Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
சுக்கிரனால் மார்ச் 31 முதல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் காதல் மற்றும் அழகின் கிரகமாக கருதப்படும் சுக்கிரன் 2022 மார்ச் 31 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து பின் மீன ராசிக்கு செல்வார்.
நவகிரகங்களில் காதல் மற்றும் அழகின் கிரகமாக கருதப்படும் சுக்கிரன் 2022 மார்ச் 31 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து பின் மீன ராசிக்கு செல்வார். ஜோதிடத்தின் படி, குருவிற்கு அடுத்தப்படியாக சுப கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது.

பொதுவாக ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது அது அனைத்து ராசிகளிலும் நல்ல அல்லது கெட்ட விளைவுகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. புகழையும், செழிப்பையும் தரும் சுக்கிரன் சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்கு செல்லும் போது, அது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலனை வழங்குகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது லாபம் மற்றும் வருமான வீடு. இதனால் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பார்கள். இக்காலத்தில் பல ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் தொழிலில் வளர்ச்சியைக் காண்பார்கள். இக்காலத்தில் உறவுகள் நன்கு வலுவாக இருக்கும். இது உங்களுக்கு நிதி முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கூட்டு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்யும் பயணங்கள் பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் இருக்கும். உங்களின் கடின உழைப்பும், முயற்சியும் இக்காலத்தில் நல்ல பலனைத் தரும். அரசு தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக இது ஒரு நல்ல காலம். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களின் வருமானம் உயரும். சமூகத்தில் மதிப்பு உயரும். மாணவர்களுக்கு இக்காலம் மிகுந்த பலனைத் தரும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியை சேர்ந்த வியாபாரிகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடந்த கால பரிவர்த்தனைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். சிக்கிய பணம் திரும்ப பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகள் கிடைக்கும். கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் நிச்சயம் நற்பலன்களையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வேலை தொடர்பான விஷயங்களில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள். குறிப்பாக சொத்து வியாபாரிகள், ரியல் எஸ்டேட் முகவர்கள், டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பான பலனைத் தரும். நிதி நிலைமை மேம்படும். இக்காலத்தில் எந்த மாதிரி முதலீடு செய்தாலும் வெற்றியை பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications
