Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 8 ராசிக்காரங்க நிதி நிலை உயரப்போகுது.. உங்க ராசிக்கு எப்படி?
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி திங்கட்கிழமை நள்ளிரவு 01:03 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்து, இந்த ராசியில் அக்டோபர் 02 ஆம் தேதி வரை சுக்கிரன் இருக்கப் போகிறது.
அழகு, காதல், படைப்பாற்றல் ஆகியவற்றை நிர்வகிக்கும் சுக்கிரன்/வெள்ளி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி திங்கட்கிழமை நள்ளிரவு 01:03 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைந்து, இந்த ராசியில் அக்டோபர் 02 ஆம் தேதி வரை சுக்கிரன் இருக்கப் போகிறது.

பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் துலாம் ராசிக்குள் நுழையும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இப்பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இக்காலத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் பிரகாசிப்பீர்கள். இக்காலத்தில் உங்களுடன் இருக்க அனைவரும் விரும்புவர். இக்கால கட்டத்தில் நீங்கள் எதையும் சிறப்பாக செய்வீர்கள். உங்களின் ஆர்வம் இக்காலத்தில் உங்களை வெற்றி மற்றும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல உதவும். நிதி ரீதியாக, உங்களுக்கு பண வரவு சிறப்பா இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. ஆகவே இக்காலத்தில் உடல்நலம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில், அது உங்களின் தினசரி உற்பத்தி திறனை பாதிக்கக்கூடும். இக்காலத்தில் எந்த போட்டியும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் கடன் வாங்குவதையோ அல்லது மோதலில் ஈடுபடுவதையோ தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான வேலையால் அனைவரும் உங்களை நேசிப்பார்கள். இக்கால கட்டத்தில் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சிறப்பான முடிவைப் பெறுவதற்கு உங்களின் எண்ணங்களை அலைப்பாயவோ, உறுதியற்ற தன்மையுடனோ இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். படைப்பாற்றலும், கலைத்திறனும் அதிகம் வெளிப்படும் மற்றும் இது சமூகத்தில் பாராட்டப்படும். சினிமா, இசை அல்லது கலை துறைகளில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் நல்ல லாபம் கிட்டும். காதலிப்பவர்களுக்கு நல்ல காலம். உங்கள் அன்புக்குரியவருடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். இருப்பினும் சேமிப்பைப் பராமரிக்க தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இக்காலம் ஒரு நல்ல காலமாக இருக்கும் மற்றும் இக்காலத்தில் வசதியையும், ஆடம்பரத்தையும் அனுபவிப்பீர்கள். உங்களுக்காக எந்த ஆடம்பரமான பொருள் அல்லது வாகனத்தையும் வாங்க நல்ல காலம். சொத்துக்களில் முதலீடு செய்ய சிறப்பான காலம். வீட்டை அலங்கரிக்கவும், சிறப்பாக மேம்படுத்தவும் பணத்தை சற்று அதிகம் செலவிடுவீர்கள். இக்காலத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவை உருவாக்குவீர்கள். முக்கியமாக இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இக்காலம் ஓரளவாகவே இருக்கும். உங்கள் உடன்பிறப்புகள் & பெற்றோருடன் நல்லுறவை பேணுவீர்கள். பணிபுரிபவர்கள், அலுவலகத்தில் சில மோதல்களை சந்திக்கலாம். வேலையில் பெயர் மற்றும் புகழ் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் இலக்குகளை அடைய உங்கள் தலைமை மற்றும் நிர்வாக திறமைகளை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், உங்கள் கோபம் மற்றும் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துங்கள். ஊடகம், எழுத்து, வெளியீடு, திரைப்படத் துறை அல்லது படைப்பாற்றல் ஆகியவற்றில் ஈடுபடும் நபர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இது இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல காலமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதே வேளை இந்த பயணம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் மற்றும் உங்கள் நிதியை மேம்படுத்த உதவும். இக்காலத்தில் யாருடனும் மென்மையாக பேசுங்கள். இக்காலத்தில் உங்கள் அதிர்ஷ்டம் காரணமாக, சிறப்பான வருவாயைப் பெறுவீர்கள். மொத்தத்தில், உங்களின் சிறப்பான யோசனைகளை செயல்படுத்த நல்ல நேரம் இது.

துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இந்த பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்கும். உங்களின் உள்ளுணர்வு மற்றும் நுண்ணறிவின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அறிவியல், மருத்துவம் அல்லது ஆராய்ச்சித் துறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிலும் நல்ல தீர்வு கிடைக்கும் அல்லது இந்தக் காலத்தில் புதிதாக எதையும் உருவாக்குவீர்கள். உங்கள் ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க விரும்புகிறீர்கள். நிதி ரீதியாக, உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களால் பணத்தை குவிக்கவோ அல்லது சேமிக்கவோ முடியாது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் வெளிநாட்டு ஆதாரங்கள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையைக் காணலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் தேவையற்ற செலவுகளைக் கொண்டிருக்கலாம் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உங்கள் பணத்தை செலவழிக்கலாம். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்களுக்கு நன்றாக இருந்தாலும், உங்கள் திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை உருவாக்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இந்த காலத்தில் உங்கள் வருமானம் மற்றும் லாபத்தை அடிப்படையில் இக்காலம் சாதகமாக இருக்கும். சேவைத் துறையில், மருத்துவத்தில் ஈடுபடுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இருப்பினும், இந்த காலகட்டத்தில் நீங்கள் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். எதிரிகள் மூலம் ஆதாயங்களும் உங்களுக்கு இருக்கும். உங்கள் போட்டி மனப்பான்மை நன்றாக இருக்கும், மேலும் போட்டியின் மூலமும் லாபம் பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையை அனுபவிக்க இது நல்ல காலம்.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இது சுக்கிரனின் சிறந்த பெயர்ச்சிகளில் ஒன்றாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன் இக்காலத்தில் வேலையில் சுப பலன்களைக் கொடுக்கப் போகிறார். உங்களின் படைப்பாற்றலால் மக்கள் உங்களை அங்கீகரிப்பார்கள். சட்டம், படைப்பாற்றல், டிசைனிங், உணவு அல்லது வெளியீடு அல்லது திரைப்படத் துறையில் ஈடுபடுபவர்கள், இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, இது ஒரு நல்ல காலகட்டமாக இருக்கும், மேலும் வெளிநாட்டு ஆதாரங்கள் மூலமாகவும் உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், எனவே எடுக்கும் முயற்சிகள் இந்த காலத்தில் பலனளிக்கும். உங்கள் குடும்பத்துடன் இந்த காலகட்டத்தில் ஏதேனும் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளலாம். புனித யாத்திரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு பயணம் செய்ய நல்ல நேரம். அலங்காரம், படைப்பாற்றல், வடிவமைப்பு, கிராபிக்ஸ் ஆகிய துறைகளில் ஈடுபடுபவர்கள், இந்த காலகட்டத்தில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள்.

மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார் எனவே இந்த காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். துன்பத்தின் மூலம் உயர்வு கொடுக்கலாம். ஆரம்பத்தில் கெட்ட முடிவுகளைப் பெற்றாலும், அந்த முடிவுகள் உங்களை வலிமையாக்கிய பின், நீங்கள் செய்த தவறை உணர தொடங்குவீர்கள். இதன் மூலம் வெற்றி மற்றும் வளர்ச்சியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் தரமான நேரத்தை செலவிட நல்ல காலம் இது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நல்ல மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்க உங்கள் பணத்தை செலவிடுவீர்கள். மிகவும் உறுதியாக இருங்கள் மற்றும் உங்கள் லாபத்தை அதிகரிக்க உங்கள் உள்ளுணர்வு திறனை பயன்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications











