Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்... ராகு தோஷம் உங்கள் வாழ்க்கையை எப்படி சிதைக்கும் தெரியுமா?
ஒருவரின் ராசிக்கு ராகு வந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஒருவேளை அவர்களின் ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது.
இந்திய மக்களிடையே ஜோதிடத்தின் அபார நம்பிக்கை உள்ளது. ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கிரகங்களும் அவை நமது ஜாதகத்தில் இருக்கும் நிலையை பொறுத்து நமது வாழ்க்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக மக்கள் சில கிரகங்களை நினைத்து பயப்படுவார்கள். அதில் முதல் இடத்தில் இருப்பது சனிபகவன்தான். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ராகு மற்றும் கேது ஆவர்.

பொதுவாக ஒருவரின் ராசிக்கு ராகு வந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஒருவேளை அவர்களின் ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் படும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. இந்த பதிவில் ராகு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகளை பார்க்கலாம்.

ராகுவின் கதை
ராகு ஒரு முக்கிய கிரகமாக கருதப்படுவதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த கதை பாற்கடலை கடைந்த போது தொடங்கியது. ஸ்வர்பானு என்ற அசுரன் தேவர்கள் போல வேடமிட்டு அமிர்தத்தை பருகிவிட்டான். ஆனால் அவன் யார் என்பதை சூரியனும், சந்திரனும் கண்டறிந்து விஷ்ணுவிடம் முறையிட்டார்கள். விஷ்ணு உடனே தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் அசுரனின் தலையை கொய்தார். அந்த அசுரன் தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.

எதிரியாக மாறுதல்
ஸ்வர்பானு ஏற்கனவே அவரை அழியாத அளவுக்கு அமிர்தத்தை உட்கொண்டதால், ராகு மற்றும் கேது ஆகியோருக்கும் மற்ற கடவுள்களுடன் பூஜையில் பங்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த தருணத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் அவர்களுக்கு பரம எதிரிகளாக மாறினர். கிரகணம் நிகழும் போதெல்லாம் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதன் மூலம் அவர்கள் பழிவாங்குகிறார்கள். சந்திர மற்றும் சூரிய கிரகணம் ராகு மற்றும் கேதுவுவால் நடப்பவை ஆகும்.

ஜோதிடத்தில் ராகு
வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது இருண்ட நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சந்திரனின் வடக்கு முனை ராகு என்றும் தெற்கு முனை கேது என்றும் அழைக்கப்படுகிறது. புராணங்களில் கூறியுள்ளபடி ராகு பாம்பை போல தலையும் மனித உடலையும் கொண்ட சக்திவாய்ந்த தீங்கு விளைவிக்கும் கிரகம் ஆகும். ஏனெனில் ஸ்வர்பானு தலை விஷ்ணுவால் துண்டிக்கப்பட்ட பிறகு அவரின் தாயாரால் சிகிச்சை அளிக்கப்பட்டு பாம்பின் உடல் வழங்கப்பட்டது.

ராகு மற்றும் கேது
ராகு பாம்பின் தலையையும், கேது பாம்பின் வாலையும் குறிக்கும். குறிப்பிட்ட தனி கிரகமாக இல்லையென்றாலும் ராகு ஒன்பது கிரகங்களில் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. அவருக்கு ஒரு கிரகத்தின் நிலையை நமது ரிஷிகள் மற்றும் முனிவர்கள் ஒதுக்கியுள்ளனர். புதன், சுக்ரன், சனி போன்றவை ராகுவின் நண்பர்கள் ஆவார், குறு நடுநிலையான கிரகம் ஆவார். செவ்வாய், சூரியன் மற்றும் சந்திரன் ராகுவின் எதிரிகள் ஆவர். இவர் சூரியனை விட சக்திவாய்ந்த கோளாக கருதப்படுகிறார்.

ராகுவின் குணநலன்கள்
ராகு அரசியல் மற்றும் தந்திரங்களுக்கான கிரகம் ஆகும். ராகு உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையை நிர்வகிக்கிறார். ராகு ஆண் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சாதகமான கிரகம். அரசியலில் உயர்வை அடைய விரும்புபவர்கள் ராகுவின் ஆசீர்வாதத்தை பெற வேண்டியது அவசியமாகும். ராகுவின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் தொலைதொடர்பு துறை, வெளிநாட்டு பயணம், மருத்துவம், புதிய சாதனைகள் போன்றவற்றை செய்வார்கள்.

ராகுவால் ஏற்படும் தீமைகள்
ராகுவால் ஆக்ரோஷமான குணமும், சூதாட்டம், திருட்டு போன்ற குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். சிறைகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள், மந்திரவாதிகள், விஷம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கிறார். கால்கள், சுவாச அமைப்பு, வயதாவது, வழுக்கை, தோல் நோய்கள், வலி, வீக்கங்கள், கோபம் போன்றவற்றையும் ஏற்படுத்துவார்.

ராகு வசிக்கும் காலம்
ராகு ஒவ்வொரு ராசியிலும் 18 மாதங்கள் தங்கியிருப்பார், பொதுவாக அனைத்து ராசிகளையும் சுற்றி முடிக்க ராகு 18 ஆண்டுகள் எடுத்துக்கொள்வார். கேது 7 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். ராகுவும் கேதுவும் எப்போதும் பிற்போக்கு இயக்கத்தில் பயணிக்கிறார்கள். ராகு இருக்கும் வீட்டில் அதிருப்தி, மனஅமைதியின்மை, பயம் போன்றவை இருக்கும்.

ராகு தோஷம்
ராகு வீட்டின் தென்மேற்கு திசையில் வசிக்கிறார், தென்மேற்கு திசைதான் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான திசையாகும். ராகு தோஷம் இருப்பவர்கள் எதிர்பாராத செலவுகள், நஷ்டம், கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும் குடும்பத்தில் குழப்பம், மனநிம்மதியின்மை, ஆரோக்கிய பிரச்சினைகள் போன்றவை ஏற்படும்.



Click it and Unblock the Notifications