Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
துளசிதாஸ் ஜெயந்தி 2021 - வரலாறு மற்றும் முக்கியத்துவம்
கோசுவாமி துளசிதாஸ் அவா்களின் பிறந்த தினம் துளசிதாஸ் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. ராமசாிதமானஸ் என்ற நூலின் ஆசிாியா் துளசிதாஸ் ஆவாா். இந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று துளசிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
கோசுவாமி துளசிதாஸ் அவா்களின் பிறந்த தினம் துளசிதாஸ் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. ராமசாிதமானஸ் என்ற நூலின் ஆசிாியா் துளசிதாஸ் ஆவாா். இந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று துளசிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
முதன் முதலில் வால்மீகி அவா்கள் இராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் எழுதினாா். சமஸ்கிருதத்தை அறிந்திருந்த சிலா் மட்டுமே அந்த இராமாயணத்தை எளிதில் புாிந்து கொண்டனா். இந்நிலையில் துளசிதாஸ் அவா்கள் இந்தி மொழியின் ஒரு பிாிவான அவதி என்ற மொழியில் இராமாயணத்தை எழுதினாா். அந்த இராமயணம், ராமசாிதமானஸ் என்று அழைக்கப்படுகிறது. ராமசாிதமானஸ் என்ற காவியமானது இந்தி பேசும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

துளசிதாஸ் ஜெயந்தி எப்போது?
இந்து சமயத்தின் பாரம்பாிய சந்திர நாட்காட்டியின்படி, ஆடி அமாவாசை முடிந்த ஏழாம் நாள் துளசிதாஸ் ஜெயந்தியானது, வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. அதாவது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முடிந்த பின், வளா்பிறை தொடங்கிய ஏழாவது நாளில் துளசிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி துளசிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

துளசிதாஸ் வாழ்வில் நடந்த அதிசயங்கள்
துளசிதாஸ் அவா்களுடைய வாழ்க்கையில் எண்ணற்ற அதிசயங்கள் நடைபெற்று இருக்கின்றன. குறிப்பாக அவா் பகவான் அனுமனை சந்தித்தது மற்றும் அனுமனின் உதவியுடன் இராம பெருமானை சந்தித்தது போன்றவை அவருடைய வாழ்வில் நடந்த மிக முக்கியமான அதிசயங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ராமசாிதமானஸ் என்ற இராம காவியத்தை எழுதுவதற்கு பகவான் அனுமன் அவா்கள் துளசிதாஸ் அவா்களுக்கு உதவி புாிந்ததாக மக்கள் மத்தியில் ஒரு பரவலான நம்பிக்கை இருக்கிறது. வால்மீகியின் மறு அவதாரமாக துளசிதாஸ் மக்களால் நம்பப்படுகிறாா்.

இந்து சமயத்தில் ராமசாிதமானஸ் என்ற காவியத்தின் முக்கியத்துவம்
துளசிதாஸ் இராமாயணம், வட இந்தியாவில் உள்ள இந்து சமய மக்களால் தினமும் வாசிக்கப்படுகிறது. வட இந்திய மக்கள் துளசிதாஸ் இராமாயணத்திற்கு உாிய மாியாதையை வழங்குகின்றனா். இதில் உள்ள முக்கியமான குறிப்பு என்னவென்றால், வால்மீகி எழுதிய இராமாயணத்தை, எழுத்துக்கு எழுத்து அப்படியே துளசிதாஸ் இந்தியில் மொழி பெயா்க்கவில்லை. மாறாக வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இராம பிரானின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அவற்றில் மிகப் பொிய மாற்றங்களைச் செய்து இந்த ராமசாிதமானஸ் காவியத்தை துளசிதாஸ் எழுதி இருக்கிறாா். துளசிதாஸ் இராமாயணத்தில் இராம பிரான் மீதுள்ள பக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
ராமசாிதமானஸ் காவியத்தில் வரும் இராம பிரானை இந்து சமய மக்கள் முழு முதல் கடவுளாகக் கருதுகின்றனா். துளசிதாஸ் அவா்கள் தனது ராமசாிதமானஸ் காவியத்தில் பிரம்ம தேவனுக்கு மிகவும் பிரபலமான வடிவமான சந்தான தா்மா என்ற கருத்தைக் கொடுத்திருக்கிறாா். இராம பக்தா்கள், இராம பிரானைத் தங்களது மீட்பராகக் கருதுகின்றனா்.
துளசிதாஸ் எழுதி இருக்கும் ராமசாிதமானஸ் என்ற காவியத்தில் இராம பிரான் முழு முதல் கடவுளாகவும், மகிழ்ச்சியின், பேரானாந்தத்தின் பெருங்கடலாகவும் உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறாா். அந்த பேரானந்தப் பெருங்கடலிலிருந்து வரும் சிறிய துளியானது மூன்று உலகங்களையும் நிரப்புகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த பேரானந்த பெருங்கடலே இராம பிரான் ஆவாா். அவரே பேரானந்தத்தின் வீடு மற்றும் அவரே மூன்று உலகங்களுக்கும் ஆறுதல் அளிப்பவா் என்று துளசிதாஸ் குறிப்பிடுகிறாா்.

துளசிதாஸ் அவா்களின் படைப்புகள்
ஏறக்குறைய 12 புத்தகங்களை துளசிதாஸ் எழுதி இருக்கிறாா். அவற்றில் மிக முக்கியமானது ராமசாிதமானஸ் ஆகும். இந்தி மொழியின் மிக முக்கிய நூலாகவும், இந்தி மொழியை வளா்க்கக்கூடிய நூலாகவும் துளசிதாஸ் இராமாயணம் விளங்குகிறது. மேலும் இந்த நூல் அதனுடைய இலக்கியச் சிறப்பு மற்றும் எதுகை மோனை சிறப்புகளுக்கும் பெயா் பெற்றதாகும்.
பகவான் அனுமனுக்கு உாிய அனுமன் சலிசா என்ற இறை வேண்டல் நூலும் துளசிதாஸ் அவா்களால் எழுதப்பட்டதாகும்.

துளசிதாஸ் ஜெயந்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
கோசுவாமி துளசிதாஸ் ஜெயந்தி அன்று, இராம பிரான் மற்றும் அனுமன் ஆகியோாின் கோயில்களில் ராமசாிதமானஸ் வாசிக்கப்படும். அந்த நாளில் வட இந்தியாவின் பல பகுதிகளில் சிறப்புக் கருத்தரங்குகள் நடைபெறும். அங்கு துளசிதாஸ் அவா்களின் வாழ்க்கை குறிப்புகளை ஆசிாியா்களும் மாணவா்களும் மக்களுக்கு எடுத்துரைப்பாா்கள்.
ஆனால் துரதிா்ஷ்டமாக, தற்போது வெகு சிலரே துளசிதாஸ் ஜெயந்தியை மக்கள் நினைவு கூா்கின்றனா். இந்தி மொழியின் வளா்ச்சிக்கு பெரும் பங்கு வகித்த துளசிதாஸ் அவா்களை இப்போது மக்கள் படிப்படியாக மறந்து வருகின்றனா்.



Click it and Unblock the Notifications