Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம்...

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 28 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 28 April 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 28 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். வேலை தொடர்பான நீண்ட தூர பயணத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரபப்பான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். உங்களுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளால் வீட்டின் சூழ்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. கோபத்துடன் செயல்படாமல் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது. நிதி நிலை மேம்படும். உங்கள் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், பணம் தொடர்பான எந்த ஒரு வேலையையும் சிந்தனையுடன் செய்தால், விரைவில் உங்கள் நிதிச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் ஏற்றம் நிறைந்த நாளாகும். நீங்கள் விரும்பிய பலனைப் பெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்பினால், இன்று உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் செய்பவர்களின் வியாபாரம் அதிகரிக்கும். உங்கள் பணி வேகமெடுக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் விஷயத்தில் இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்கள் துணை உங்களுக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய முடியும். உங்கள் உறவில் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். இன்று நீங்கள் ஓய்வெடுக்க போதுமான நேரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மிதுனம்

மிதுனம்

குடும்ப உறுப்பினரின் உடல்நிலை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இது தவிர, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகளும் உங்கள் வேலையில் ஆதிக்கம் செலுத்தக்கூடும். இன்று நீங்கள் வேலை செய்ய மாட்டீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயத்தில் ஆபத்தான முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் ஏதேனும் நிதி பரிவர்த்தனை செய்யப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் சில பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது. இன்று உடல்நலம், மனக் கவலைகள் அதிகரிக்கும். உடல் ரீதியாகவும் பலவீனமாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்

கடகம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் பெரிய பொறுப்பு வழங்கப்படலாம். அதே போல் நீங்கள் பதவி உயர்வு பெறலாம். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். இப்படி கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள். இன்று வணிகர்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கவிருந்தால், உங்கள் வழியில் இருந்துவந்த பிரச்சனைகள் இன்று முடிவுக்கு வரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். புதிய உறுப்பினர் வீட்டிற்கு வரக்கூடும் நுழையலாம். இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

ஒருவருடனான உங்கள் உறவு மோசமடைந்துவிட்டால், நீங்கள் கோபத்துடன் அல்ல, நிதானமாக செயல்பட வேண்டும். உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் விஷயம் மோசமாகலாம். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். இது தவிர, பழைய கடனை அடைப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் உங்கள் பொறுப்புகளை முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பழைய நீதிமன்ற வழக்கு இன்று தொழிலதிபர்களைத் தொந்தரவு செய்யலாம். நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இன்று நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். திடீரென்று உங்கள் உடல்நிலை மோசமடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:05 மணி வரை

கன்னி

கன்னி

தொழிலதிபர்கள் இன்று ஒரு புதிய வணிகச் சலுகையைப் பெற்றால், நீங்கள் சில அனுபவமிக்க நபர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். இல்லையெனில் நீங்கள் சில திட்டத்தில் சிக்கி பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் தவறான நடத்தை உங்கள் பெயரைக் கெடுத்துவிடும். இதனுடன், இது உங்கள் முன்னேற்றத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில பதற்றம் சாத்தியமாகும். மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக உங்கள் துணையுடனான உங்கள் உறவு மோசமடையக்கூடும். ஆரோக்கியமாக இருக்க, அதிகப்படியான வறுத்த, பொரித்த மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

துலாம்

துலாம்

அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். இன்று உங்கள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் ஆதாயமடைவீர்கள். உங்களின் எந்த ஒரு கடினமான காரியமும் மிக எளிதாக முடிவடையும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இன்று நல்ல லாபம் பெறலாம். இன்று நீங்கள் ஒரு புதிய வணிக முன்மொழிவைப் பெறலாம். காதல் விஷயத்தில் இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் யாரையாவது முன்மொழிய திட்டமிட்டால், இன்று அதற்கு சாதகமான நாள். நீங்கள் நேர்மறையான பதிலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமணமானவர்களும் இன்று நல்ல பலன்களைப் பெறுவார்கள். உங்களிடையே அன்பு அதிகரிக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். திடீர் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நெஞ்சு வலி, எரிச்சல் உணர்வு, வாந்தி போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். அதே போல் உயர் அதிகாரிகளின் நடத்தை இன்று உங்களிடம் நன்றாக இருக்காது. இதனால் நீங்கள் அதிக மன அழுத்தத்தை உணருவீர்கள். பல எதிர்மறை எண்ணங்களும் இன்று மனதில் வரலாம். இருப்பினும், உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். ஆடை வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் முக்கிய விவாதம் நடத்தலாம். உங்கள் உடன்பிறந்தோர் திருமண வயதில் இருந்தால், இன்று அவர்களின் திருமண விவாதம் முன்னேறும். விரைவில் உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படலாம். பணத்தைப் பற்றி பேசினால், சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், விரைவில் உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், இன்று எந்த வித அலட்சியமும் செய்யாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

தனுசு

தனுசு

உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் தேவைகளைப் புறக்கணிக்கும் தவறுகளைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு உங்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். கிரகங்களின் எதிர்மறை விளைவுகளால், இன்று உங்கள் நடத்தை மற்றும் பேச்சில் கடுமை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் உங்களுக்கு தகராறு ஏற்படலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் விலையுயர்ந்த ஒன்றை வாங்க விரும்பினால், இன்று அதற்கு நல்ல நாள் அல்ல. அவசரப்படுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகத்தில் சோம்பலைக் கைவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இன்று தொழிலதிபர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:20 மணி வரை

மகரம்

மகரம்

அலுவலகத்தில் இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும், உங்களால் முடிந்ததைச் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இன்று நீங்கள் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன்களைப் பெறலாம். பால் வியாபாரிகள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல நினைத்தால், அதற்கு இதுவே நல்ல நேரம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டு வசதிகளுக்காக கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். இது தவிர, உங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும் சில பணம் செலவிடப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் அன்புக்குரியவரின் நடத்தையில் சில மாற்றங்களை உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எல்லா வெறுப்பையும் மறந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். இன்று உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 12:05 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று நீங்கள் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறலாம். வியாபாரிகள், தங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கலாம். உங்கள் பெயர் வலுவாவதுடன், உங்கள் கௌரவமும் கூடும். மறுபுறம், உத்தியோகஸ்தர்கள் சில பெரிய சாதனைகளைப் பெறலாம். சில காலமாக உங்கள் வீட்டின் சூழல் சரியாக இல்லை என்றால், இன்று உங்கள் உறவுகளை வலுப்படுத்த கடுமையாக முயற்சி செய்வீர்கள். இந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். காலநிலை மாற்றத்தால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வரலாம். வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓய்விலும் கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மீனம்

மீனம்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தால், இன்று உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போக்குவரத்து தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர் இன்று கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சட்டத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்கவும். இல்லையெனில் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று நீங்கள் உங்கள் துணையுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட முடியும். உங்களுக்கு மூச்சுத் திணறல் இருந்தால், கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, April 28, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion