Latest Updates
-
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்!
இந்த வைரலாக டீ வகைகளை பத்தி நீங்க கேள்விபடலானா... நீங்க டீ பிரியரே இல்லையாம் தெரியுமா?
தம் சாய் என்பது ஒரு உன்னதமான ஹைதராபாத் பால் டீ ஆகும், இது சமீபத்தில் அதன் நறுமண சுவை மற்றும் செழுமையான அமைப்புடன் இணையத்தில் வைரலாக பரவியது.
நம் அன்றாட வாழ்க்கையோடு தேநீர் இணைந்துள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் தேநீர் அல்லது காபியை தான் நம் கண்கள் தேடும். பெரும்பாலான மக்களுக்கு தேநீர் குடித்தால்தான் அன்றைய நாளே தொடங்கும் என்ற மனநிலையில் இருப்பார்கள். தேநீர் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. புதிதாக காய்ச்சப்பட்ட தேநீரின் சூடான கோப்பையில் உங்கள் மனதையும் ஆன்மாவையும் மூழ்கடித்து, அந்த சூடான கப் டீயை பார்க்கும்போது சிரிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு தேநீர் பிரியர்களாக இருக்க முடியாது.

தேநீரின் மீதான காதல் மிகவும் அலாதியானது. அதனால் பல மசாலாப் பொருட்களைச் சிறிது சேர்ப்பது கூட சுவையாக தோன்றும். சமீபகாலத்தில், இணையத்தில் பல தேநீர் வகைகள் பிரபலமாகி வருகிறது. உங்களை குடிக்க தூண்டும் வைரலான தேநீரை வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஹைதராபாத் தம் சாய்
தம் சாய் என்பது ஒரு உன்னதமான ஹைதராபாத் பால் டீ ஆகும், இது சமீபத்தில் அதன் நறுமண சுவை மற்றும் செழுமையான அமைப்புடன் இணையத்தில் வைரலாக பரவியது. ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதை ஒரு மஸ்லின் துணியால் மூடி, சர்க்கரை, இஞ்சி, தேயிலை இலைகள், இலவங்கப்பட்டை துண்டுகள், கிராம்பு மற்றும் நட்சத்திர சோம்பு ஆகியவற்றை துணியின் மேல் வைத்து, கிளாஸ் தண்ணீரில் சிறிது நனைக்க வேண்டும். பின்னர் இந்த கண்ணாடி ஒரு பிரஷர் குக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 1 விசில் விட்டு எடுத்தால் ஸ்மோக்கி எஃபெக்ட் கிடைக்கும். பிறகு மஸ்லின் துணியை பிழிந்து, அந்த கஷாயத்தை சூடான பாலில் கலந்து, பின்னர் தம் டீயாக சாப்பிடுவார்கள்.

ரூஹாஃப்சா சாய்
ரூஹாஃப்சா சாயை பருக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு கண்டிப்பாக வரும். ஆம், தேநீர் பிரியர்களுக்கு இது ஒரு அற்புதமான டீ. இது டெல்லியில் தயாரிக்கப்படும் பிரபலமான தேநீர். டெல்லி தேநீர் தயாரிப்பாளர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் ரூஹாஃப்சா தேநீர் தயாரிக்கிறார், அதில் அவர் ரோஹாஃப்சாவை வழக்கமான சாயில் ஊற்றி ஒரு ரோஸி மற்றும் இனிப்பு சுவை கொடுக்கிறார். டில்லியை மையமாகக் கொண்ட இந்த டீ ஸ்டால், நெட்டிசன்களுக்கு மோசமான ரசனையை ஏற்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.

ஓல்ட் மாங்க் டீ
இந்த வைரலான ஓல்ட் மாங்க் டீ, கோவாவின் சின்க்வெரிம் கடற்கரைக்கு அருகில் உள்ள தெருக்களில் இருந்து இந்தியா முழுவதும் பரவியது. அதில் இந்த டீ விற்பனையாளர் தந்தூரி ரம் டீயை தயாரித்து தந்தூரியில் குல்ஹாட்டை சூடாக்கி, பின்னர் சூடான குல்ஹாத்தில் சிறிது ஓல்ட் மாங்க் ரம் ஊற்றி அதைத் தொடர்ந்து சூடான மசாலா சாயை ஊற்றும்போது, இந்த தேநீரை நமக்கு ருசிக்க தோன்றும். ரம் பிரியர்களுக்கு இது மற்றொரு இணைவு, ஆனால் சாய் பிரியர்கள் இந்த இணைவை சிலர் விரும்பினார், சிலர் விரும்பவில்லை.

தேங்காய் தேநீர்
சிலர் தேங்காய் பால் அடிப்படையிலான தேநீருக்காக தேங்காய் டீயைத் தயாரிக்க தொடங்கினர். மற்றவர்கள் இதை மோசமான சேர்த்தல் என்று கற்பனை செய்தனர். ஆனால் இந்த பரிசோதனையானது வீட்டிலேயே புகை மற்றும் தந்தூரி விளைவை உருவாக்க எளிய ஆனால் நல்ல வழி. தேங்காய் டீ என்பது தேங்காய் ஓட்டில் தயாரிக்கப்படும் வழக்கமான தேநீர் ஆகும். ஓட்டை சூடாக்குவது எரிந்த விளைவை அளிக்கிறது, இது தேநீரின் சுவைக்கு ஒரு புகை தொடுதலை சேர்க்கிறது. குடிக்கும்போது தேநீரின் சுவையை நீங்களே அறிந்துகொள்ளலாம்.

ஃபுரூட் சாய்
இது மற்றொரு வித்தியாசமான டீ. இந்த தேநீர் குஜராத்தில் அதிகமாக பருகப்படுகிறது. இதன் சுவை மற்றும் நிறம் பார்ப்பவர் அனைவரையும் குடிக்க தூண்டும் வகையில் இருக்கும். வழக்கமான தூத் வாலி மசாலா சாயில் சப்போட்டா, வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் இஞ்சி போன்ற புதிய பழங்களைச் சேர்த்து ஃபுரூட் சாய் தயாரிக்கப்படுகிறது. பழங்களை சேர்த்து உருவாக்கிய இந்த ஆரோக்கியமான தேநீர் மக்களிடையே அதிக வரவேற்பை பெற வில்லை. இந்த டீயால் விற்பனையாளருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும், இணையம் மற்றும் சாய் பிரியர்கள் பெரிதாக வரவேற்க வில்லை.



Click it and Unblock the Notifications