Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
பொங்கல் அன்று சூரியன்-சனி-புதன் ஒன்றிணைவதால், இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும்...
2022 ஜனவரி 14 ஆம் தேதி உருவாகும் திரிகிரக யோகத்தால் ஒருசில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது திரிகிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான குணங்களைக் கொண்டவை. இந்த கிரகங்கள் ஒன்றாக இணையும் போது ஒருசில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் வரும் மகர சங்கராந்தி நாளான பொங்கல் பண்டிகை அன்று, மகர ராசியில் சூரியன், சனி மற்றும் புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாக உள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகர ராசியில் உருவாகும் இந்த யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2022 ஜனவரி 14 ஆம் தேதி உருவாகும் திரிகிரக யோகத்தால் ஒருசில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது திரிகிரக யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திரிகிரக யோகம்
மகர சங்கராந்தி நாளான பொங்கல் பண்டிகை அன்று, சனி பகவான் ஆளும் மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகப் போகிறது. சனி ஏற்கனவே மகர ராசியில் பயணித்து வருகிறார். ஜனவரி 5 ஆம் தேதி புதனும் மகர ராசியை அடைந்துவிட்டார். இப்போது ஜனவரி 14 ஆம் தேதி அன்று சூரியனும் மகர ராசிக்கு இடம் பெயரவுள்ளார். மகர ராசியில் சனி, சூரியன் மற்றும் புதன் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த யோகம் சுபமானது அல்ல. ஏனெனில் சனியும், சூரியனும் எதிரிகள். இதனால் இந்த யோகத்தால் ஜோதிடத்தில் உள்ள 4 ராக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படலாம். அது என்னென்ன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலை காரணமாக, உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி சீர்குலையும். தந்தையுடனான உறவுகள் மோசமடையும். சுக்கிரன் இந்த ராசியின் அதிபதி. ஆனால் சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. ஆகவே இக்காலத்தில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடன் வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்
சூரியனும், சனியும் 8 ஆவது வீட்டில் இணைந்திருப்பதால், இந்த ராசிக்காரர்கள் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புக்களும் உண்டு. மிதுன ராசியின் அதிபதி புதன். புதனுக்கும் சனிக்கும் இடையே பகை உணர்வு உள்ளது. அதனால் வாழ்க்கைத்துணையுடன் விரிசல் வரலாம்.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்த மக்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேப்போல் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்து ஏற்படலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் மன உளைச்சல் வரலாம். இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பதில் சோர்வடையலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமான காலம் அல்ல. குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகும். பணம் சேர்ப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். கையில் உள்ள பணமும் குறையும். குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்திருக்கும். மேலும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
