Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
Today Rasi Palan 19 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு சாத்தியமாகும்...
இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று திடீர் பண வரவு இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். உங்கள் மனதில் ஏதேனும் இருந்தால், அதை உங்கள் துணையுடன் திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருப்பது உங்களிடையே தவறான புரிதலை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, பொருளாதார நிலையில் பெரிய ஏற்றம் ஏற்படும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். இன்று பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் உங்களது ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குறிப்பாக உங்கள் வேலை ஆடை தொடர்பானதாக இருந்தால், இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் நிறைந்திருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களின் அனைத்து வேலைகளும் திட்டப்படி முடிவடையும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். வாழ்க்கைத் துணை மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார். இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த இடத்தில் ஒரு நடைபயிற்சிக்கு செல்லலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, சில நாட்களாக நீங்கள் எதையாவது நினைத்து கவலைப்பட்டால், இன்று உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு வேலையில் சாதாரணமாக இருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, புதிதாக ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இன்றைய நாள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:35 மணி முதல் மாலை 7 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. பணம் சம்பந்தமான எந்த வேலையையும் அவசர அவசரமாகச் செய்தால் பெரிய நஷ்டம் ஏற்படும். தொழிலதிபர்கள் இன்று பெரும் சவாலை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களாக ஒரு பணியை முடிக்க கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால், இன்று சில காரணங்களால் அது பாதியில் சிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சோம்பலை விட்டுவிட்டு முக்கியப் பணிகளில் கவனம் தேவை. வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்களின் அனைத்து பணிகளும் எளிதாக முடிவடையும். அலுவலகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் பதவி உயர்வு குறித்து மேலதிகாரி முடிவெடுக்க வாய்ப்புள்ளது. வணிகர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். இருப்பினும், உங்கள் எல்லா முடிவுகளையும் நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் சில புதிய உத்திகளை உருவாக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் தங்கள் அனுபவங்களால் நல்ல பலன்களைப் பெறலாம். இன்று உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதை திறக்கும். வணிகர்கள் பெரிய பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் துணையின் கவனக்குறைவால் இன்று நீங்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்
விருச்சிகக ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் தங்கள் அனுபவங்களால் நல்ல பலன்களைப் பெறலாம். இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய பாதை திறக்கும். வணிகர்கள் பெரிய பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்கள் துணையின் கவனக்குறைவால் இன்று நீங்கள் இழப்பைச் சந்திக்க நேரிடும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உடல்நலம் தொடர்பான திடீர் பிரச்சனைகள் வரலாம். உடல்நலக்குறைவு காரணமாக, உங்கள் அன்றாட திட்டங்களில் தடைகள் ஏற்படலாம். உங்கள் முக்கியமான வேலை நீண்ட காலமாக தடைபட்டிருந்தால், அதை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில், உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படலாம். வணிகர்கள் இன்று கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டாலும் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாது. உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12:45 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, அலுவலகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஏதாவது முக்கியமான பணியை ஒப்படைத்திருந்தால், அதைப் பற்றி பிறரிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் அதிக முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். விரைவில் உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயத்தில் இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், நீங்கள் வெளி உணவைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 44
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:20 மணி வரை

கும்பம்
வரைகும்ப ராசிக்காரர்களே, கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் நிலவும் மந்தநிலை உங்கள் கவலையை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று பணம் சம்பந்தமான எந்த வேலையும் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். ஒருவர் மீது ஒருவர் உணர்வு ரீதியான பற்று அதிகரிக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், சில வழிபாட்டு தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய செலவு செய்ய நினைத்தால், அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று அலுவலகத்தில் அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம். அது உங்கள் முன்னேற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு வேலை சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை



Click it and Unblock the Notifications