For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வார ராசிபலன் (30.01.2022-05.02.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்..

இந்த வாரம், அதாவது ஜனவரி 30, 2022 முதல் பிப்ரவரி 05, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

|

Weekly Horoscope For 30 January 2022 To 05 February 2022 In Tamil

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது ஜனவரி 30, 2022 முதல் பிப்ரவரி 05, 2022 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு வேலை அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். சில குடும்பப் பொறுப்புகளும் அதிகரிக்கலாம். வேலையில் முன்னேறிச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு பிஸியாக இருக்கும். ஒருவேளை இந்த வாரம் உங்கள் வேலைத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்கள் அன்புக்குரியவர்களுடன் சில தரமான நேரத்தை செலவிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலை அல்லது வியாபாரத்தில் வெற்றி பெறலாம். வாரத்தின் நடுப்பகுதியில் நண்பர்களுடன் உல்லாசமாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். காதல் விஷயத்தில் இந்த வாரம் சற்று கடினமாகவே இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் உங்களிடம் கோபமாக இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அலட்சியம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் பரபரப்பாக இருக்கும். வீடு அல்லது பணியிடத்தில், உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். இந்த வாரம் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். உங்கள் நிதி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்யாதீர்கள். மோசமான உடல்நலம் காரணமாக நீங்கள் அசௌகரியமாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். ஒரே நேரத்தில் பல பொறுப்புகள் உங்கள் மீது வருவதால் நீங்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். மறுபுறம், சிலர் தவறான தகவல்களைக் கொடுத்து உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருங்கள். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்:25

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட எந்த தவறான முடிவும் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். மனதளவில் நீங்கள் நன்றாக உணர மாட்டீர்கள். உங்கள் நேரத்தின் பெரும்பகுதி பயனற்ற விஷயங்களில் வீணாகிவிடும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள், இல்லையெனில் நீங்கள் பின்னர் வருத்தப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு கலவையாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நாள்: புதன்

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், வேலையைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் நீங்கள் வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இந்த வாரம் நீங்கள் வேலையில் அலட்சியமாக இருக்க வேண்டாம். மறுபுறம், வர்த்தகர்கள் முதலீடு செய்ய நல்ல வாய்ப்பைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:27

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் நேர்மறை ஆற்றல், உற்சாகம் மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் நிறைந்தவராக இருப்பீர்கள். உங்கள் நிதி முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில், உங்களின் அனைத்து முக்கிய முடிவுகளையும் முழு நேர்மையுடனும் சிந்தனையுடனும் எடுப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் இணக்கம் ஏற்படும். உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிக பணம் செலவழிப்பீர்கள். பணம் சம்பந்தமான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல்நிலை சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:15

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! உங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகள் இந்த வாரம் மற்றவர்களை பாதிக்கலாம். நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். இந்த வாரம் நீங்கள் சில தீவிரமான சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. மேலும், எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், உங்கள் துணையின் கருத்தையும் அறிந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்:20

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சில சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள், குறிப்பாக உங்கள் உணவு மற்றும் பானங்களில் கவனம் செலுத்துங்கள், இல்லையெனில் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். பணம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், இந்த வாரத்தில் உங்கள் பிரச்சனை முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள் வரலாம். அதிக செலவு செய்வது உங்கள் பட்ஜெட்டை அழித்துவிடும். பண விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுங்கள். இந்த வாரம் நீங்கள் சில புதிய நபர்களை சந்திப்பீர்கள். உங்களின் இந்த சந்திப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:38

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்யும் மனநிலையில் இருப்பீர்கள். பயணம் செய்யும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், முதலில் முழுமையான தகவலைப் பெறுங்கள், இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்:13

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! உங்களின் சில தேவையற்ற கோரிக்கைகள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யலாம். எனவே அவர்களின் பார்வையில் இருந்தும் புரிந்து கொள்ள முயற்சித்தால் நன்றாக இருக்கும். கூடுதல் பணிச்சுமை உங்களை சோர்வாகவும் உதவியற்றதாகவும் உணர வைக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் இந்த வாரம் சவாலானதாக இருக்கும். பணப் பற்றாக்குறையால் உங்கள் மனக் கவலை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:29

அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 30 January 2022 To 05 February 2022 In Tamil

Check out the weekly horoscope for 30 january 2022 to 05 february 2022 in tamil for all zodiac signs. Read on.
Story first published: Sunday, January 30, 2022, 1:13 [IST]
Desktop Bottom Promotion