Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி சனி ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார்.
ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் தனித்தனி குணங்கள் உள்ளன மற்றும் அதன்படியே பலன்களையும் தருகின்றன. அதில் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் வாழ்க்கையில் அனைத்துவிதமான மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற்றிருப்பார்கள்.

அப்படிப்பட்ட சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி சனி ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார். கும்பத்தில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியார் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
கும்பம் செல்லும் சுக்கிரனால் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணப் பற்றாக்குறையே ஏற்படாது. வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

மிதுனம்
2023 ஜனவரியில் நிகழும் சுக்கிர பெயர்ச்சிக்கு பின் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. கும்ப ராசியில் சுக்கிரன் இருக்கும் வரை மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். துணையுடனான உறவில் பிணைப்பு அதிகரிக்கு. திருமணமாகாதவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை இந்த காலகட்டத்தில் சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் தங்களின் துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் பல புதிய வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றிருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொன்னான காலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புக்களையும் பெறுவார்கள். இந்த காலத்தில் சிந்தித்து முதலீடு செய்தால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
