Latest Updates
-
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்... இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்..
வார ராசிபலன் (07.02.2021 முதல் 13.02.2021 வரை) - இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்தணும்…
இந்த வாரம், அதாவது பிப்ரவரி 07, 2021 முதல் பிப்ரவரி 13, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது பிப்ரவரி 07, 2021 முதல் பிப்ரவரி 13, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...


மேஷம்
இந்த காலகட்டத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறிய விஷயங்களுக்காக கோபப்படுவது வீட்டில் பெரிய பிரச்சனையை உண்டாக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. வெளியாட்களின் குறுக்கீட்டை தவிர்த்திடவும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சிறு சிறு செலவுகள் அதிகரிக்கும். போட்டி தேர்விற்கு தயாராகும் மணாவர்களுக்கு, இந்த வாரம் மிகவும் முக்கியமானது. வேலை முன்னணியில் நன்றாக இருக்கும். இந்த வாரம் சில நற்செய்திகளை பெற வாய்ப்புள்ளது. மாற்று வேலை பற்றி யோசிப்போர், நல்ல சலுகையைப் பெற்றிடலாம். இந்த வாரம் வணிகர்கள் நன்கு பயனடையலாம். பெற்றோரின் உடல்நிலை அதிக அக்கறை செலுத்த வேண்டிய வாரமிது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

ரிஷபம்
வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களது நீண்ட கால கடின உழைப்பின் பலனை பெற வாய்ப்புள்ளது. நிறுத்தப்பட்ட பதவி உயர்வு குறித்த நல்ல செய்தியைப் பெறலாம். சக ஊழியர்களுடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த நேரம் சில்லறை வர்த்தகர்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். சிறிய லாபம் ஈட்ட உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவு இருக்கும். இந்த காலகட்டத்தில் பணம் தொடர்பாக பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உங்கள் நிதி முடிவுகளை சிந்தனையுடன் எடுத்தால் நல்லது. உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் தசை தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம்
இந்த வாரம் வணிக மக்களுக்கு மன அழுத்தம் நிறைந்திருக்கும். வணிக கூட்டாளருடனான தகராறுகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளின் கடுமையான அணுகுமுறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில் கவனக்குறைவாக இருப்பதை தவிர்க்கவும். பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாத்தில் சில பெரிய செலவுகள் வரக்கூடும். வார இறுதியில், குழந்தைகளின் கல்விக்காக கொஞ்சம் பணம் செலவிடலாம். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் உங்கள் காதல் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இந்த நேரம் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: புதன்

கடகம்
இந்த வாரம் உங்களுக்கு இயல்பை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். தந்தை மற்றும் மூத்த சகோதரரின் ஆலோசனையின் படி நீங்கள் நடந்தால், நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் நிலைகள் நேர்மறையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரக்கூடும். இருப்பினும், எந்த முடிவை எடுத்தாலும், மிகவும் கவனமாக இருங்கள். காதல் திருமணம் செய்ய விரும்புவோர், இந்த வாரம் காதலைப் பற்றி உங்கள் குடும்பத்தினருடன் பேச சாதகமானது. நீங்கள் ஒரு பெரிய கடனை எடுத்திருந்தால், அதை திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கக்கூடும். முக்கிய முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கவும். உடல்நலம் என்று வரும்போது, மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

சிம்மம்
இந்த வாரம் பணி முன்னணியில் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். வளர்ச்சியின் புதிய வழிகள் உத்தியோகஸ்தர்களுக்கு திறக்கப்படும். சொந்த தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு நேரம் சாதகமானது. உங்கள் நிதி சிக்கல்கள் தீர்க்கப்படும். வீட்டில் தேவையற்ற விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கடுமையான அணுகுமுறை குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புண்படுத்தும். இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். வரவிருக்கும் நாட்களில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் வரவு செலவுத் திட்டத்தின்படி செலவிட அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசினால், உணவில் அலட்சியமாக இருப்பதால் பாதிப்பு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

கன்னி
வியாபாரிகள், வணிக விரிவாக்கத்திற்காக அதிக கடன் வாங்குவதை தவிர்த்திடவும். இல்லையெனில், வரும் நாட்களில் பெரும் சிக்கலில் சிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் நடத்தை அவ்வளவு நன்றாக இருக்காது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டில் பெரியவர்களின் ஆலோசனையைப் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில், இழப்பு உங்களுக்கு தான். பெரியவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். பெரிய செலவு செய்யும் எண்ணத்தை அடியோடு தவிர்த்திடவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில், கண் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

துலாம்
உத்தியோகஸ்தர்கள், இந்த வாரம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக அலுவலகத்தின் முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைத்திருங்கள். இந்த வாரம் அரசு வேலையில் இருப்போருக்கு சவால் நிறைந்த வாரமாக இருக்கும். உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். நேரமின்மை காரணமாக அதிக மன அழுத்தத்தை உணருவீர்கள். போக்குவரத்து தொடர்பான பணிபுரிவோர் பெரிய பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் பேச்சையும் நடத்தையையும் கவனித்துக் கொள்ளவும். வீண் வார்த்தைகளால் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வீட்டின் இளைய உறுப்பினர்களுடன் மென்மையாக நடந்து கொள்ள முயற்சிக்கவும். இந்த நேரத்தில் குழந்தைகளின் கல்வி குறித்த எந்தவொரு முக்கிய பிரச்சனையும் உங்களைத் தொந்தரவு செய்யலாம். பண வரவு நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், நேரத்திற்கு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

விருச்சிகம்
மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் புனிதமானதாக இருக்கும். உங்கள் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகிச் செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ஏதேனும் தேர்வு எழுதியிருந்தால், உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் பெறலாம். இந்த வாரம் வேலை முன்னணியில் சாதாரணமாக இருக்கும். வேலை அல்லது வியாபார பணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். கூட்டு வியாபாரம் செய்தால், இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும் மற்றும் பாதகமான சூழ்நிலைகளில் அவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமற்றவை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

தனுசு
இந்த காலகட்டத்தில், அதிகரிக்கும் மன அழுத்தத்தால் முக்கியமான பணிகளில் சரியான கவனம் செலுத்த முடியாது. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி முழு நேர்மறையுடன் செயல்படுவது நல்லது. இந்த வாம் உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது. அதை வீணாக்காதீர்கள். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களுடன் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் வேலை ஆபத்தில் ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் வணிகர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாழ்க்கைத் துணையுடன் உறவில் முன்னேற்றம் ஏற்படும். வாரத்தின் தொடக்கத்தில் மனதிற்கு பிடித்தவரை சந்திக்கலாம். ஆனால் நடுவில் அதிகப்படியான வேலை காரணமாக சந்திக்க முடியாமல் போகலாம். பணம் நல்ல நிலையில் இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இரத்த அழுத்த நோயாளிகள் அதிக மன அழுத்தத்தை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

மகரம்
இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் லாபம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பழைய முதலீட்டிலிருந்தும் நல்ல வருவாயைப் பெறலாம். கூட்டு தொழில் தொடங்குவதற்கு சாதகமான நேரமிது. வங்கியில் பணிபுரிவோர் பதவி உயர்வு பெறுவதற்கு வலுவான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில், அமைதியும், நிம்மதியும் இருக்கும். ஒருவருடன் ஒருவர் நேரம் செலவிட விரும்புவீர்கள். உறவு வலுப்பெறும். காதல் பற்றி வீட்டில் பேச இதுவே நல்ல நேரம். காதல் வாழ்க்கை புரிதல் அதிகரித்து, உறவு வலுப்பெறும். குடும்பத்தார் உங்களின் காதலை அங்கீகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: திங்கட்கிழமை

கும்பம்
இந்த வாரம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். இந்த வாரத்தில், பல பிரச்சனைகள் வரக்கூடும். இவற்றை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக பணம் தொடர்பான கவலை அதிகரிக்கும். நிதி பற்றாக்குறையால் பல திட்டங்கள் முழுமையடையாமல் போக வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக வலுவாக இருக்க, சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். இருப்பினும், தவறான அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டாம். வியாபாரிகள், இந்த வாரத்தில் எந்த புதிய வியாபாரத்தை செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் அதிக மன அழுத்தம் காரணமாக உங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம். உணவுப் பழக்கம் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். தவிர தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்தபடி முடிவுகள் கிடைக்காததால், இந்த காலகட்டத்தில் உங்கள் இயல்பில் எரிச்சலைக் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், மனதை குளிர்ச்சியாக வைத்திருங்கள், எல்லா கவலைகளையும் சிறிது நேரம் மறந்து, பிரச்சினைகளுக்கு நிம்மதியாக தீர்வு காண முயற்சிக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

மீனம்
இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டு வரக்கூடும். தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது. இந்த வாரம் வர்த்தகர்களுக்கு நல்ல லாபம் தரும். இழப்பை ஈடுசெய்ய இந்த வாரம் உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கக்கூடும். வணிகம் வேகமாக வளர வாய்ப்புள்ளது. உங்கள் சிறந்த செயல்திறன் உண்மையான மதிப்பை வெளிப்படுத்தும். பணத்தைப் பற்றி பேசினால், இந்த வாரம் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடனான உறவுகள் நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான கருத்து வேறுபாடு மறைந்து நெருக்கம் அதிகரிக்கும். இந்த வாரம் உடல்நலம் நன்றாக இருக்கும். அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். போதுமான ஓய்வு எடுக்கவில்லை என்றால், நாள்பட்ட நோயை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நாள்: புதன்



Click it and Unblock the Notifications











