For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்பட காரணமான சுவாரஸ்யமான புராணக்கதை என்ன தெரியுமா?

வரலட்சுமி விரதம் என்பது தென்னிந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான சடங்கு.

|

வரலட்சுமி விரதம் என்பது தென்னிந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான சடங்கு. அன்று செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வம் - லட்சுமி தேவிக்கு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.

VaraLakshmi Vratha Katha : Legend or Story of Varamahalakshmi Vratham

வரலட்சுமி விரதத்துடன் பல கதைகள் தொடர்புடையவையாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது சாருமதியின் கதை மற்றும் ஷ்யாமபாலவின் கதை. அந்த கதைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாருமதி மற்றும் வரமகாலட்சுமியின் கதை

சாருமதி மற்றும் வரமகாலட்சுமியின் கதை

ஸ்கந்த புராணத்தின் படி, ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் பெண்களுக்கு நன்மை செய்யும் ஒரு விரதம் பற்றி கேட்டார். அப்போது சிவபெருமான் வரலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார், இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ள விரதம் என்றும் கூறினார். வரமஹாலக்ஷ்மி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக, சிவபெருமான் சாருமதியின் கதையைக் கூறினார்.

சாருமதியின் கதை

சாருமதியின் கதை

கணவர் மற்றும் குடும்பத்தின் மீது சாருமதி கொண்டிருந்த பக்தியால் மகிழ்ச்சியடைந்த லக்ஷ்மி தேவி சாருமதியின் கனவில் தோன்றி வரலட்சுமி விரதத்தைச் செய்யும்படி கூறினார். அவரூக்கு விரத நடைமுறைகளை விளக்கினார். பக்தியில் சிறந்த சாருமதி தனது அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் அழைத்து வரலட்சுமி பூஜை செய்தார். பூஜை முடிந்தவுடன், பூஜையில் பங்கேற்ற அனைத்து மக்களும் செல்வம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

ஷ்யாமபால மற்றும் வரலட்சுமி விரதத்தின் கதை

ஷ்யாமபால மற்றும் வரலட்சுமி விரதத்தின் கதை

வரமஹாலக்ஷ்மி விரதத்துடன் தொடர்புடைய மற்றொரு பிரபலமான கதை ஷ்யாமபாலனின் கதை. பத்ரசிரவாஸ் மற்றும் சூரசந்திரிகா ராணிக்கு ஷ்யாமபால என்ற மகள் இருந்தாள். அவர் அண்டை தேசத்து ராஜ்யத்தின் இளவரசனை மணந்தார். ஒருமுறை ஷ்யாமபாலா தனது பெற்றோரின் அரண்மனையில் இருந்தபோது, அவளது தாய், ராணி சூரசந்திரிகா, ஒரு மூதாட்டியை விரட்டுவதைக் கண்டார். அந்த வயதான பெண்மணி வரலட்சுமி பூஜை செய்ய ராணியிடம் கேட்டார், ஆனால் பூஜைகள் குறித்து பிச்சைக்காரி அறிவுறுத்துவது ராணிக்கு பிடிக்கவில்லை, எனவே அவரை வெளியேற்றினார்.

ஷ்யாமபாலவின் முயற்சி

ஷ்யாமபாலவின் முயற்சி

கனிவான இதயமுள்ள ஷ்யாமபால மூதாட்டியை அழைத்து வரலட்சுமி விரதத்தின் மகத்துவத்தைக் கேட்டார். அவர் தன் நாட்டுக்குத் திரும்பியவுடன், அந்த மூதாட்டியின் வழிகாட்டுதலின்படி அந்த விரதத்தைச் செய்தாள். விரைவில் அவருடைய ராஜ்யம் செழிக்கத் தொடங்கியது மற்றும் அவரின் கணவர் நல்ல நிர்வாகத்திற்காக பாராட்டப்பட்டார். அதேசமயம் ஷ்யாமபாலின் பெற்றோர்கள் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது மற்றும் எஇராஜ்ஜியம் முழுவதும் துன்பம் நிறைந்திருந்தது. ராஜாவும் ராணியும் தனது செல்வத்தை இழந்தனர் மற்றும் மக்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தொடங்கினர்.

மாறுவேடத்தில் வந்த லக்ஷ்மி தேவி

மாறுவேடத்தில் வந்த லக்ஷ்மி தேவி

தன் பெற்றோரின் ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஷ்யாமபாலா தங்கப் பாத்திரங்களை அனுப்பினார், ஆனால் சூரசந்திரிகா ராணி அவற்றை பார்த்த தருணத்திலேயே அவை சாம்பலாகின. இந்தச் சம்பவத்தைக் கேட்டதும், ஷ்யாமபாலா தனது தாயார் அந்த மூதாட்டியை அரண்மனையிலிருந்து வெளியேற்றியதன் விளைவு என்பதை உணர்ந்தார். அந்த வயதான பெண் மாறுவேடத்தில் லட்சுமி தேவி என்பதை அவள் உணர்ந்தார். ஷ்யாமபால தனது தாயிடம் லக்ஷ்மி தேவியிடம் மன்னிப்பு கேட்டு வரலட்சுமி விரதத்தைச் செய்யும்படி கூறினார். சூரசந்திரிக்காவும் அவ்வாறு வரலக்ஷ்மி விரதத்தை கடைபிடிக்கத் தொடங்கியவுடன் இராஜ்ஜியத்தின் மீதிருந்த சாபம் விலகியது.

சித்ரநெமியின் சாபம்

சித்ரநெமியின் சாபம்

இந்து வேதங்களில் உள்ள மற்றொரு கதையின்படி, வரலட்சுமி விரதத்தின் தோற்றம் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே விளையாடும் பகடை விளையாட்டோடு தொடர்புடையது. அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி பெற்ற பார்வதி தேவி சிவபெருமானால் ஏமாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனால் அவர்கள் சிவபெருமானின் கணங்களில் ஒருவரான சித்ரநேமியை நடுவராக நியமிக்க முடிவு செய்தனர். சித்ரநேமி சிவபெருமானுக்கு ஆதரவாக முடிவுகளைக் கூறினார், இதனால் கோபமடைந்த பார்வதி தேவி அவரை தொழுநோயாளியாக மாறும்ம்படி சபித்தார். சித்ரநேமியை மன்னிக்கும்படி சிவன் பார்வதியிடம் கேட்டார், அவர் பக்தியுள்ள பெண்கள் செய்யும் வரலட்சுமி விரதத்தைப் பார்த்தால் சாபத்தைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார். வரலக்ஷ்மி விரதத்தின் பாரம்பரியம் அன்றிலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Varalakshmi Vratha Katha in Tamil : Story of Varamahalakshmi Vratham

Read to know the interesting story behind the Varamahalakshmi Vratham.
Desktop Bottom Promotion