Latest Updates
-
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...!
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் பணப் பிரச்சனையை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு 2021 மே மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு 11.44 மணிக்கு நுழைகிறார். இந்த ராசியில் ஜூன் மாதம் 22 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்கிறார்.
வேத ஜோதிடத்தில் ஒரு சுபகிரகமாக கருதப்படும் சுக்கிரன் ஒருவருக்கு அனைத்து வகையான சுகபோகங்களையும் வழங்கக்கூடியவராக நம்பப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமான இடத்தில் இருந்தால், அவர்களின் இல்லற வாழ்க்கை சந்தோஷமாகவும், அற்புதமாகவும் இருக்கும்.

இத்தகைய சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு 2021 மே மாதம் 28 ஆம் தேதி அன்று இரவு 11.44 மணிக்கு நுழைகிறார். இந்த ராசியில் ஜூன் மாதம் 22 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்கிறார். வேத ஜோதிடத்தின் படி, சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது மிதுனம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த காலத்தில் உங்களின் தைரியம் அதிகரிக்கும் மற்றும் பணியிடத்தில் பாராட்டைப் பெறவீர்கள். இக்காலத்தில் எல்லா முடிவுகளையும் புத்திசாலித்தனமாகவும் பொறுமையாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்பீர்கள். நிதி ரீதியாக நீங்கள் ஆடம்பர பொருட்களுக்கு சில தேவையற்ற செலவுகளைச் செய்யலாம். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும் வேலை மாற்றத்திற்கான சில வாய்ப்புக்களையும் பெறலாம். நடிப்பு, பாடல், கலை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சியைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க, சரியான தொடர்பில் இருங்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்கும். இருப்பினும் ஃபிட்டாக இருக்க, குளிர்ச்சியான பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்த்திடுங்கள். இல்லையெனில் நீங்கள் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செல்வத்தைப் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் மங்களகரமான செயல்பாடுகள் நடக்கலாம். கார், நிலம் அல்லது வீடு போன்ற அசையும் சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல காலம். தொழில் ரீதியாக நீங்கள் உங்கள் பணியிடத்தில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள் சிறிது லாபத்தைப் பெறுவார்கள். இந்த காலத்தில் உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வணிகர்கள் வணிகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் கல்வித்துறையில் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் சரியான துணையைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அலர்ஜி பிரச்சனைகளுக்கு வாய்ப்புள்ளதால், அதை உண்டாக்கும் சூழ்நிலைகளில் இருந்து விலகி இருங்கள்.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த காலகட்டத்தில் திடீர் கொள்முதல் மற்றும் செலவினங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் சிந்தித்து செலவிடுங்கள். இக்காலத்தில் உங்களின் மோசமான நடத்தை காரணமாக, சிறிது காலம் உங்கள் வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் சில தகராறுகள் ஏற்படலாம். இக்காலத்தில் தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். இது உங்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் உங்களின் கடின உழைப்பு இறுதியாக பலனளிக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். இக்காலத்தில் உங்களின் தோல்விகளை எல்லாம் கடந்து, நீண்ட ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலையைப் பற்றிய உங்கள் எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மாறிக்கொண்டே இருக்கும். தொழில் ரீதியாக இந்த காலம் உங்களுக்கு அற்புதமான முடிவுகளைத் தரும். வணிகம் தொடர்பான குறுகிய பயணங்கள் நன்மை பயக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் எந்த பயணத்தையும் திட்டமிடுகிறீர்களானால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த காலத்தில் நீங்கள் வாழ்வில் வெற்றியையும், புகழையும் பெறுவீர்கள். நீங்கள் எதை விரும்பினாலும் அது நிறைவேறும். இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் மனைவியுடனான உறவுகள் சிறந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கக்கூடும். நிதி ரீதியாக இந்த காலம் உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆடம்பரத்திற்காக செலவழிப்பீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தால் நீங்கள் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக, உங்கள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பங்குகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமானது. உறவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் குடும்பம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். மேலும் பல அழகான தருணங்களை உங்கள் காதலன்/காதலியுடன் செலவிடுவீர்கள். திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமானது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான சில பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். உங்களை ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சியையும், தியானத்தையும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் அன்புக்குரியவருடன் அல்லது துணையுடன் நல்ல உறவைப் பேணுவது கடினமாக இருக்கும். நிதி ரீதியாக, உங்களுக்கு சராசரியாக இருக்கும். இக்காலத்தில் வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இந்த நேரம் முற்போக்கானது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு சில மன கவலையும் இருக்கலாம். இக்காலத்தில் உங்கள் எதிரிகள் ரகசியமாக சதி செய்வார்கள். இந்த காலக்கட்டத்தில் உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் பேசும் போது சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். இல்லாவிட்டால் அவர்களுடனான உறவு மோசமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிக்கலை சந்திக்கலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சோதனையையும் செய்து கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். கூட்டாண்மை தொழில் செய்பவர்கள், லாபம் ஈட்டுவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். மேலும் அவர்கள் தங்கள் வணிகத்தின் விரிவாக்கம் குறித்தும் சிந்திக்கலாம். வேலைகளில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்தியை உணருவார்கள். காதலிப்பவர்கள், தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். திருமணமானவர்களுக்கு, திருமண வாழ்க்கை சாதகமாக இருக்கும். இருப்பினும், உங்கள் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நிதி ரீதியாக இந்த காலகட்டத்தில் நீங்கள் நல்ல லாபத்தை பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் யோகா மற்றும் தியானத்தில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் சிறு விஷயங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொறுமையாக இருக்க முயலுங்கள். நிதி ரீதியாக, சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதால் எந்த ஒரு கடனையும் வாங்காதீர்கள். தொழில் ரீதியாக, செய்யும் தொழிலையே தொடர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்தவிதமான புதிய செயலையும் மேற்கொள்ள வேண்டாம். உறவுகளைப் பொறுத்தவரை, தவறான புரிதல் உறவின் நன்மையை அழிக்கக்கூடும். ஆரோக்கிய முன்னணியில், சில வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே செரிமான அமைப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த பெயர்ச்சி காலத்தில் வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காண்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இது உங்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பு பங்குச் சந்தை பற்றி சரியான அறிவு வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள் குழந்தைகளிடம் இருந்து மகிழ்ச்சியைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கண்காணிக்கவும் மற்றும் ஆரோக்கியமான உணவை மட்டும் உண்ணவும். இல்லாவிட்டால், அஜீரணம் மற்றும் அழற்சி பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலகட்டத்தில் நிலம், கட்டிடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றிலிருந்து பலன் பெறுவீர்கள். தொழில் ரீதியாக, வேலை மற்றும் வணிகம் செய்பவர்கள், கடின உழைப்பின் பலனை நிச்சயமாக பெறுவீர்கள். வேலையில் மற்றவர்களுடன் பழகும் போது மிகவும் இராஜதந்திரமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வேலை தொடர்பான பயணம் மிகவும் பலனளிக்காது. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் கூடுதல் முயற்சி மற்றும் கடின உழைப்பைச் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி மற்றும் இருமல் மற்றும் வைரஸ் தொற்று பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே குளிர்ச்சியான உணவு பொருட்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications











