Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களை ஒரு சட்ட விவகாரம் தொந்தரவு செய்யலாம்...

இன்று ரிபஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 14 June 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிபஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். அதிகாலையில் தொலைதூரத்தில் இருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும். அதனால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். அவர்களின் உதவியால் உங்கள் வீட்டு வேலைகள் சுமூகமாக முடிவடையும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு மாற்றத்திற்கான காலம் நடக்கிறது. நீங்கள் ஒரு புதிய வேலையைப் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த நாளில் வெற்றியைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்கள் எந்த ஒரு முக்கிய வணிக முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் நீங்கள் அவசரமாக தவறான முடிவுகளை எடுக்கிறீர்கள். அதற்காக நீங்கள் தவறான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு வழக்கத்தை விட சிறந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் நிதானமாக இருப்பீர்கள். மேலும் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:25 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. சிறுநீர் தொடர்பான சில பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கலாம். இதைத் தவிர உங்களுக்கு கற்கள் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை சற்று அதிகரிக்கலாம். நீங்கள் மிகவும் அலட்சியமாக இருக்காமல் இருப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் குழுப்பணியில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஒன்றாக வேலை செய்ய முயற்சி செய்யவும். தொழிலதிபர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். இன்று வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில வறட்சிகள் காணப்படும். உங்கள் அன்புக்குரியவர்கள் மீது கோபமாக இருந்தால், அவர்களை அன்புடன் சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:05 மணி முதல் இரவு 9:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், உங்களுக்கு நல்ல திட்டமிடல் தேவை. உங்களின் நெருங்கியவர்களிடம் ஆலோசனை பெற்று, யோசித்து முடிவெடுத்து நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் நம்பிக்கையுடனும், நேர்மறையாகவும் இருப்பீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்களுக்காக சில முக்கியமான வாங்குதல்களையும் செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கையின் பழைய நல்ல நினைவு மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு காதுகள் தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்:31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்

கடகம்

வேலையின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் தொழிலதிபர்கள் நல்ல லாபம் அடைவார்கள். உங்கள் நிதி நிலை வலுப்பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆச்சரியம் அளிக்க நீங்கள் திட்டமிட்டால், அதற்கு சரியான நாள் இன்று. உங்கள் பணத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இன்று உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:05 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைய நாள் உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். நீங்கள் இன்று ஏமாற்றமடைவீர்கள். குறிப்பாக அலுவலகத்தில், யாரிடமும் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இதை நீங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும். மற்றவர்களை நம்ப வேண்டாம். ஆனால் உங்கள் முக்கியமான பணிகளை நீங்களே தீர்க்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் இன்று பாதகமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும். ஒரு சட்ட விவகாரம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயல்பட வேண்டும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் ஊதாரித்தனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் பெரியவர்களுடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், அதிகமாக கவலைப்படுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் மாலை 5:00 மணி வரை

கன்னி

கன்னி

ஹோட்டல் அல்லது உணவகங்களில் வேலை செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடலாம். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி குறித்த நேரத்தில் முடிவடையும். இன்று நீங்களே உங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவீர்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். உங்கள் வீட்டின் சூழலை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க, உங்கள் அன்புக்குரியவர்களுடன் உங்கள் நடத்தையை சரியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் உறவில் இடைவெளி அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சராசரி நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

துலாம்

துலாம்

எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில் தவறான பாதையில் செல்லலாம். உங்கள் மீதும் உங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். சரியான நேரம் வரும்போது உங்கள் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இன்று உங்களின் கடினமான வேலைகள் பலவற்றை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வணிகர்கள் கலவையான லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வானிலை மாற்றங்களால் உங்கள் உடல்நிலை மோசமடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்:14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 11:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு வியாபாரம் செய்ய திட்டமிட்டிருந்தால், இன்று உங்கள் திட்டத்தைம் தொடரலாம். விரைவில் நீங்கள் வெற்றியடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி உங்களைப் புகழ்வார். இருப்பினும், நீங்கள் இன்னும் மேலே செல்ல வேண்டியிருப்பதால், ஆணவத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் பெரிய அளவில் செலவு செய்யப் போகிறீர்கள் என்றால், புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். உங்களின் ஆடம்பரம் வரும் நாட்களில் உங்களைச் சிக்கலில் சிக்க வைக்கும். இது தவிர, சொத்து வாங்கும் அல்லது விற்கும் விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:10 மணி முதல் மாலை 3:50 மணி வரை

தனுசு

தனுசு

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு போன்றவற்றுக்குப் புதிய படிப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் அதற்குப் பொருத்தமானது. நீங்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பினால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதைப் பற்றி பீதியடைய தேவையில்லை. உங்கள் பிரச்சனை தற்காலிகமானது. தொழிலதிபர்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், நாளின் இரண்டாம் பாதியில், நீங்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். வீட்டின் சூழல் நன்றாக இருக்காது. உங்கள் குடும்பத்தில் சிலருடன் வாக்குவாதம் ஏற்படலாம். அன்புக்குரியவர்களின் தவறான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. பண விஷயத்தில் கலவையான பலன்களைத் தரும் நாள். நீங்கள் வயிறு தொடர்பான ஏதேனும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்:8

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:55 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மகரம்

மகரம்

அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரியுடன் நீங்கள் ஒரு முக்கியமான கலந்துரையாடலை நடத்தலாம் மற்றும் அவரிடமிருந்து ஒரு நல்ல ஆலோசனையைப் பெறலாம். இது வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி, உங்கள் துறை சார்ந்த ஒரு புகழ்பெற்ற நபரைச் சந்திக்கும் வாய்ப்பையும் இன்று நீங்கள் பெறலாம். வியாபாரிகளுக்கு இன்று எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு வெற்றியடையும். உங்கள் நிதி நிலை வலுவடையும். உங்கள் வியாபாரத்திலும் ஏற்றம் ஏற்படலாம். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். நீங்கள் வீட்டில் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்யலாம். இன்று அன்பானவர்களுடன் ஒரு அற்புதமான நாளாக இருக்கும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை

கும்பம்

கும்பம்

தொழில் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. இன்று நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். உங்கள் கூட்டாளருடனான உறவு மோசமடையலாம். உங்கள் கூட்டு வியாபாரம் முடிவுக்கு வரலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முழு ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். உங்கள் முதலாளியின் கண்கள் உங்கள் மீது இருக்கும். உங்களுக்கு ஒரு முக்கியமான பணி ஒதுக்கப்பட்டிருந்தால், தவறுகளைத் தவிர்க்கவும். இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்ககைத் துணையுடனான அனைத்து தவறான புரிதல்களும் நீங்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் நல்ல நேரத்தைச் செலவிடுவீர்கள். நீங்கள் உங்கள் மனதை ஒருவருக்கொருவர் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் இருந்தால், தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்

மீனம்

தன்னம்பிக்கையுடன் செய்யும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். விரைவில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். வணிகர்கள் நல்ல லாபம் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று நீங்கள் வீட்டின் இளைய உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் குழந்தை மூலம் சில மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் பழைய கடனைச் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், ஒற்றைத் தலைவலி நோயாளிகள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:26

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, June 14, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion