சில நாட்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டிலும் உறவினர்களிடம் ஜாக்கிரதையாக பேசவும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஒத்திப்போடவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் காதலான வாரம் இது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உங்க கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். செமினார் அல்லது கான்பரன்ஸ் போகலாம் பயணத்திற்கு தயாராகுங்க. முக்கிய நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் அதன்மூலம் புதிய நட்புகள் உருவாகும். உங்க நிதி நிலைமை இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் மிகப்பெரிய செலவு ஏற்படும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் உங்களுக்கு பண விசயத்தில் நன்மை நடக்கும் அதே போல வார ஆரம்பத்தில் செலவும் கூடும். வார மத்தியில் நிதி நிலைமை சீராகி செலவை கட்டுக்குள் வைப்பீர்கள். பணவருமானத்திற்கு புது வழியை கண்டுபிடிப்பீர்கள். சிலருக்கு சொந்த தொழில் செய்யலாமா என்ற யோசனை வரும். அப்பா வழியிலோ, உறவினர்கள் வழியிலோ பணவருமானம் வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கடினமான வேலைக்கு நல்ல பலன் கிடைக்கும். கிரகங்களின் நகர்வு உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். பயணங்கள் சந்தோஷத்தை தரும். பிசினஸ் செய்பவர்கள் முக்கிய முடிவுகளையோ அதிக முதலீடுகளையோ செய்வதற்கு இது நல்ல நேரமல்ல. புது பிசினஸ் தொடங்கவும் இது நல்ல காலம் அல்ல. உங்க உடல்நிலையை பற்றி யோசிங்க. மனதளவில் நீங்க ரொம்ப வலிமையாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ் நாள் : செவ்வாய்

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்க குடும்ப உறுப்பினர்களுடன் நீங்க பிஸியாக பொழுதை கழிப்பீர்கள். உங்க குடும்ப உறுப்பினர்கள் ரொம்ப ஆதரவாக இருப்பார்கள். உங்க பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்க கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தெளிவுபடுத்துவீர்கள். திருமணமானவர்களுக்கு இது சந்தோஷமான வாரம். உங்க அன்பானவர் உங்க உறவுக்கு மதிப்பு கொடுப்பார். மாணவர்களுக்கு இது நல்ல வாரம். படிப்பில கவனம் அதிகமாகும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். தவறுகளில் இருந்து பாடம் படிங்க. நல்ல ரிசல்ட் கிடைக்கும். சந்தோஷமான செய்திகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நாள்: திங்கள் கிழமை

சிம்மம்

சிம்மம்

இந்த வாரம் காதலர்களுக்கு முக்கியமான வாரம். உங்க அன்பானவரிடம் நேர்மையாகவும், உண்மையாகவும் பெர்பெக்ட் ஆகவும் நடந்து கொள்வீர்கள். உங்க காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும். எதையும் அவசரமாக பேசி முடிவு செய்ய இது நல்ல நேரமில்லை. உங்க வாழ்க்கை துணையுடன் நீங்க சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். திருமண வாழ்க்கை முற்றிலும் சந்தோஷமாக மாறும். உங்க பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். உங்க நிதிப்பிரச்சினை தீரும் அளவிற்கு பொருளாதார நிலை உயர வாய்ப்பு உள்ளது. பண விசயத்தில் ஜாக்கிரதையாக இருங்க. அப்படி இருந்தால் மட்டுமே மிகப்பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கும். சாப்பாட்டு விசயத்தில கவனமாக இருங்க. உணவு நீர் சுகாதாரமானதாக இருந்தால்தான் உங்க ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை செய்யும் இடத்தில் கடினமான வேலைகள் வாட்டி வதைக்கும். உடம்பு சோர்வாகும் அளவிற்கு வேலை செய்வீர்கள். உங்க மூத்த அதிகாரிக்கு உங்கள் மேல் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிசினஸ் மேன்களுக்கு இந்த வாரம் லாபம் இரு மடங்காக கிடைக்கும். பொருளாதார நிலைமை வலிமையடையும். பணத்தை பற்றி கவலைப்படாமல் நிறைய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். உங்க குடும்பத்தோடு மகிழ்ச்சியாக அமைதியாக பொழுதை கழிப்பீர்கள். குடும்ப உறவுகள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக கழியும். உங்க பெற்றோர்களுக்கு சிறப்பு பரிசுகளை கொடுப்பீர்கள். இந்த வாரம் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் அதுவே உங்க மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 45

அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் நீங்க ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய வாரம். வேலை செய்யும் இடத்தில் எதையும் அவசரப்பட்டு எடுக்காதீங்க. பிசினஸ் மேனாக இருக்கும் பட்சத்தில் பார்ட்னர்களிடம் உறவை முறித்துக்கொள்ளாதீர்கள். இந்தவாரம் உங்களுடைய வேலையாட்களுக்கும் உங்களுக்கும் பேச்சுவார்த்தை சாதகமில்லாமல் போகும். உங்க உடல்நிலை உங்க வேலையை பாதிக்கும். உங்க கவனிங்க இல்லாட்டி அது மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும். உங்க வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்யாதீங்க. குடும்ப பிரச்சினையும் உங்க ஸ்டெர்ஸ்சை அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலையும் சாதகமாக இல்லை. எனவே கவனமாக இருக்கணும் ஒரே ஆறுதல் பொருளாதார சூழ்நிலைதான். உங்க கடன்களை அடைக்க நீங்க உங்க சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்டமான நாள்: வெள்ளிக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்க காதல் வாழ்க்கையில் சில சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். வார இறுதியில் நல்ல முடிவுகள் வரலாம். இருவருக்குமே நல்ல புரிதல் ஏற்படும். நீங்க திருமணமானவராக இருந்தால் உங்க குடும்பத்தினருக்கு எதிராக எந்த முடிவுகளையும் எடுக்காதீங்க. மூத்தவர்களின் சொல்பேச்சு கேளுங்க அவர்களுக்கு எதிராக நடக்கும் பட்சத்தில் குடும்பமே இரண்டாகி விட வாய்ப்பு உள்ளது. உங்க குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். அதுவே உங்களுக்கு மன உளைச்சலை தரும். நீங்க கடின உழைப்பை வெளிப்படுத்துங்க. உங்க நிலைமை வலுப்படும். வேலை செய்யும் இடத்தில் படைப்பாற்றலை அதிகரியுங்கள். நீங்க செய்யும் வேலை அலுவலகத்தில் மூத்த உயரதிகாரியின் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் திருப்தியடையச் செய்யும். உங்க உடம்புக்கு இந்த வாரம் சின்னச் சின்ன பிரச்சினைகள் வராமல் உங்க உடம்பு பிரச்சினையே உங்க மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்க வேலைகளை சந்தோஷமாக வெற்றிகரமாக முடிப்பீர்கள். பிசினஸ் அல்லது வேலை எதுவென்றாலும் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்மையும் தீமையும் கலந்த வாரம். நன்றாக படிங்க. உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உணவு விசயத்தில கவனமாக இருங்க. யோகா செய்ய ஆரம்பிங்க. மெடிடேசன், செய்ய ஆரம்பிங்க. நிதி நிலைமை இந்த வாரம் அற்புதமாக உள்ளது செலவு எதுவும் பெரிதாக இருக்காது. சேமிப்பு கூடும். உங்க குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் வேலை விசயத்தில் சில குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். வேலையை மாற்றலாமா என்று யோசிப்பீங்க. கோபத்தோடும், வெறுப்போடும் எந்த முடிவும் எடுக்காதீங்க அது தவறாகவே முடியும். உங்க தவறுகளை மனதார ஒத்துக்கொள்ளுங்கள் ஈகோ பிரச்சினை வேண்டாம். பிசினஸ் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். வம்பு வழக்கு பிரச்சினைகள் இந்தவாரம் முடிவுக்கு வரலாம். குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் உங்களை டென்சனாக்கும். சூழ்நிலை அறிந்து புரிந்து நடந்து கொள்ளுங்கள். உங்க உடல் ஆரோக்கியம் இந்த வாரம் ரொம்ப அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் நேர்மையாக வேலை செய்து தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள். புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்க பொருளாதார நிலைமை அதி அற்புதமாக உள்ளது. உங்களுக்கு தங்கமான வாய்ப்பு வருகிறது அதிக வருமானம் கிடைக்கும். நிதி திட்டமிடல்களில் கவனம் தேவை. வார மத்தியில் முக்கிய இடங்களுக்கு நீங்க பயணம் செல்வீர்கள். வேடிக்கை விளையாட்டு என பொழுது போகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்வீர்கள். உடம்புல அக்கறை செலுத்துங்க சின்ன சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 14

அதிர்ஷ்ட நாள்: வியாழக்கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு சில பிரச்சினைகள் எட்டிப்பார்கள். நீங்க அதிகமாக உழைத்து வேலை செய்தாலும் அதற்கேற்ப உங்களுக்கு மதிப்பு மரியாதை கிடைக்காமல் போவது உங்க மனதை பாதிக்கும். என்னடா இது இப்படி ஆயிருச்சே என்று நினைக்க வேண்டாம் காலம் நேரம் மாறும். உழைப்பு வீணாகாது தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்னு சொல்லியிருக்காங்களே அது கண்டிப்பா நடக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்க காதல் வாழ்க்கையில் பெரிய பிரச்சினை வரலாம் கவனம். நம்பிக்கையை கைவிட வேண்டாம். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் வேண்டாம் அது உங்களை பிரச்சினையில் தள்ளிவிடும். பொருளாதார சூழ்நிலையும் இந்த வாரம் நன்றாக இல்லை. நிதி விசயத்தில் கவனமாக இருங்க. பெரிய நிதி முதலீடுகளை செய்ய நினைக்க வேண்டாம். உங்க உடல்நிலையும் இந்த வாரம் சாதாரணமாகவே இருக்கும். கவனிக்காமல் விட்டால் பெரிய பிரச்சினையாகி விடும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 3rd November To 9th November

Check out the weekly horoscope for 3rd november to 9th november for all zodiac signs.
Desktop Bottom Promotion