For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணின் பிறப்புறுப்பிற்குள் வெங்காயம் மற்றும் பூண்டை வைத்து சோதித்த எகிப்தியர்கள்...எதற்கு தெரியுமா?

பண்டைய மக்களின் நாகரிகம் என்றாலே அவர்கள் நம்முடைய நாகரிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று நாம் நினைக்கிறோம்.

|

பண்டைய மக்களின் நாகரிகம் என்றாலே அவர்கள் நம்முடைய நாகரிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அவர்களின் வித்தியாசமான கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் சிலசமயம் ஆச்சரியத்தையம், பலசமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதற்காக அவர்களின் முற்றிலும் நாகரிகமற்றது என்று கூறிவிட முடியாது.

Unbelievable Ways of Life the Ancient Egyptians Practiced

நம்முடைய எண்ணங்கள் தவறானதென்று பல தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. நம்முடைய கீழடி அகழ்வாய்வு அதற்கு சிறந்த உதாரணமாகும். அந்த வரிசையில் பண்டைய எகிப்தியர்களின் வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை அங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் விளக்குகின்றன. பண்டைய எகிப்தியர்கள் எப்படிப்பட்ட நவீன வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவர்கள் விண்கற்களிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தனர்

அவர்கள் விண்கற்களிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தனர்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு பழங்கால கல்லறையில் உலோக மணிகளைக் கண்டனர். இந்த மணிகள் தனித்துவமானது, ஏனெனில் எகிப்தியர்கள் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரும்பை உருக்கத் தொடங்கினர். எனவே அவர்களுக்கு உலோக மணிகள் எப்படி கிடைத்தன? இதற்கான பதில் ஒரு ஹைரோகிளிப்பில் மறைக்கப்பட்டுள்ளது, அதாவது இதனை இரும்பு மற்றும் "வானத்திலிருந்து உலோகம்" என்று மொழிபெயர்க்கலாம். அந்த மணிகள் அநேகமாக விண்கல் பொருட்களால் ஆனவை.

பற்பசையை கண்டுபிடித்தனர்

பற்பசையை கண்டுபிடித்தனர்

கிமு 5000 முதல் எகிப்தியர்கள் பற்பசையை உற்பத்தி செய்கிறார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்களைக் கொண்ட பொடியை உற்பத்தி செய்தனர். ஆனால் இப்போதெல்லாம் அத்தகைய பேஸ்ட்டைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி நமக்குத் தெரியாது. நம்மால் யூகிக்க மட்டுமே முடியும்.

சிகிச்சையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தினர்

சிகிச்சையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தினர்

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிகாரப்பூர்வமாக 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், பண்டைய எகிப்தின் மருத்துவர்கள் பூஞ்சை காயங்களை குணப்படுத்த பூசப்பட்ட தட்டையான ரொட்டியைப் பயன்படுத்தினர். அத்தகைய மருந்துகள் நன்றாக வேலை செய்ததாக ஆய்வுகள் கூறுகிறது.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்கள கண்ணை மூடிக்கிட்டு தாராளமா நம்பலாம்... உங்களுக்காக உயிரையே கொடுப்பாங்க...!

உலகின் முதல் காவல்துறையை உருவாக்கினர்

உலகின் முதல் காவல்துறையை உருவாக்கினர்

உலகின் முதல் போலீஸ் படை மத்திய இராச்சிய காலத்தில் (கிமு 2050-1800 ஆண்டுகள்) உருவாக்கப்பட்டது. இதில் மிகவும் விசுவாசமான வீரர்கள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினர் இருந்தனர். எகிப்திய காவல்துறையினருடன் நாய்களும் குரங்குகளும் உடன் சென்றனர். அதிகாரிகள் கோவில்கள் மற்றும் நகர கட்டிடங்கள், உயர் வகுப்பு பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் இல்லங்களை குற்றவாளிகளிடமிருந்து பாதுகாத்தனர். அவர்கள் நவீன போலீஸ்காரர்களைப் போலவே இருந்தனர்.

முதலில் பீர் உற்பத்தி செய்தனர்

முதலில் பீர் உற்பத்தி செய்தனர்

பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 4-5 லிட்டர் பீர் கொடுக்கப்பட்டது என்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. எனவே பீரைக் காய்ச்சுவதுஅதிகளவில் இருந்தது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பானத்தை முதலில் தயாரித்தவர்களில் எகிப்தியர்களும் ஒருவர்.

மருத்துவர்கள் மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளை செய்தனர்

மருத்துவர்கள் மிகவும் கடினமான அறுவை சிகிச்சைகளை செய்தனர்

பண்டைய எகிப்தியர்கள் நவீன நடைமுறைகளுடன் ஒப்பிடக்கூடிய துல்லியமான மற்றும் தனித்துவமான மருத்துவ அறிவைக் கொண்டிருந்தனர். மம்மிகளை பரிசோதித்த விஞ்ஞானிகள் சில சவாலான செயல்பாடுகளின் தடயங்களைக் கண்டறிந்தனர்: இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் கூட நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

MOST READ: இரக்கமின்றி தன் 63 மனைவிகளையும் கொடூரமாக ஒரே இடத்தில் கொன்ற தென்னிந்திய ஆட்சியாளர் யார் தெரியுமா?

கதவு பூட்டுகளைப் பயன்படுத்தினர்

கதவு பூட்டுகளைப் பயன்படுத்தினர்

எகிப்து மற்றும் சீனாவில் கதவு பூட்டுகள் உருவாக்கப்பட்டன, இதுபோன்ற சாதனங்கள் தேவைப்பட்டது. அருகாமையில் அதிக மக்கள் வசிக்கையில், அண்டை வீட்டார் கதவை பூட்ட அதிக காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்திய மர பூட்டுகள் ஒரு எளிய பொறிமுறையைக் கொண்டிருந்தன.

கண்களுக்கு சிகிச்சை அளித்தனர்

கண்களுக்கு சிகிச்சை அளித்தனர்

எகிப்தியர்கள் மத்தியில் கண் தொற்று ஒரு பொதுவான நோயாகும். அவர்கள் பல்வேறு (மற்றும் சில நேரங்களில் விசித்திரமான) சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தினர்: சில நேரங்களில் அவர்கள் பாக்டீரிசைடு பெயிண்ட் மற்றும் மனித மூளையால் செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தினர். மனித மூளையை இரண்டு பாகங்களாக பிரித்து அதில் தேனை கலந்து ஒரு பகுதியை மாலையில் கண்ணில் தடவினர், மற்றொரு பகுதியை காலையில் தடவினர்.

MOST READ: முதல் காதலை ஏன் எப்போதும் மறக்க முடிவதில்லை? அதற்கு பின் இருக்கும் உளவியல் ரகசியங்கள் என்ன தெரியுமா?

கர்ப்ப பரிசோதனை

கர்ப்ப பரிசோதனை

பண்டைய எகிப்தில் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கண்டறிய பூண்டு அல்லது வெங்காயத்தை பயன்படுத்தினர். இரவில், பூண்டு அல்லது வெங்காயம் சோதனைக்கு உட்படுத்தப்படும் பெண்ணின் புணர்புழையின் அருகே வைக்கப்படும் அல்லது பெண்ணுறுப்பிற்கு உள்ளே தள்ளப்படும். காலையில், அந்த பெண்ணின் மூச்சில் வெங்காயம் அல்லது பூண்டின் வாசனை வந்தால், அவர் கர்ப்பமாக இல்லை என்று கண்டறியப்பட்டது, இல்லையென்றால், குழந்தை வாசனை மேல்நோக்கி செல்வதைத் தடுத்தது என்று நம்பப்பட்டது. இந்த சோதனையில் முடிவுகள் பெரும்பாலும் சரியாக வந்ததாக ஆய்வுகள் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unbelievable Ways of Life the Ancient Egyptians Practiced

Check out the unbelievable ways of life the ancient Egyptians practiced.
Desktop Bottom Promotion